மோடி அரசுக்கு தலைவலி.. மிக பெரியளவில் வெடிக்கும் போராட்டம்! ஒரே மேடையில் தாக்கரே சகோதரர்கள்

  • மும்பை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மும்பையில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

    Advertisement

    கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே தேர்தல் சார்ந்தே மிக பெரிய குழப்பங்கள் இருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்தார்.. மற்ற தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைகளை கேட்கவில்லை என்பதே முக்கிய குற்றச்சாட்டு. இது தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் 14 முறை ஆட்சேபனை தெரிவித்தாக தகவல்கள் வெளியாகின.

    Advertisement

    போராட்டம்

    இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் இப்போது பெரிதாக எடுத்து செல்கின்றன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும், வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. ஏற்கனவே காங்கிரஸ், ஆம் ஆத்மி, கரப்பான் பூச்சி கட்சி ஆகியோர் போராட்டங்களை நடத்தியிருந்தனர். இதற்கிடையே இன்றைய தினம் மும்பையில் தாக்கரே சிவசேனா - நவநிர்மாண் சேனா ஆகியோரும் போராட்டங்களை அறிவித்தனர்.

    Advertisement

    எதிர்க்கட்சிகள்

    இந்த போராட்டத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணியை சேர்ந்த கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    சிக்கல்கள்

    இது தொடர்பாக தாக்கரே சிவசேனாமூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "தேர்தல் நடைமுறைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையாக இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் பல சிக்கல்கள் உள்ளன. அதற்கு பொறுப்பேற்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்" என்றார்.

    Advertisement

    அதேபோல் மற்றொரு மூத்த தலைவர் அரவிந்த் சாவந்த் கூறுகையில், "உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒரே மேடையில் தோன்றுவது போராட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த போராட்டம் நடைபெறுகிறது" அவர் தெரிவித்தார். இந்த போராட்டம் மும்பை மெட்ரோ ரயில் நிலையம் அருகே தொடங்கி, மாநகராட்சி கட்டிடம் நோக்கி செல்லும் வகையில் நடத்தப்பட்டது.

    முக்கிய கோரிக்கை

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதும் போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இணைந்து இந்த போராட்டத்தில் பங்கேற்பது மகாராஷ்டிர அரசியலில் கவனம் பெற்றுள்ளது. இரு தலைவர்களும் ஒரே மேடையில் தோன்ற உள்ள நிலையில், பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் இந்தப் போராட்டம் பார்க்கப்படுகிறது.

    English Summary

    Shiv Sena (UBT) chief Uddhav Thackeray and MNS chief Raj Thackeray are leading a protest in Mumbai against Chief Election Commissioner Gyanesh Kumar(மும்பையில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டம்): Protest Against CEC Gyanesh Kumar latest news in tamil.