ஹர்திக் பாண்டியாவின் கடைசி நிமிட நிபந்தனை.. பேக் அடித்த குஜராத் அணி.. பரிதாப நிலையில் மும்பை அணி!

  • மும்பை: ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்து கொள்ள குஜராத் அணி நிர்வாகம் முன்வந்த சூழலில், கடைசி நேரத்தில் அவர் வைத்த நிபந்தனை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் அணியின் கேப்டன்சி தனக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா நிபந்தனை வைத்ததால், குஜராத் அணி நிர்வாகம் பின் வாங்கியதாக தெரிகிறது.

    Advertisement

    மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் டிரேட் பேச்சுவார்த்தை நாளுக்கு நாள் சூடுபிடித்திருக்கிறது. மும்பை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலக முடிவு எடுத்திருக்கிறார். அதேபோல் ஹர்திக் பாண்டியாவுக்கு 3 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தும், அவரால் மும்பை அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.

    Advertisement

    இதனால் மும்பை அணி நிர்வாகமும் ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணியில் வைத்து கொள்ள விரும்பவில்லை. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுவார்த்தை ரகசியத்தை மும்பை அணி கசியவிட்டது. ஐபிஎல் வீரர்களுக்கு ரிடென்ஷன் பட்டியல் வெளியிட இன்னும் கெடு கூட விதிக்கப்படாத சூழலில், மும்பை அணி ஹர்திக் டிரேட் பேச்சை தொடங்கி இருக்கிறது.

    இதனால் மும்பை அணி அடையப் போகும் லாபத்தையும் அத்தனை அணிகளும் உணர்ந்து கொண்டுள்ளனர். ஹர்திக் பாண்டியாவை வாங்க பல்வேறு அணிகள் முயற்சித்தாலும், மும்பை அணியின் நிபந்தனை மற்றும் கேட்கும் வீரர்களின் பெயர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சிஎஸ்கே, ராஜஸ்தான் உள்ளிட்ட அத்தனை அணிகளும் பின் வாங்கிவிட்டன.

    Advertisement

    இந்த நிலையில் குஜராத் அணி ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. மும்பை அணி கேட்கும் வீரர்களையும் கொடுக்க குஜராத் அணி முன் வந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவை மீண்டும் குஜராத் அணிக்குள் கொண்டு வருவதற்கு அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் ஒரு நிபந்தனையை விதித்துள்ளார். தனக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். இதனால் குஜராத் அணி உடனடியாக பேக் அடித்துள்ளது. நேரடியாகவே கேப்டன்சி பேச்சை எடுத்தால், தங்களுக்கு இந்த டிரேட் ஒப்பந்தம் வேண்டாம் என்று கூறி இருக்கின்றனர்.

    Advertisement

    சுப்மன் கில் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்கிறார். இதனால் சுப்மன் கில்லின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதனால் கேப்டன்சியை வேறு எந்த வீரருக்கும் கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா கேகேஆர் அணிக்கு செல்லவே அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Hardik Pandya: Gujarat Titans Back Out of Hardik Pandya Trade Deal Over Captaincy Demand