போலீஸ் வேனை தனி ஆளாக தடுத்த பிரபல நடிகை.. நீட் போராட்டத்தில் திக்திக்! என்ன நடந்தது

  • மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நீட் விவகாரத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, போலீஸ் வேன் முன் நின்று அதை தடுத்து நிறுத்திய இளம்பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. போராட்டத்தின் போது அன்று என்ன நடந்தது.. யார் அந்த பெண் என்பது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    தேசியளவில் இப்போது நீட் போராட்டம் பெரியதாக வெடித்துள்ளது. ஒரு பக்கம் தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இதற்கிடையே மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுக்க பல்வேறு நகரங்களிலும் தனிச்சையாக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    Advertisement

    இளம்பெண்

    அதன்படி மகாராஷ்டிரா தலைநகர் மும்பையிலும் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மும்பை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது கைது செய்யப்பட்டவர்களை ஏற்றி சென்ற போலீஸ் வேனை தைரியமாக தடுத்து நிறுத்திய பெண்ணின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

    புதன்கிழமை மும்பையின் தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பூங்கா அருகே நடைபெற்ற போராட்டத்தின் போது, ரியா யாதவ் என்ற இளம்பெண் மழைக்கு நடுவிலும்,ஹூடி மற்றும் கேப் அணிந்தபடி போலீஸ் வேனின் முன் நின்றார். வேனை அங்கிருந்து நகர அந்த பெண் விடவே இல்லை. கடைசி வரை துணிச்சலாக வேன் முன்பு நின்றார். இது அங்கிருந்த போராட்டக்காரர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தினார். இதையடுத்து அங்கு திரண்டிருந்தவர்கள் கோஷங்களை எழுப்பி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் பிறகே மும்பை போலீசார் போராட்டக்காரர்களை விடுவித்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    கடமை தவறிய போலீஸ்

    இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரியா யாதவ், "போலீசார் தங்களது பொறுப்பை சரியாகச் செய்யவில்லை. அவர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்பதால் குடிமக்களாகிய நாங்களே எங்கள் பொறுப்பைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நான் மாணவி இல்லை. ஆனால் மாணவர்களுடன் நிற்கிறேன். டெல்லியில் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியதும், தடியடி நடத்தியதும் தவறானது" என்றும் அவர் கூறினார்.

    டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிராகவே மும்பையிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    யார் இவர்

    ரியா யாதவ் ஒரு நடிகை, மாடல் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் ஒரு லட்சம் பேர் பாலோ செய்கிறார்கள். பல மியூசிக் பாடல்களில் நடித்துள்ள அவர், சமீபத்தில் வெளியான "தில் பாரா" என்ற மியூசிக் வீடியோவில் நடித்துள்ளார். நடிகை மட்டுமல்லாமல், ஆடை வடிவமைப்புத் துறையிலும் ஈடுபட்டு வரும் ரியா, சொந்தமாக சிறிய ஆடை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

    டெல்லி போராட்டம்

    நீட் தேர்வு முறைகேடு மற்றும் டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து, மும்பையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சிவாஜி பார்க், சைத்யபூமி, செம்பூர், சிவசேனா பவன் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்கள் தொடர்பாக ஜூலை 18 முதல் ஜூலை 22 வரை மும்பை போலீசார் 13 எஃப்ஐஆர்கள் பதிவு செய்துள்ளனர். சட்டவிரோத கூட்டம் மற்றும் தடை உத்தரவை மீறியதாக 400-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    A video of actress and entrepreneur Riya Yadav blocking a Mumbai Police van during a protest over the NEET controversy(நாளுக்கு நாள் தீவிரமடையும் நீட் போராட்டம்): Neet protest intensifies across the nation.