மும்பை: சாமியாரை நம்பி ஆசிரமத்துக்கு சென்ற பெண்ணுக்கு இப்படியொரு கொடுமை நடந்துள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலம் விரிந்தாவனை சேர்ந்த இந்திரதேவ் மகராஜ் என்பவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். "நான்தான் கடவுள்.. நான் சொல்வதைக் கேள்" என்று கூறி இந்த பெண்ணை மிரட்டினாராம் அந்த சாமியார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் அந்தப் பெண்.. கடந்த 2023-ம் ஆண்டு சோஷியல் மீடியாவில் இந்திரதேவ் மகராஜின் ஆன்மிக சொற்பொழிவுகளை பார்த்துள்ளார். இதையடுத்து அவரைத் தொடர்புகொண்டுள்ளார். அவரிடம் தீட்சை பெற வேண்டும் என்பதற்காக மும்பையின் சாந்தாகுருஸில் நடந்த சத்சங்க நிகழ்ச்சிக்கும் சென்றுள்ளார்.
அதன்பிறகு இந்திரதேவுடன் அந்த பெண் அடிக்கடி பேசியுள்ளார். தனது சொந்த பிரச்சனைகள் பற்றியும் அவரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாக இந்திரதேவ் நம்பிக்கை தந்தாராம். உடனே இதனை நம்பிய அந்தப் பெண், அவரைப் பார்க்க உத்தரப்பிரதேச மாநிலம் விரிந்தாவனில் உள்ள சேவாதாம் ஆசிரமத்துக்கு சென்றுள்ளார். அந்த ஆசிரமத்தில் அப்பெண் தங்கியிருந்தபோது, ஒரு நாள் நள்ளிரவில் இந்திரதேவ் மகராஜ் தனது ரூமுக்கு வருமாறு அழைத்துள்ளார்... அவரும் சென்றிருக்கிறார்.. அப்போது அறை கதவை பூட்டிய இந்திரதேவ், பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, இரவில் எங்கே சென்றாய் என்று யாராவது கேட்டால் மருந்து வாங்க சென்றதாக சொல்லும்படியும் சாமியார் மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். இதற்கு பிறகு வீடியோ காலில் பேசும்போதும், ஆடைகளை கழற்றச் சொல்லி பெண்ணை வற்புறுத்தினாராம்.. அபபோது ஆபாசமாக நடந்துகொண்டு அதையும் வீடியோவாக பதிவு செய்து வைத்து கொண்டாராம் சாமியார்.. இந்த வீடியோக்கள் அனைத்தையும் வைத்து, பெண்ணை மிரட்டியதுடன், வெளியே சொல்லிவிடுவேன் என்று பயமுறுத்தி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்,. ஒரு கட்டத்தில் "நான்தான் கடவுள், நீ எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்" என்று அப்பெண்ணை மிரட்டியிருக்கிறார்.. இந்த சம்பவங்கள் அனைத்தும் 2023-ம் ஆண்டிலேயே நடந்திருக்கிறது.. மேற்கண்ட கொடுமைகளையெல்லாம் சம்பந்தப்பட்ட பெண் புகாராக போலீசில் தந்துள்ளார். , ஆனால், இத்தனை மாதங்களாகியும் இந்திரதேவ் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்..தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல மாதங்களாகப் போராடி வருவதாகவும், மதுராவில் முதலில் புகார் கொடுத்தபோது போலீசார் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் தற்போது வேதனை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இப்போது சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் தலையிட்டுள்ளார்.. இந்த தலையீட்டையடுத்து, போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்,.,. மகாராஷ்டிராவின் மீரா-பயந்தர் பகுதியில் உள்ள காஷிமிரா போலீஸ் ஸ்டேஷனில் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, விசாரணைக்காக மதுரா காவல்துறைக்கு மாற்றப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்தி தேசாய், "இந்திரதேவ் மகராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. அவரால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தற்போது சில பெண்கள் இந்திரதேவ் மீது புகார்களையும் தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் இதுவரை ஒரே ஒரு எஃப்ஐஆர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மத போதகரால் பாதிக்கப்பட்ட வேறு எந்தப் பெண்ணாக இருந்தாலும், அச்சமின்றி முன்வந்து புகார் அளிக்க முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.இந்திரதேவ் சாமியார்
நள்ளிரவில் பெண்ணுக்கு நடந்த கொடுமை
நான்தான் கடவுள்
சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்