அப்பாவை அம்மாதான்... 7 வயது சிறுவன் சொன்னதை கேட்டு ஆடிப்போன மும்பை போலீஸ்.. என்ன நடந்தது

  • மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில், தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.. இந்த தகராறு ஒரு உயிரையே காவு வாங்கிவிட்டது.. இதை போலீசாரிடம் அம்பலப்படுத்தியதே இந்த தம்பதியின் 7 வயது சிறுவனின் சாட்சியம்தான்.. சாதாரண குடும்ப தகராறில் தொடங்கிய இந்த சம்பவம், விசாரணை, வாக்குமூலம், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரை சென்ற பரபரப்பை தந்துள்ளது.. என்ன நடந்தது? யாரிந்த தம்பதி?

    Advertisement

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம், பத்லாபூர் கிழக்கு சிர்காவ் பகுதியை சேர்ந்தவர் ஹரி ராம் சிங்.. இவருக்கு 35 வயதாகிறது.. மாற்றுத்திறனாளியான இவரது மனைவி பெயர் சுனிதா தேவி.. 30 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    Advertisement

    ஆனால், சுனிதா தேவி மற்றும் அவரது கணவர் ஹரிராம் சிங் ஆகியோர் பீகார் மாநிலத்தின் ரோதாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர்களாம்.. திருமணத்துக்கு பிறகு மகாராஷ்டிரா வந்ததாக தெரிகிறது.

    மும்பை தம்பதி

    ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்றுள்ளது இவர்களது வாழ்க்கை.. ஆனால் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 19ம் தேதி சாயங்காலம், தன் கணவருக்கு தலையில் பலத்த காயமடைந்துவிட்டதாக கூறி, மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்..

    "கணவர் தடுமாறி கீழே விழுந்து விட்டார், அப்போது தலை குப்புற விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டுவிட்டது" என்று டாக்டர்களிடம் பதறியபடியே சொன்னார்.. ஆனால் டாக்டர்கள் அவரை பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அத்துடன் போலீசுக்கும் தகவல் தந்தனர்..

    Advertisement

    தடுமாறி கீழே விழுந்த கணவர்

    மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், சுனிதா தேவியின் பதற்றமான செயல்பாடுகளால் சந்தேகமடைந்தனர்.. சுனிதாவின் 7 மகன், உறைந்து போய் உட்கார்ந்திருந்தான்.. இதனால், சிறுவனை மட்டும் தனியாக அழைத்து போலீசார் விசாரித்தனர்.. அப்போது, அம்மா அப்பாவை அடித்து விட்டதாகவும், அப்பா ரத்த வெள்ளத்தில் விழுந்து விட்டதாகவும் சொன்னான்..

    அதற்குள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களும், கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தழும்புகளும் அம்பலமாகின.. இதற்கு பிறகுதான், சுனிதா தேவி மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். தனக்கு ஆசையாக கேட்ட புடவை வாங்கி தராததால்தான், குக்கர் மூடியில் தாக்கி கொன்றதாக ஒப்புக் கொண்டார்.

    Advertisement

    இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுனிதாவை, வரும் ஜூலை 29-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    குக்கர் மூடியால் தாக்கிய சுனிதா

    பட்லாபூர் கிழக்குக் காவல் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் நிதின் பாட்டீல் இந்த வழக்கு குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார். அதில், உயிரிழந்த ஹரி ராம் சிங், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கார்மெண்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.. கடந்த 9 ஆண்டுகளாக பத்லாபூர் சிர்காவ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

    சுனிதா, கணவரை குக்கர் மூடியால் அடித்துகொன்றதுமே, பயந்துபோன 7 வயது சிறுவன் மேல்மாடிக்கு ஓடிச் சென்று, வீட்டின் ஓனரிடம் விஷயத்தை சொல்லி உள்ளான்.. என் அப்பாவை காப்பாத்துங்க என்று கதறி அழுதுள்ளான்.. அதற்கு பிறகுதான் மாடியிலிருந்து வீட்டு ஓனர் இறங்கி வந்துள்ளார்.. அவரை பார்த்ததுமே சுனிதா, தன் கணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக சொல்லி உள்ளார்.. மருத்துவமனையில் கீழே விழுந்து இறந்துவிட்டதாக சொல்லி உள்ளார்.

    Advertisement

    7 வயது சிறுவன் தந்த வாக்குமூலம்

    இந்த சம்பவத்தில், சிறுவனிடம் வாக்குமூலம் பெற்றுள்ளோம்.. அதேபோல உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது.. அதற்கு பிறகு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டையும் பெற்றோம்.. கொடுமையான மூச்சுத்திணறல் காரணமாகவே ஹரிசிங் இறந்ததாக அறிக்கை வந்துள்ளது. இறுதியாகவே சுனிதா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார்.

    எனினும், வெறும் சேலை தகராறால் தான் இந்த கொலை நடந்ததா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் வலுவான காரணங்கள் உள்ளதா என்ற பல கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.. இப்போது தாய், தந்தை இல்லாத அந்த 7 வயது சிறுவனை, அவனது தாய்மாமனின் பராமரிப்பில் போலீசார் ஒப்படைத்துள்ளார்களாம்..!!!

    English Summary

    How Did a 7 Year Old Boy's Statement Shock Police? What Really Happened in Mumbai?