சாதித்த அம்பானி.. மீண்டும் ஆசியாவின் ‘நம்பர் ஒன்' கோடீஸ்வரரானார்.. சொத்து எவ்வளவு? அதானிக்கு 3ம் இடம்

  • மும்பை: ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலீடத்தை எட்டிப்பிடித்துள்ளார் நம் நாட்டின் முகேஷ் அம்பானி. இவர் சீனாவின் ஜாங் யிமிங்கை 2வது இடத்துக்கு தள்ளி இந்த சாதனையை படைத்துள்ளார். இவர்களின் சொத்து மதிப்பு என்ன? இந்த பட்டியலில் நம் நாட்டின் இன்னொரு முக்கிய தொழிலதிபர் கவுதம் அதானி எந்த இடத்தில் உள்ளார்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பணக்காரர்களின் பட்டியல்(Forbes Real Time Billionaires List) வெளியாகி உள்ளது. அதன்படி ஆசியாவிலேயே பெரும் பணக்காரராக மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

    Advertisement

    ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் தலைவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 88.3 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.8.36 லட்சம் கோடியாகும்.

    சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு கிடுகிடுவென அதிகரித்தன. இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் அறிமுகம் செய்ப்பட்டது. இதன் சந்தை மதிப்பு வேகமாக உச்சம் தொட்டது.

    இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு பெரிய அளவில் கைக்கொடுத்தது. இது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை ரூ.75,768 கோடிக்கு அதிகரித்தது. இதனால் மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.

    Advertisement

    முகேஷ் அம்பானி, சீனாவின் பைட்டேன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஜாங் யிமிங்கை பின்னுக்கு தள்ளியுள்ளார். இதனால் ஜாங் யிமிங் 2ம் இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 84 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.7.96 லட்சம் கோடியாகும். இந்த 'பைட்டேன்ஸ்' நிறுவனம் தான் டிக்டாக், வீடியோ எடிட் செயலியான 'கேப்கட்' உள்ளிட்டவற்றை மக்களுக்கு வழங்கி வருகிறது.

    இவர்கள் 2 பேருக்கும் அடுத்ததாக ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் நம் நாட்டின் தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளார். அதானி குழுமத்தின் தலைவராக உள்ள கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 79.1 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.7.49 லட்சம் கோடியாகும்.

    Advertisement

    இது ஆசிய பணக்காரர்களின் பட்டியலாகும். அதேபோல் உலக பணக்காரர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது. அதில் முதலிடத்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் லைவர் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 878.5 பில்லியன் டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.83.11 லட்சம் கோடியாகும்.

    2வது இடத்தில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 366 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.34.63 லட்சம் கோடி) உள்ளது. 3வது இடத்தில் கூகுளின் லாரி பேஜ் சொத்து மதிப்பு 232.3 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.21.98 லட்சம் கோடி)இருக்கிறது.

    Advertisement

    4வது இடத்தில் டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனம் மைக்கேல் டெல் 218.5 பில்லியன் டாலருடன் (இந்திய மதிப்பில் ரூ.20.67 லட்சம் கோடி)உள்ளார். 5வது இடத்தில் கூகுளின் செர்கெய் பினரின் ரூ.213.9 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.20.24 லட்சம் கோடி) வைத்துள்ளார். 6வது இடத்தில் மெட்டா சிஇஓ மார்க் ஜுகர்பெர்க் உள்ளார்.அவரது சொத்து மதிப்பு ரூ.208.6 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.19.74 லட்சம் கோடி)உள்ளது.

    மேலும், 175.3 பில்லியன் டாலருடன் ( ரூ.16.59 லட்சம் கோடி) 7 வது இடத்தில் நிவிடா தலைவர் ஜென்சன் ஹூயாங்கும், 159.7 பில்லியன் (ரூ.15.11 லட்சம் கோடியுடன் ஆரக்கள் இணை நிறுவனர் லாரி எல்லிசன் 8வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Mukesh Ambani, from our country, has once again reclaimed a top spot among Asia's wealthiest individuals. He has moved ahead, pushing China's Zhang Yiming into second place. Let's take a look at their net worth and see where another prominent Indian businessman, Gautam Adani, stands on this list.