ஐஐடியில் சாதிய பாகுபாடு? பேராசிரியர் சூர்யநாராயணா டூல்லா சஸ்பெண்ட்! மாணவர் தற்கொலை எதிரொலி

  • மும்பை: மும்பை ஐஐடியில் தேர்வில் காப்பியடித்ததாக இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை கிளப்பியது. இதற்கிடையே மும்பை ஐஐடி பேராசிரியர் சூர்யநாராயணா டூல்லா தனது டீன் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது சில மோசமான சம்பவங்களும் கூட நடக்கிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது மும்பை ஐஐடியில் நடந்துள்ளது.

    Advertisement

    என்ன நடந்தது

    அங்கு இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர் சாஹில் வாகோடே என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டு இருந்தார். இதற்கிடையே மும்பை ஐஐடி பேராசிரியர் சூர்யநாராயணா டூல்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. மாணவர் உயிரிழந்து மூன்று நாட்களுக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மும்பை ஐஐடியில் எனர்ஜி சயின்ஸ் துறையை சேர்ந்த பேராசிரியர் டூல்லா, சாஹில் வாகோடே பங்கேற்ற மிட்-செமஸ்டர் தேர்வில் கண்காணிப்பாளராக இருந்துள்ளார். செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற தேர்வின்போது சாஹில் மொபைல் போனை பயன்படுத்தியதாகவும், சாட்ஜிபிடி மூலம் கேள்விகளுக்கான பதில்களை பெற முயன்றதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. தேர்வு முறைகேடு குறித்து பேராசிரியர் டூல்லா உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சாஹிலுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல் அவரை அனுப்பியதாக மும்பை ஐஐடி தெரிவித்திருந்தது.

    Advertisement

    தீவிர போராட்டம்

    சாஹில் செப்டம்பர் 18ஆம் தேதி உயிரிழந்ததை தொடர்ந்து, மும்பை ஐஐடி மாணவர்கள் மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவரின் மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கை தேவை, இது தொடர்பாக உரிய விசாரணை தேவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது. மேலும், மாணவர் நல அமைப்புகளில் சீர்திருத்தம் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

    நேற்று செப்டம்பர் 20ஆம் தேதி மாலை மாணவர்கள் சமர்ப்பித்த 18 அம்ச கோரிக்கை அறிக்கையில் மும்பை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் ஷிரீஷ் கேதாரே கையெழுத்திட்டார். இதில் பேராசிரியர் டூல்லாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக இடம்பெற்றிருந்தது. இந்த 18 அம்ச கோரிக்கைக்கு இயக்குநர் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, டூல்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    குழப்பம்

    பேராசிரியர் சூர்யநாராயணா டூல்லா எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதில் தெளிவான விளக்கம் இல்லை. சாதிய பாகுபாடுகள் காரணமாகவே தாங்கள் சஸ்பெண்ட் கோரிக்கையை முன்வைத்ததாகவும் அதற்கு ஏற்கப்பட்டுள்ளதாகவும் மாணவர் தரப்பு கூறுகிறது. ஆனால், போராட்டங்களை ஒடுக்கவே பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தரப்பு கூறுகிறது.

    குற்றச்சாட்டு

    இதற்கிடையே சாஹிலின் பெற்றோர் தங்கள் மகன் துன்புறுத்தலுக்கும் சாதி பாகுபாட்டுக்கும் ஆளானதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், தங்கள் மகனின் மரணத்துக்கு கல்லூரி நிர்வாகமே பொறுப்பு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பேராசிரியர் டூல்லாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. எனினும், அவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது விசாரணை மட்டுமே நடந்து வருகிறது.

    Advertisement

    மறுபுறம், மும்பை ஐஐடி பேராசிரியர்கள் டூல்லாவுக்கு ஆதரவாக நிற்கிறது. கண்காணிப்பாளராக தனது கடமையை செய்ததாகவும், தேர்வு முறைகேடு குறித்து அவர் உரிய விதிமுறைகளை பின்பற்றியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

    English Summary

    IIT Bombay professor Suryanarayana Dulla has been suspended three days after the death of second-year engineering student Sahil Wankhede(மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை): IIT Bombay latest news in tamil.