இனி அரசியல் வேண்டாம்? மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஓய்வை அறிவிக்கும் நிதின் கட்காரி?

  • மும்பை: ''இப்போதெல்லாம் என்னால் அதிகப்படியான பணிகளை செய்ய முடியவில்லை. என்னால் முடிந்த பணிகளை மேற்கொண்டு வருகிறேன். எனக்கு ஈடுபாடு குறைந்துவிட்டது. புதிய தலைமுறையினரிடம் பணிகளை ஒப்படைக்க வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது'' என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார். இதனால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அரசியலுக்கு குட்பை சொல்ல தயாராகிவிட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் நிதின் கட்காரி. பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார். இவருக்கு தற்போது

    Advertisement

    நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் நிதின் கட்காரி பேசியதாவது: ''இப்போதெல்லாம் என்னால் அதிகப்படியான பணிகளை செய்ய முடியவில்லை. என்னால் முடிந்த பணிகளை மேற்கொண்டு வருகிறேன். எனக்கு ஈடுபாடு குறைந்துவிட்டது. புதிய தலைமுறையினரிடம் பணிகளை ஒப்படைக்க வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. புதிய தலைமுறையினர் வந்துவிட்டனர். இனி பழைய தலைமுறையை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு வழிக்காட்ட வேண்டும்.

    நான் கடந்த 30 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருந்து வருகிறேன். நான் பல்வேறு வெற்றி, தோல்விகளை சந்தி்ததுள்ளேன். பல்வேறு பாராட்டுகளை பெற்றுள்ளேன். ஆனால் இப்போது என்னால் வேலை செய்ய முடியவில்லை. இதனால் புதிய தலைமுறையினரிடம் பணியை ஒப்படைக்க வேண்டும். '' என்றார்.

    Advertisement

    நிதின் கட்காரியின் இந்த பேச்சு கவனம் பெற்றது. நிதின் கட்காரிக்கு இப்போது 69 வயது ஆகிறது. அதுமட்டுமின்றி பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலப்பு விவகாரத்தில் நிதின் கட்காரியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் நிதின் கட்காரி மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஓய்வு முடிவை எடுக்க தயாராகிவிட்டாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. நிதின் கட்காரியின் இந்த பேச்சு விவாதத்தை கிளப்பியது.

    இந்நிலையில் தான் நிதின் கட்காரியின் அலுவலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ''நிதின் கட்காரியின் பேச்சு எந்தவொரு அரசியல் சூழலையும் குறித்தது அல்ல'' என்றும், அது இயல்பாக பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிதின் கட்காரி பேச்சின் வீரியம் இன்னும் குறையவில்லை.

    Advertisement

    ஏனென்றால் சமீபத்தில் பாஜகவில் அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் மாற்றம் செயயப்பட்டனர். பாஜகவின் புதிய தலைவர் நிதின் நபின் தனக்கு ஏற்ப கட்சியில் 65 உறுப்பினர்களை கொண்ட டீமை அமைத்தார். இதில் 51 பேர் புது முகங்கள்.

    அதோடு அவர்கள் இளம் வயதினராக உள்ளனர். கட்சியின் மூத்த தலைவர்களுக்கு பெரிய அளவில் இதில் இடம் கிடைக்கவில்லை. இதனால் தான் நிதின் கட்காரி கட்சியின் செயல்பாட்டை உணர்ந்து புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

    English Summary

    "These days, I am unable to handle a heavy workload; I am carrying out only the tasks I can manage. My interest has waned. The responsibilities need to be handed over to the new generation; the time for that has come," said Union Minister Nitin Gadkari. This has raised the question: Is he preparing to resign from his ministerial post and bid farewell to politics?.