Gold Mothak: விநாயகப் பெருமானே! இந்தாங்க தங்க கொழுக்கட்டை! தகதகனு மின்னுதே! விலை எவ்வளவு தெரியுமா?

  • மும்பை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இனிப்புக் கடையில் தங்க முலாம் பூசப்பட்ட இனிப்பு கொழுக்கட்டை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை வாடிக்கையாளர்கள் பார்த்து மகிழ்ந்தனர். காரணம், ஒரு கொழுக்கட்டை ஒரு கிலோ 27 ஆயிரம் ரூபாயாம்!

    Advertisement

    விநாயகர் சதுர்த்தி நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, அவல், பொரி, எள் உருண்டை உள்ளிட்டவைகளை வைத்து படையலிடப்பட்டது.

    Advertisement

    தமிழகத்தில் உள்ள பிள்ளையார்பட்டி உள்ளிட்ட கோயில்களில் விநாயகருக்கு மிகப் பெரிய கொழுக்கட்டை படைக்கப்பட்டது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ளது சாகர் ஸ்வீட்ஸ் எனும் இனிப்பு கடை. இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனை செய்யப்படும்.

    கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது தங்கம் விற்ற விலைக்கு ஒரு கிலோ ரூ 12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    அது போல் இந்த ஆண்டு தங்கம் விலை கூடிக் கொண்டே இருப்பதால் ஒரு கிலோ ரூ 27 ஆயிரம் என விலை வைக்கப்பட்டது. இந்த தங்க கொழுக்கட்டையை சிலர் வாங்கிச் செல்கிறார்கள். பலர் பார்த்து பரவசமடைகிறார்கள். அதிக விலை என்றாலும் டேஸ்ட் அட்டகாசம் என்ற ஒரு காரணத்துக்காக சிலர் வாங்கி செல்வதாக கூறுகிறார்கள்.

    இந்த கொழுக்கட்டையில் முந்திரி, பாதாம், பிஸ்தா, பன்னீர், குங்கமப்பூ, ஏலக்காய் தூள், நெய் உள்ளிட்ட பொருட்களை எல்லாம் சேர்த்து தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கொழுக்கட்டையில் 24 கேரட் தூய்மையான தரம் கொண்ட தங்க முலாம் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    தங்க முலாம் பூசப்பட்டு நிறைய இனிப்புகளை வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. எனவே இது Edible gold plated sweet என்பதால் இதை சாப்பிட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. சாப்பிட ரெடி, ஆனால் காசு என்கிறீர்களா, அதுவும் சரிதான்.

    இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், தங்கத்தை உண்பதால் எந்தவித பிரச்சனையும் ஏற்படுவதில்லை. அதே நேரம் இதனால் இன்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் சொல்ல இயலாது. சுத்தமான தங்கம் உடலுக்கு எந்த கெடுதலையும் விளைவிக்காது, ஆனால் அதனுடன் பிற மெட்டல்கள் கலக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அதனால் கேடு விளையும்.

    Advertisement

    விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையாருக்கு கொழுக்கட்டையைதான் படைக்க வேண்டும். அவருக்கு அதுதான் பிடிக்கும். அதனால்தான் அவர் மோதக பிரியர் என அழைக்கப்படுகிறார். பலர் 21 கொழுக்கட்டைகளை செய்து வைப்பது வழக்கம்.

    English Summary

    Gold plated Mothak is being sold in Nashik Sweet shop, maharastra ahead of Vinayagar Chathurthi.