கல்லூரி முழுக்க ஆர்எஸ்எஸ்.. ரொம்பவே தப்பா இருக்கு.. கரப்பான் பூச்சி கட்சி கையில் எடுக்கும் மேட்டர்

  • மும்பை: டெல்லி பல்கலைக்கழக தேர்தலில் மீண்டும் ஏபிவிபி வென்றிருந்தது. பாஜக மீது மக்கள் கோபத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், மீண்டும் வலதுசாரி இயக்கமான ஏபிவிபி வென்றது பேசுபொருள் ஆகியுள்ளது. இதற்கிடையே இந்த தேர்தலில் பண பலம் முக்கிய பங்கு வகிப்பதாக கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    சமீபத்தில் நடைபெற்ற டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த அமைப்புகள் களமிறங்கின. அதில் பாஜகவின் ஏபிவிபி எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் 4 முக்கிய பதவிகளில் 3 பதவிகளை கைப்பற்றியது. தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் பதவிகளை ஏபிவிபி வென்ற நிலையில், காங்கிரஸ் ஆதரவு பெற்ற என்எஸ்யுஐ 4 முக்கிய பதவிகளிலும் வெற்றி பெறவில்லை.

    Advertisement

    அபிஜீத் தீப்கே

    இதற்கிடையே இந்த தேர்தல் தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். இந்த சாதாரண கல்லூரி தேர்தலில் கூட பணத்தின் தாக்கம் அதிகம் இருந்ததாக சுட்டிக்காட்டிய தீப்கே, பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொகுசு கார்களில் வருவதாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும், "தேர்தல்களில் பணம்தான் வேலை செய்கிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில் பிரசாரம் செய்பவர்கள் கோடிக்கணக்கில் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் வருகிறார்கள். ஆடி, பிஎம்டபிள்யூ கார்களிலும் வருகிறார்கள். எனவே அங்கு பணம்தான் வேலை செய்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    ஒருதலைபட்சமான நடவடிக்கை

    பல்கலைக்கழகங்களில் தலைமை பதவியில் இருப்பவர்கள் ஒருபக்க சார்புடையவர்களாக இருப்பதாகவும் தீப்கே குற்றம்சாட்டியுள்ளார். மகாத்மா காந்தி அந்தராஷ்டிரிய ஹிந்தி விஸ்வவித்யாலயத்தின் துணைவேந்தர் குமு சர்மா ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் தொடர்புடையவர் என தான் கருதுவதாக கூறிய அவர், அவர் பொறுப்பேற்ற பிறகு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

    அவர் மேலும், "மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் ஏபிவிபி மாணவர்கள் போராட்டம் நடத்தும்போது அதே நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது மட்டும் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. பல்கலைக்கழகங்களை ஆர்எஸ்எஸ் கிளைகள் போல மாற்றும் முயற்சி நடக்கிறது" என்றார்.

    Advertisement

    மகாராஷ்டிரா அரசு தேர்வாணையம்

    மேலும், மகாராஷ்டிரா அரசு வேலைகளுக்கு நடத்தப்படும் எம்பிஎஸ்சி தேர்வுகள் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் பேப்பர் லீக் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராடி வரும் மாணவர்கள், எம்பிஎஸ்சி அமைப்பை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் கரப்பான் பூச்சி அமைப்பினரும் இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இணைவதாகவும், செப்டம்பர் 24க்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாகவும் கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    மாணவர் தற்கொலை

    மும்பை ஐஐடியில் மாணவர் தற்கொலை விவகாரம் குறித்தும் பேசிய தீப்கே, தேர்வில் மோசடி செய்ததாக பிடிபட்டதால் மட்டும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டதை நியாயப்படுத்த முடியாது என்றார். மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் ஆதரவு மிகவும் அவசியம் என்றும் கல்வி அமைப்பின் மீது மாணவர்கள் நம்பிக்கை இழப்பது கவலைக்குரியது என்றும் அவர் கூறினார்.

    Advertisement

    விதர்பா பகுதிகளில் தான் மேற்கொண்ட பயணத்தின்போது பழங்குடியின மாணவர்களுக்கான ஆசிரம பள்ளிகளை பார்வையிட்டதாக கூறிய தீப்கே, அங்கு அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என குற்றம்சாட்டினார். மாணவர்கள் தரையில் தூங்குவதாகவும், மாணவிகள் திறந்தவெளியில் குளிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், சிறுவர்களுக்கான கழிவறைகளில் கூரை மற்றும் கதவுகள் கூட இல்லை என்றும் அவர் கூறினார்.

    English Summary

    ABVP won three of the four key posts in the recent Delhi University Students’ Union election(டெல்லி பல்கலைக்கழக தேர்தல் முடிவுகள்): Delhi University Election latest news in tamil.