மும்பை: பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப் சென்ற கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், அவரது வலது கை துப்பாக்கி குண்டு தூளால் பொசுங்கியதாக மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். நடிகர் டைகர் ஷ்ராஃப் அவரது வீட்டில் சந்தித்து பேசிய பிறகு இந்தத் தகவலை வெளியிட்ட அவர், மும்பையில் மீண்டும் கேங் வார் உருவாக அனுமதிக்க மாட்டோம் என்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மும்பையின் ஜூஹு பகுதியில் நேற்று மாலை கால்பந்து விளையாடிவிட்டு டைகர் ஷ்ராஃப் புறப்பட்டபோது, அவர் சென்ற பிஎம்டபிள்யூ கார் மீது திடீரென துப்பாக்கி சூடு நடந்தது. மர்ம நபர்கள் அவரது காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் நல்வாய்ப்பாக டைகர் ஷ்ராஃப்பிற்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், அவரது ஓட்டுநர் பிர்தாஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டிற்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே துப்பாக்கிச்சூட்டால் காயமடைந்த டைகர் ஷ்ராஃப்பை நேரில் சந்தித்தார். இந்த துப்பாக்கி சூட்டில் டைகர் ஷ்ராஃப்பின் வலது கை துப்பாக்கி குண்டு தூளால் பொசுங்கிவிட்டதாக ஷிண்டே கூறினார். டைகர் ஷ்ராஃப் குடும்பத்தினரும், குறிப்பாக அவரது தாயாரும் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்ததாகவும், தங்களுக்கு யாருடனும் மோதல் அல்லது தகராறு இல்லை என்று அவர்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மும்பை போலீசாரும் மகாராஷ்டிர அரசும் டைகர் ஷ்ராஃப் குடும்பத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்று ஷிண்டே உறுதியளித்தார். பொதுமக்களின் பாதுகாப்புக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம், பிரபலங்களின் பாதுகாப்புக்கும் வழங்கப்படும் என்றார். மும்பையில் எந்தக் கும்பலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று துணை முதல்வர் ஷிண்டே எச்சரித்தார். 1990களில் கேங் வார் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக குறிப்பிட்ட ஷிண்டே, மீண்டும் அத்தகைய சூழல் உருவாக அரசு அனுமதிக்காது என்றும் கூறினார். மிரட்டல் அழைப்புகள் வந்தால் பிரபலங்கள் உடனடியாக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களில் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், மூன்றாவது நபர் தப்பி செல்வதற்காக பைக்கில் காத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பழைய பல்சர் பைக்கில் அவர்கள் வந்ததாக நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். துப்பாக்கிச்சூடு நடந்தபோது, காரின் டிரைவர் சீட்டை நோக்கி அவர்கள் சரமாரியாக சுட்டுள்ளனர். காயமடைந்த டிவைர் இறங்கி பின் இருக்கையில் அமர்ந்த நிலையில், டைகர் ஷ்ராஃப் அவராகவே காரை ஓட்ட ஆரம்பித்தார். நேரடியாக அவரே காரை மருத்துவமனைக்கு ஒட்டி சென்றதாகவும் ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்திலேயே இதை நடத்தியது பிஷ்னோய் கும்பல் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை காவல் ஆணையர் தேவேன் பாரதியிடம் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், விவரங்களைக் கேட்டறிந்தார். குற்றவாளிகளை விரைவாக கைது செய்து, விசாரணையை துரிதப்படுத்தி கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.பரபரப்பு
கை பொசுங்கியது
டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது நாங்க தான்.. பொறுப்பேற்ற பிஷ்னாய் கும்பல்.. பின்னணி?
என்ன நடந்தது
Tiger Shroff: பிரபல நடிகர் டைகர் ஷெராப்பை சுட்டுக்கொல்ல முயற்சி.. துப்பாக்கி சூட்டில் அதிர்ஷ்டவசமாக தப்பினார்!
போலீஸ் விசாரணை