நடிகர் இம்ரான் கான் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டாம்.. இடைக்கால தடை போட்ட மும்பை ஹைகோர்ட்

  • மும்பை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமெரிக்க குடியுரிமை பெற்ற நடிகர் இம்ரான் கான் கடந்த 10ம் தேதி மும்பையில் போராட்டம் நடத்தி கைதானர். இதையடுத்து அக்டோபர் 28ம் தேதிக்குள்(நாளை) நாட்டை விட்டு வெளியேற நடிகர் இம்ரான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பபப்பட்ட நிலையில் அதற்கு நவம்பர் 2ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து இன்று மும்பை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனால் நடிகர் இம்ரான் கான் நவம்பர் 2 வரை இந்தியாவிலேயே இருக்கலாம்.

    Advertisement

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி நாடு முழுவதும் கடந்த 10ம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். மும்பையில் கிராந்தி மைதானத்தில் நடந்த போராட்டத்தில் நடிகர் இம்ரான் கான் தனது காதலியடன் பங்கேற்றார்.

    Advertisement

    தடை மீறி போராட்டம் நடந்ததால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இம்ரான் கான், அவரது காதலியும் கைது செய்யப்பட்டனர். நடிகர் இம்ரான் கான் இந்தியாவில் பிறந்திருந்தாலும் கூட அமெரிக்கா குடியுரிமை பெற்றவர். இதனால் அவர் எப்படி நம் நாட்டிற்கு வந்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடியும்? அவரை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து வெளிநாட்டு பதிவு அலுவலகம் (Foreigners Regional Registration Office or FRRO) சார்பில் இம்ரான்கானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், ''நீங்கள் அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ளீர்கள். இந்தியாவின் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025ன் வகுக்கப்பட்ட விதிகளை மீறி உள்ளீர்கள். இதனால் அக்டோபர் 28 ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்'' என உத்தரவிடப்பட்டு இருந்தது.

    Advertisement

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் இம்ரான் கான் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடினார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ''இந்தியாவை விட்டு வெளியேறும்படி வெளிநாட்டு பதிவு அலுவலகம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். ஏனென்றால் எந்த மாதிரியான விதியை நான் இந்தியாவில் மீறினேன் என்பது பற்றிய விவரம் எதையும் குறிப்பிடவில்லை. அதேபோல் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் ஓசிஐ கார்டு வைத்திருந்தும் அதனை கருத்தில் கொள்ளாமல் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவன் என்ற அடிப்படையில் நாட்டை விட்டு வெளியேற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது'' என கூறியிருந்தார்.

    Advertisement

    இந்த மனு மீது இன்று மும்பை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மறஅறம் நீதிபதி அத்வைத்ட் எம் சேத்தனா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இம்ரான் கான் நம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான கெடு நாளையுடன் முடிய உள்ள நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்ததால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் ஆஜரானார்.

    அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்ற வழக்கில் இருக்கிறார். அவர் இந்த வழக்கில் ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்கிறார். இதனால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் கூறினார். இதை கேட்ட உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 2ம் தேதி (வரும் திங்கட்கிழமை) ஒத்திவைத்தது.

    Advertisement

    அதுவரை நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வழங்கப்பட்ட நோட்டீஸ்க்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால் இம்ரான் கான் நவம்பர் மாதம் 2ம் தேதி வரை இந்தியாவில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Leave India Notice To Actor Imran Khan: Actor Imran Khan, a US citizen, was arrested in Mumbai on the 10th of this month following a protest in which he demanded the resignation of India's Chief Election Commissioner, Gyanesh Kumar. The Bombay High Court issued an interim stay on this notice today, effective until November 2. As a result, actor Imran Khan is permitted to remain in India until November 2.