மும்பை: புனேயில் கடந்த 18-ம் தேதி ஷியா கோயல் என்ற பெண், தனது வருங்கால கணவரான கேதன் அகர்வாலை காதலன் சேதன் சவுத்ரியின் துணையோடு லோஹாகட் மலை உச்சியிலிருந்து 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. கைதான காதலர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
புனே ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வாலை, ஷியா கோயல் என்ற பெண்ணுக்கு வீட்டில் நிச்சயம் செய்திருந்தனர். ஆனால், சேத்தன் சவுத்ரி என்ற நபரை சியா காதலித்து வந்தார். எனவே, கேதன் அகர்வாலை திருமணம் செய்ய பிடிக்கவில்லை.
இதனால் காதலனுடன் சேர்ந்து, வருங்கால கணவரை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளி கொன்றார் ஷியா.. இதையடுத்து காதலர்களை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். புனே கிராமப்புற போலீசார் நேற்று நேரடியாக லோஹாகட் கோட்டைக்கு அழைத்துச் சென்று, குற்றத்தை எப்படி அரங்கேற்றினார்கள் என்பதைச் செய்து காட்டச் சொல்லி ஒத்திகை நடத்தினார்கள்.. கேதனை மலை உச்சிக்கு அழைத்துச் சென்றபோது சேத்தன் எப்படிப் பின்தொடர்ந்தார், அவரைத் தள்ளிவிடுவதற்கு முன்னால் சியா என்ன மாதிரியான சிக்னல்களைக் கொடுத்தார் என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ள இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து காதலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.. அதாவது ஷியாதான் தனது காதலனுடன் சேர்ந்து இந்த முழு சதித்திட்டத்தையும் தீட்டினாராம்.. கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பேயே, அவர் ராஜஸ்தானுக்கு தனது காதலன் சேதனுடன் சென்று சில நாட்கள் தங்கிவிட்டு வந்துள்ளார். ஆனால், சோஷியல் மீடியாவில் மட்டும், கேதனுடன் சேர்ந்து வெளியிட்ட ரீல்கள், பதிவுகளில், தங்களை சிறந்த ஜோடி போல காட்டி கொண்டாராம். அதுமட்டுமல்ல, கேதனை கொலை செய்துவிட்டால் அடுத்த 3 ஆண்டுகள் கழித்து காதலன் சேத்தனை திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஷியா வாக்குமூலம் அளித்துள்ளார். அதேபோல ஷியா ஷாப்பிங் என்ற பெயரில் கேதனிடம் இருந்து ரூ. 1 கோடியை வாங்கி அதை நேரடியாக காதலன் சேத்தனிடம் வழங்கினாராம். உடனே அந்த பணத்தை பெற்று கொண்ட சேத்தன், 3 ஆண்டுகளில் பிசினஸில் பெரிய அளவில் வளர முடியும் என்று ஷியாவிடம் உத்தரவாதம் அளித்துள்ளார்.. இதைக்கேட்டு குளிர்ந்து போன ஷியா, கேதனை கொன்றுவிட்டு சில மாதங்கள் கழித்து தன்னுடைய பெற்றோரிடம் வந்து முறைப்படி பெண் கேட்க சொன்னாராம்.. அதன்படியே கொலை செய்வதற்கு 34 நிமிடத்திற்கு முன்பு ஷியா தனது போனில் இருந்து சேதனுக்கு போன் செய்து, லோஹாகட் கோட்டையில் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாத இடத்தை தேர்வு செய்து கொடுத்துள்ளார். அதன் பிறகே சாமர்த்தியமாகத் தண்ணீர் குடிப்பது போலக் கீழே உட்கார்ந்து கொள்ள, கேத்தன் சற்று தள்ளி நின்றபோது பின்புறமாக வந்த சேதன் அவரை 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டுள்ளார். தப்பிக்கும் முயற்சியில் கேத்தன் தனது கையைப் பிடித்து இழுத்துவிடக் கூடாது என்பதற்காகவே ஷியா திட்டமிட்டு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாராம்.. இதையெல்லாம் போலீசாரிடம் ஷியா வாக்குமூலமாகவே தந்துள்ளாராம்,புனே ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வால்
400 அடி மலையுச்சி
1 கோடி பிசினஸ் - ஷியா போட்ட பிளான்