மீண்டும் வீதியில் இறங்கிய கரப்பான் பூச்சி கட்சி.. ஒரே நாளில் இறங்கி வந்த அரசு! பாய்ந்த நடவடிக்கை

  • மும்பை: கரப்பான் பூச்சி கட்சியினர் நாடு முழுக்க உள்ள பள்ளிகளை சென்று ஆய்வு செய்து வரும் வருகிறார்கள். இதற்கிடையே மகாராஷ்டிராவில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த முதல்வர் கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டத்தை தொடர்ந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    Advertisement

    கடந்த மாதம் கரப்பான் பூச்சி கட்சியினர் டெல்லியில் மிக பெரிய போராட்டத்தை நடத்தினர். நீட் முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டத்திற்கு நாடு முழுக்க ஆதரவு கிடைத்தது. அந்த போராட்டத்தின் விளைவாகவே மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    Advertisement

    கரப்பான் பூச்சி கட்சி

    இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய மற்றொரு போராட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அதாவது மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் மதுபோதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் நீக்கப்பட்டுள்ளதாக கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். கரப்பான் பூச்சி கட்சியினரும் உள்ளூர் கிராம மக்களும் இணைந்து நடத்திய போராட்டத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

    பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவற்றை சரிசெய்ய வலியுறுத்தும் பிரச்சாரத்தை இப்போது கரப்பான் பூச்சி கட்சியினர் முன்னெடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்த போராட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அபிஜீத் தீப்கே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கிராம மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

    Advertisement

    பள்ளி முதல்வர் நீக்கம்

    மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்த அவர், இதை மிக பெரிய வெற்றி என குறிப்பிட்டார். பள்ளியின் தலைமை ஆசிரியர் குடிபோதையில் பள்ளிக்கு வருவதாக குற்றச்சாட்டு இருந்ததாகவும், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடத்தியதாகவும் தீப்கே தெரிவித்துள்ளார். மேலும், இந்த வெற்றியை மேற்கு வங்கத்தில் அரசு பள்ளியை ஆய்வு செய்த பின்னர் தாக்குதலில் உயிரிழந்த அப்துலின் தந்தைக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    போராட்டம் தொடரும்

    பள்ளியில் தலைமை ஆசிரியரை நீக்குவது மட்டுமின்றி, கூடுதலாக 2 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கரப்பான் பூச்சி கட்சியினரும் மற்றும் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மாணவர்களுக்கு தேவையான பெஞ்சுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இது தொடர்பாக அவர் மேலும், "பள்ளியின் தலைமை ஆசிரியர் குடிபோதையில் பள்ளிக்கு வருவதாக கூறப்பட்டது. அவரை நீக்க வேண்டும் என நாங்கள் போராடினோம். தற்போது அவர் நீக்கப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் இரண்டு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை கிராம மக்கள் போராட்டத்தை தொடர்வார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர் ஆய்வு

    கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அபிஜீத் தீப்கே மற்றும் கரப்பான் பூச்சி கட்சியினர் அரசு பள்ளிகளை ஆய்வு செய்யும் புதிய பிரசாரத்தை தொடங்கினர். அதன்படி கிராம மக்களும் கரப்பான் பூச்சி கட்சியினரும் தங்கள் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்வார்கள். அதன் ஒரு பகுதியாகவே மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான சாந்துக் பிம்ப்ரியில் உள்ள அரசு பள்ளியை அவர் ஆய்வு செய்தார்.

    Advertisement

    அப்போது பள்ளியில் குடிநீர் வசதி இல்லாதது, மாணவர்களுக்கு பெஞ்சுகள் இல்லாதது, கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய உள்ளூர் கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    A government school headmaster in Maharashtra's Hingoli district was reportedly removed after a protest(மகாராஷ்டிகாவில் வெடித்த கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்): Cockroach janata party Protest in Maharashtra latest news in tamil.