அடுத்த பஞ்சாயத்து! TISS பட்டமளிப்பு விழா! தலைமை விருந்தினராக அறிவிக்கப்பட்ட CJI சூர்ய காந்த் மாற்றம்

  • மும்பை: மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் கழகத்தின் (TISS) 86வது பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (CJI) சூர்ய காந்த் தலைமை விருந்திருனராக பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அவருக்கு பதில், டாடா மெமோரியல் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சி.எஸ்.பிரமேஷ் தலைமை விருந்தினராக பற்கேற்பார் என்று மாற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    முதலில், TISS கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆக.2ம் தேதிதான் நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் ஆக.22க்கு தேதி மாற்றப்பட்டது. எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக கூறி.. இந்த தேதி மாற்றப்பட்டிருந்தது. அது என்ன எதிர்பாராத சூழ்நிலைகள்? அதாவது தலைமை நீதிபதி வருகையின்போது மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட கூடும் என்பதால்தான்.. பாதுகாப்பு காரணங்களுக்காக தேதி மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    Advertisement

    வேலையில்லாத இளைஞர்கள் பற்றி தலைமை நீதிபதி சொன்ன கருத்து மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தலைமை நீதிபதி வரும்போது.. திடீரென மாணவர்கள் போராட்டம் நடத்தினால் அது எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துவிடும் என்பதால்தான் நிகழ்ச்சியின் தேதி மாற்றப்பட்டிருந்தது.

    சீப்பை ஒளித்து வைத்தால்.. கல்யாணம் நின்றுவிடுமா என்ன? அதுபோல தேதியை மாற்றினால் மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த மாட்டார்களா என்ன? சூழல் இப்படி இருக்கையில்தான் தற்போது தலைமை விருந்தினர் மாற்றப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

    இந்த மாற்றம்.. தலைமை நீதிபதியின் முடிவின் காரணமாக ஏற்பட்டதா? அல்லது அறிவியல் கழகத்தின் நிர்வாகம் செய்த மாற்றமா? என்பது குறித்து தெரியவில்லை.

    Advertisement

    முன்னதாக நல்சார் (NALSAR) சட்ட பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமை விருந்தினராக பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து.. சூர்ய காந்த் தலைமை விருந்தினராக பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர்.

    மாணவர்கள் கடிதம் எழுதியதால்.. 2026 பேட்ச் மாணவர்கள் யாரையும் என்ரோல்மென்ட் செய்ய கூடாது என இந்திய பார் கவுன்சில் தலைவர் சொல்ல.. இதற்கு கரப்பான் ஜனதா கட்சி (CJP) எதிர்ப்பு தெரிவிக்க.. இப்படியாக இது பெரிய பஞ்சாயத்தாக வெடித்திருந்தது. இந்நிலையில் தற்போது TISS பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினர் மாற்றப்பட்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    Topics: #cji #student

    English Summary

    CJI Surya Kant: It had been announced that Chief Justice of the Supreme Court (CJI) Surya Kant would participate as the chief guest at the 86th convocation ceremony of the Tata Institute of Social Sciences (TISS) in Mumbai. However, it has now been announced that Dr. C.S. Pramesh, Director of Tata Memorial Hospital, will participate as the chief guest in his place.