கைமாறிய ரூ.500 கோடி பணம்.. மகாராஷ்டிராவில் கவிழும் பாஜக அரசு? வெடித்த பெரிய மோதல்

  • மும்பை: மராட்டிய இடஒதுக்கீட்டு போராட்ட குழுவின் தலைவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் சமீபத்தில் வெளியிட்ட ஆடியோ ஒன்று அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. அதாவது ஷிண்டே சிவசேனா தரப்பு ரூ.500 கோடி வழங்கியதாக சொல்லி அவர் வெளியிட்ட ஆடியோ மகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் அளவுக்கு வார்த்தை மோதலை கிளப்பியுள்ளது.

    Advertisement

    மகாராஷ்டிராவில் இப்போது பட்னாவிஸ் தலைமையிலான என்டிஏ அரசு நடந்து வருகிறது. அங்கு சிவசேனாவின் ஷிண்டே துணை முதல்வராக இருக்கிறார். அங்கு இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மனோஜ் ஜராங்கே போராட்டம் நடத்தி வருகிறார். இதற்கிடையே மராட்டிய இடஒதுக்கீட்டு போராட்ட குழுவின் தலைவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் வெளியிட்ட ஆடியோ, பாஜக - சிவசேனா கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    பாஜக

    2024 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே மூலமாக ரூ.500 கோடி பணம் ஜராங்கேவுக்கு வழங்கப்பட்டதாக அந்த ஆடியோவில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கூறுவது போல இருக்கிறது. இந்த பண பரிமாற்றம் நடந்ததா என்பதற்கு இதுவரை உறுதியான ஆதாரம் வெளியாகவில்லை என்ற போதிலும் இந்த ஆடியோ மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

    தனக்கு யாரும் பணம் கொடுக்கவில்லை என்றும், தானும் யாரிடமும் பணம் கேட்கவில்லை என்று கூறியுள்ள ஜரங்கே, அதே நேரத்தில் ஆடியோ உண்மையானதுதான் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் தானோ தனது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவோ யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என்றும், யாரிடமிருந்தும் பணம் பெறவில்லை என்றும் மறுத்துள்ளார்.

    Advertisement
    ஜம்மு காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் பாதுகாக்கிறது! வார்த்தையை விட்ட பரூக் அப்துல்லா! பாஜக கடும் டென்ஷன்

    மோதல்

    இந்த விவகாரம் சிவசேனா- பாஜக தலைவர்களிடையே கடும் வார்த்தை மோதலை ஏற்படுத்தியுள்ளது. ஏக்நாத் ஷிண்டேவை அரசியல் ரீதியாக முடிவுக்குக் கொண்டுவர பாஜகவில் உள்ள சிலர் சதி செய்வதாக சிவசேனா மூத்த தலைவர் ராம்தாஸ் கடம் குற்றம்சாட்டினார். இதற்கு பாஜகவின் பிரசாத் லாட் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாஜக மீது ஆதாரமின்றி குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என்று லாட் கூறினார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு எதிராக ஜரங்கேவுக்கு ஆதரவளித்தவர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும் என்றும் பாஜக இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

    Advertisement

    ஆலோசனை

    இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த தலைவர்கள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, ஆடியோவை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த பட்னாவிஸ் உத்தரவிட்டார். மேலும், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆடியோ இப்போது லீக் ஆகியிருப்பது குறித்தும் சந்தேகம் கிளப்பினர்.

    இதற்கிடையே ஸ்ரீகாந்த் ஷிண்டே இந்த குற்றச்சாட்டிற்கு கிண்டலாக பதிலடி கொடுத்தார். ரூ.500 கோடி ரொக்க பணம் எப்படி இருக்கும் என்றும், அந்த பணத்தை கொண்டு செல்ல எத்தனை வாகனங்கள் தேவைப்படும் என்று கூட தனக்கு தெரியவில்லை என அவர் கூறினார்.

    Advertisement
    தனுஷுக்கு அர்ஜுன் மூர்த்தி ஆலோசகரா? பாஜக போட்ட கணக்கு.. உடனே ரஜினி சொன்ன அந்த வார்த்தை

    மகாராஷ்டிர அரசியல்

    இந்த விவகாரமே இப்போது மகாராஷ்டிர அரசியலில் பெரிய மோதலை ஏற்படுத்தியுள்ளது. 288 பேர் கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக 132 எம்எல்ஏக்களுடன் உள்ளது. சிவசேனாவுக்கு 57 எம்எல்ஏக்களும், என்சிபி கட்சிக்கு 41 எம்எல்ஏக்களும் உள்ளது. இது தவிர 5 சிறிய கட்சிகளின் ஆதரவும் என்டிஏ கூட்டணிக்கு உள்ளது.

    English Summary

    An audio clip released by Maratha reservation activist Manoj Jarange Patil has triggered a political controversy in Maharashtra(மகாராஷ்டிராவில் வெடிக்கும் அரசியல் குழப்பம்): Maharashtra politics crisis latest news in tamil.