மும்பை, டெல்லியை விடுங்க.. RSS கோட்டையில் வெடித்த போராட்டம்! கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாஜக!

  • மும்பை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மும்பை மற்றும் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்திருக்கும் நாக்பூரிலும் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    அடுத்த ஆண்டு 5 மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் டிமாண்ட்.

    Advertisement

    மும்பையில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் சிவாஜி பார்க்கில் நடைபெற்ற போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. இத்தனைக்கும் சிவாஜி பூங்காவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், ஆயிரக்கணக்கில் போராட்டக்காரர்கள் குவிந்து, தடையை உடைத்திருந்தனர். அதேபோல, டெல்லியில் SFI, AISA, DYFI என கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாணவர், இளைஞர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. இந்த 2 போராட்டங்களும் பாஜக அரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது இந்த பஞ்சாயத்துக்கு நடுவில், நாக்பூரில் புதியதாக போராட்டம் வெடித்திருக்கிறது. நாக்பூரின் மராட்டி சவுக் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலையிலிருந்து தொடங்கிய இந்த எதிர்ப்பு பேரணி, முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றது. பேரணியில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள், தேர்தல் ஆணையருக்கு எதிராக 'திருடன், திருடன், ஞானேஷ் குமார் திருடன். முன்பு வெள்ளையர்களுடன் போராடினோம். இப்போது திருடர்களுடன் போராடுகிறோம்' என்று கோஷங்களை எழுப்பினர்.

    Advertisement

    இந்த பேரணியில் மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், முன்னாள் அமைச்சர் சுனில் கேதார், காங்கிரஸ் நகர தலைவர் பிரஃபுல் குடதே, அஷ்வின் பைஸ் மற்றும் அவந்திகா லேகுர்வாலே உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

    டெல்லியில் போராட்டங்கள் நடக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்த்ததுதான். பாஜக தலைமையிலான மத்திய அரசு இதற்கெல்லாம் ரெடியாகத்தான் இருந்தது. ஆனால், மும்பையில் போராட்டம் நடக்கும் என்று எதிர் பார்க்கவில்லை. அதேபோல ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்திருக்கும் நாக்பூரில் போராட்டம் நடக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்த போராட்டம் பாஜகவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண செய்திருப்பதாக பலரும் கூறுகின்றனர்.

    Advertisement

    பெங்களூரிலும் வெடித்த போராட்டம்

    அதேபோல பெங்களூரிலும் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. ப்ரீடம் பார்க்கில் இன்று நடந்த போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கின்றனர். வாக்காளர் பட்டியலிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதற்கு பொறுப்பேற்று ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்திருக்கிறது.

    "SIR நடவடிக்கை என்பது வெறுமென வாக்குகளை திருடுவது மட்டுமல்ல, மக்களாட்சி மற்றும் மக்களின் உரிமைகள் மீது நடத்தப்படும் நேரடி தாக்குதல். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் தூண்டுதலின் பேரில்தான் ஞானேஷ் குமார் செயல்படுகிறார்" என்று பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    இவ்வளவு நடந்த பின்னரும் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்தக்கட்ட போராட்டங்கள் தீவிரமடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    RSS: Protests are being held in Mumbai and Delhi against Chief Election Commissioner Gyanesh Kumar. In this case, the protest against the BJP in Nagpur, where the RSS headquarters is located, has received attention.