மும்பை: சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற (World Economic Forum - WEF 2026) மாநாட்டில் மகாராஷ்டிர மாநில அரசு பிரம்மாண்ட முதலீடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டில் மகாராஷ்டிர அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தங்களிலேயே மிகப்பெரிய தனிநபர் முதலீடு அதானி குழுமத்தினுடையது தான்.
டாவோஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக, அதானி குழுமத்தின் இயக்குனர் பிரணவ் அதானி மற்றும் தலைவர் கௌதம் அதானி முன்னிலையில் மகாராஷ்டிர அரசுடன் பிரம்மாண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின. அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் ₹6 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக உறுதியளித்துள்ளது.
உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் மகாராஷ்டிர மாநில அரசு ஒட்டுமொத்தமாக ₹30 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டுப் பங்களிப்புகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. மாநாட்டின் முதல் நாளிலேயே சுமார் ₹14.50 லட்சம் கோடி மதிப்பிலான 19 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின. இந்த பிரம்மாண்ட முதலீடுகள் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் சுமார் 15 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன. இது மாநிலத்தின் இளைஞர்களுக்குப் பெரும் பொருளாதார வளர்ச்சியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் மகாராஷ்டிர மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் மீது சர்வதேச நிறுவனங்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த ஒப்பந்தங்கள் காட்டுகின்றன. "விக்சித் மகாராஷ்டிரா 2047" தொலைநோக்குப் பார்வையின்படி, மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான மிக முக்கிய அடித்தளமாக டாவோஸ் 2026 மாநாடு அமைந்துள்ளது.ரூ.30 லட்சம் கோடி வரலாற்றுச் சாதனை முதலீடு
15 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
முதலீடுகள் ஈர்க்கப்பட்ட முக்கியத் துறைகள்:
1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு