“போய் 2 அடி வாங்கிட்டு வாங்க என எங்கள் மகன் சொல்லி அனுப்பினான்.. போராட்டத்தில் பங்கேற்றவர் பேட்டி!

  • மும்பை: "போராட்டத்துல கலந்துக்கிட்டு 2 அடி வாங்கிட்டு வாங்க" என எங்கள் மகன் சொல்லி அனுப்பினான் என மும்பையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்களின் போராட்டத்தில் பங்கேற்ற நபர் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் டெல்லியில் நடத்திய போராட்டத்தில் ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி செய்தும் தாக்குதல் நடத்தினர்.

    Advertisement

    இதையடுத்து மும்பை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் மாணவர்கள் போராட்டங்களில் இறங்கினர். மும்பையில் சிவாஜி பார்க் பகுதியில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அப்பகுதியில் திரண்டு கோஷங்களை எழுப்பி வந்தனர். மும்பையின் தாதர் பகுதியில் நடந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தாதர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது ஓர் இளம்பெண் அங்கு போராடிய இளைஞர்களை காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றபோது, அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினார். பின்னர் ஒருவர் அந்த வாகன கதவுகளைத் திறந்துவிட்டதும், பலரும் அதிலிருந்து இறங்கி தப்பித்தனர்.

    Advertisement

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்களின் போராட்டத்தில் வயதானவர்களும் பங்கேற்றனர். மும்பையில் நடந்த இந்தப் போராட்டத்தில் தம்பதியராகப் பங்கேற்ற நடுத்தர வயது நபர் ஒருவர் பேசுகையில், "எங்களது மகன் லண்டனில் வசித்து வருகிறான். எனக்குப் பதிலாக நீங்கள் போய் இந்தப் போராட்டத்தில் எனது சார்பாக கலந்து கொள்ளுங்கள் அப்பா என அவன் கூறினான். போராட்டத்தில் கலந்துகொண்டு என் சார்பாக 2 அடி வாங்கிட்டு திரும்ப வந்துடுங்க அப்பா எனக் கூறினான்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    "Our son sent us off saying, 'Go participate in the protest and Take two beatings and come back, Papa," said a person who took part in the protest by CJP Youths in Mumbai.