நண்பா நீ தான் காப்பாத்தணும்.. பிரதமர் மோடியிடம் சந்தித்து உதவி கேட்ட பள்ளி தோழன்.. உருக்கம்

  • டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பள்ளி கால தோழர் ஒருவர் அவரை சந்தித்து உதவி கோரியுள்ளார். மகாராஷ்டிராவில் தனது 2,810 சதுரமீட்டர் நிலத்தை 2 கட்டுமான நிறுவனங்கள் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாகவும், அதனை மீட்க உதவி செய்வதோடு, சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

    Advertisement

    மகாராஷ்டிராவின் மீரா ரோடு பகுதியில் வசித்து வருபர் அஸ்கரலி வோரா. இவருக்கு வயது 81. இவரும், பிரதமர் நரேந்திர மோடியும் குஜராத்தில் உள்ள வாத்நகர் பிஎன் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.

    Advertisement

    இந்நிலையில் தான் அஸ்கரலி வோரா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உதவி கோரியுள்ளார். நீண்ட வருடங்களுக்கு இவர்கள் 2 பேரும் கடந்த 8 ம் தேதி சந்தித்து பேசியுள்ளனர்.

    இந்த சமயத்தில் அஸ்கரலி வோரா, தன்னுடைய நிலத்தை மீட்டு தர வேண்டும். இதுதொடர்பாக சிபிஐ விசாரைண நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.அதாவது அஸ்கரலி வோரா மகாராஷ்டிராவின் பாயண்டர் கிழககில் உள்ள நவ்கார் பகுதியில் 2,810 சதுரமீட்டர் நிலத்தை கடந்த 1989ம் ஆண்டில் வாங்கினார்.

    ஆனால் இந்த நிலத்தை கடந்த 2011ம் ஆண்டில் 'ஸ்வாயம் பில்டர்ஸ்' மற்றும் 'செவன் லெவன் கன்ஸ்ட்ரக்‌ஷன்' என்ற 2 நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதில் செவன் லெவன் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தாவுடன் தொடர்புடையது. போலி ஆவணங்களை உருவாக்கி அவர்கள் நிலத்தை இரண்டாக பிரித்து ஆக்கிரமித்து உள்ளனர்.

    Advertisement

    இதுதொடர்பாக 2015ம் ஆண்டில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதற்கிடையே தான் நில அபகரிப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி தனது நிலத்தை பெற்று தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த சந்திப்பு பற்றி தற்போது அஸ்கரலி வோரா பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். இதுபற்றி அவர் ''பல ஆண்டுகளாக என்னுடைய நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை அபகரித்து வைத்துள்ளவர்களிடம் இருந்து அதனை எனக்கு பெற்று தர வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் உதவி கேட்டேன். இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். பிரதமர் மோடியிடம் இருந்து பாசிட்டிவ்வான பதில் கிடைத்துள்ளது. இதனால் விரைவில் எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.

    English Summary

    A school-day friend of Prime Minister Narendra Modi met him to seek assistance. He alleged that two construction companies had usurped his 2,810-square-meter plot of land in Maharashtra using forged documents, and requested help to recover the land as well as an order for a CBI inquiry into the incident.