காக்கி யூனிபார்ம்! கையில் கிளவுஸ்! இடுப்பில் கட்டிங் பிளேயருடன் அசால்ட்டாக மின்கம்பத்தில் ஏறும் ஜோதி

  • மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வரும் ஜோதி என்ற பெண் இடுப்பில் கட்டிங் பிளேயரை சொருகி கொண்டு கம்பத்தில் ஏறி மின் பிரச்சனைகளை சரி செய்யும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

    Advertisement

    மகாராஷ்டிரா மின்வாரியத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறாராம். இவர் மகாராஷ்டிரா மாநிலம் புல்தானாவில் உள்ள தமாங்கோனைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் கம்பம் ஏறுவது மிகவும் சவாலாக இருந்ததாக சொல்கிறார்.

    Advertisement

    மின் வாரிய பணிகளில் ஃபோர்மேன், லைன்மேன், வயர்மேன், உள்ளிட்ட பணிகளில் ஆண்கள் மட்டுமே இருந்து வந்தனர். காரணம் இவைகள் எல்லாம் மின்கம்பங்களில் ஏற வேண்டிய பணிகள்!

    ஃபோர்மேன் என்பவர் மின்கம்பம் ஏற வேண்டிய தேவையில்லை என்றாலும் தனக்கு கீழ் உள்ள வயர்மேன், லைன்மேன்களை ஏற்றிவிடுவது, மெயின் ஆஃப் ஆகியிருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை அவர் செய்ய வேண்டியதாக இருப்பதால் இந்த பணிக்கும் பெண்கள் இருப்பது போல் தெரியவில்லை.

    அப்படியிருக்கும் போது ஜோதி என்ற பெண் மின் கம்பங்களில் ஏறுவது, ஃபியீஸ் போடுவது, அறுந்த மின் கம்பிகளை சரி செய்வது என மின் கம்பத்தில் ஏறி பணியாற்றுகிறார். அதிலும் மழை, புயல் காற்று ஏற்படும் போதும் இவர் கம்பத்தில் ஏறி பணியாற்றுகிறார்.

    Advertisement

    மின் துண்டிப்பு ஏற்பட்டதும் அலுவலகத்திற்கு அழைப்புகள் வருமாம். இந்த பணிக்கு பணி நேரம் என கிடையாது என்பதால் 24 மணி நேரமும் பணியாற்றுவது போல் இருக்கும். கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஜோதி, மின் விநியோகம் தொடர்பான புகார்களை தீர்த்து வருகிறார்.

    இதுகுறித்து ஜோதி கூறுகையில், சிறு வயதில் இருந்தே சீருடை அணிந்து பணியாற்ற வேண்டும் என விரும்பினேன். இதனால் போலீஸ் ஆக விரும்பினேன். இல்லாவிட்டால் ராணுவத்தில் சேர்ந்துவிட நினைத்தேன். ஆனால் நான் உயரம் குறைவாக இருந்ததால் அந்த பணிகளுக்கு செல்ல முடியவில்லை.

    இதனால் மகாராஷ்டிரா மின்சார வாரியத்தில் தேர்வு எழுதி அதில் வென்று இந்த பணிக்கு வந்துள்ளேன். எனது பெயர் தேர்வான போது நான் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். மக்கள் என்னிடம் வயர்மேன், வயர்வுமன் என எப்படி அழைப்பது என கேட்டனர். அதற்கு நான் ஜோதி என்றே அழையுங்கள் என்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Advertisement

    மெல்லிய உடல் வாகு கொண்ட ஜோதி ஒரு கையில் எர்த்திங் ராடு, இடுப்பில் கட்டிங் பிளேயர் கட்டிக் கொண்டு விர்ரென கம்பத்தில் ஏறி விடுகிறார். தற்போது ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையில் ரயில் இயக்குவது, ஃபிளைட் ஓட்டுவது, ராணுவத்தில் பணிபுரிவது, எல்லையில் பணி செய்வது என பெண்கள் அசத்தலாக பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்கள்.

    ஆணாதிக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும் அரசு என்பது ஆண், பெண்களை சமமாக பார்ப்பது இது போன்ற போஸ்ட்டிங்கில் பெண்களை அமர வைக்கும் போது கண்கூடாக தெரிகிறது.

    English Summary

    Mumbai woman who is employed at Maharastra electricity board climbing on electric poles goes viral in social media.