புனே கொலையில் சிக்கிய க்ளூ.. 33 டிகிரி வெயிலில் ஹூடி மனிதன் யார்? 2004 முறை போனில் பெண் போட்ட பிளான்

  • மும்பை: வருங்கால கணவரை 400 அடி மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார் புனேவை சேர்ந்த இளம்பெண்.. இந்த பெண்தான் கொலை செய்தார் என்பதை போலீசார் எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா? போலீசாருக்கு கிடைத்த க்ளூ என்ன தெரியுமா? அதை பற்றின தகவல்தான் இப்போது வெளியாகி பலரையும் பதற வைத்துள்ளது.

    Advertisement

    மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த தொழிலதிபர் விஷால் அகர்வாலின் மகன் கேதன் அகர்வால் (25), ஒரு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வந்தார்.

    Advertisement

    இவருக்கும் சியா கோயல் என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு சொகுசு அரண்மனையில் 17 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக விருந்தினர்களை அழைத்து வர இரண்டு தனி விமானங்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.

    புனே தொழிலதிபர்

    ஆனால் சியாவிற்கு இந்தத் திருமணத்தில் துளியும் சம்மதம் இல்லை. அவர் தான் வேலை செய்யும் இடத்தில் சேத்தன் சவுத்ரி என்பவரைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். அதனால் வருங்கால கணவர் கேதனை கொன்றுவிட முடிவு காதலர்கள் இருவரும் முடிவு செய்தனர்.. இதற்காக சம்பவத்தன்று சேதனை 400 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு அழைத்து சென்று, மனசாட்சியே இல்லாமல் தள்ளிவிட்டு கொன்றுள்ளனர்.

    Advertisement

    இதையடுத்து காதலர்கள் 2 பேரும் கைதாகி உள்ளனர்.. அவர்களிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. அப்போது பல்வேறு தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை தந்தவண்ணம் உள்ளன.. இதோ இன்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

    வருங்கால கணவர் கேதன்

    அதாவது கேதனை கொலை செய்வதற்காக தன்னுடைய காதலன் சேத்தனுடன் சேர்ந்து பலமுறை திட்டம் போட்டாராம் சியா.. கடந்த 7 மாதங்களில் மட்டும் காதலர்கள் இருவரும் 2,004 முறை போனில் பேசி, கிட்டத்தட்ட 238 மணி நேரம் கொலையைப் பற்றியே சதித்திட்டம் தீட்டியது தற்போது தெரியவந்துள்ளது.

    இதனால் அதிர்ந்து போன போலீசார் சியாவிடம், "கேதனை கொலை செய்வதற்கு பதிலாக, நீங்கள் இருவரும் ஓடிப்போயிருக்கலாமே?" என்று கேட்டுள்ளனர்.

    Advertisement

    அதற்கு சியா, "நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு ஓடிப்போனால் என் குடும்பத்தின் மானமே போய்விடும், அதனால்தான் விபத்து போலக் காட்டி கொலை செய்ய முடிவெடுத்தோம்" என்று போலீசாரிடம் சொன்னாராம்.

    பலமுறை கொல்ல முயற்சி

    அதுமட்டுமல்ல, கேதனை எப்படியாவது தீர்த்துக்கட்ட சியா ஏற்கனவே பலமுறை அவரை லோஹாகட் கோட்டைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். கடந்த மே 31 அன்றும் இருவரும் அங்கு சென்றுள்ளனர். ஆனால் கொலையை அரங்கேற்ற முடியவில்லை.. அதன்பின் ஜூன் 4-ம் தேதி மீண்டும் அங்கு செல்ல சியா வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் கேதனின் அம்மா அதற்கு அனுமதிக்கவில்லையாம்.

    இதற்கு பிறகு ஜூன் 14 அன்று சியா கேதனை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து பள்ளத்தில் தள்ளியுள்ளார். ஆனால், கேதன் அங்கிருந்த ஒரு புதரில் விழுந்து விட்டாராம்.. இதனால் அன்றைய தினம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

    Advertisement

    உயிருடன் மீண்ட கேதன்

    கேதன் உயிருடன் புதரில் விழுந்து கிடப்பதை பார்த்த சியா, எங்கே தன் ரகசியம் வெளியாகிவிடுமோ என்று பயந்து, "பாம்பு... பாம்பு..." என்று கத்தி கொண்டே, பதறியடித்து ஓடிவந்து கேதனைக் காப்பாற்றுவது போலவும் நடித்தாராம். இதனால் சியா மீது கேதனுக்கு அன்று துளியும் சந்தேகம் வரவில்லையாம்.

    இந்த கொலை முயற்சி தோல்வியடைந்த நிலையில், கடந்த ஜூன் 18-ம் தேதி காலை, சியாவும் சேத்தனும் சேதனும் புனேயில் உள்ள ஒரு கேஃபேவில் சந்தித்து, கேதனை எப்படி கொல்வது? கோட்டையில் எந்த பகுதியில் இருந்து கீழே தள்ளுவது என்று மீண்டும் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டுள்ளனர்.

    Advertisement

    33 டிகிரி வெயிலில் ஹூடி ஆடை

    திட்டமிட்படியே சிறிது நேரத்தில் கேதனை மலை உச்சிக்கு போகலாம் என்று அழைத்தும் சென்றுள்ளார்.. சியாவும் கேதனும் மலை ஏறும்போது, காதலன் சேத்தனும் , அவர்களுக்கு பின்னாலேயே சென்றாராம்.. ஆனால், தனது அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக, அன்று நிலவிய 33 டிகிரி செல்சியஸ் கடுமையான கோடை வெயிலிலும் சேதன் ஒரு "ஹூடி" ஆடையை அணிந்து, அதன் மேல் ஹெட்செட்டும் மாட்டிக்கொண்டு பின்னாடியே போனாராம்.

    மலை ஏற்றத்தின்போது, சேத்தன் சியாவிடம் எதுவும் பேசாமல், தூரத்தில் இருந்துகொண்டே கைசைகைகளால் சியாவுடன் சைகையிலேயே பேசி வந்துள்ளார்..பின்னர் சியா காட்டிய சிக்னலின்படி, இருவரும் சேர்ந்து கேதனை 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டுக் கொலை செய்துள்ளனர். பலத்த காற்று வீசியபோது போட்டோ எடுக்க முயன்றதால் கேதன் தவறி விழுந்துவிட்டதாக சியா போலீசாரிடம் கூறி கதறி அழுது நாடகமாடினார்.

    இளம்பெண் சிக்கியது எப்படி

    பிறகு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவ்வளவு வெயிலிலும் ஒருவர் ஹூடி (தலையில் தொப்புயுடன் சேர்ந்து வரும் ஸ்வெட்டர்) அணிந்துள்ளாரே? ஹெட்செட் மாட்டி கொண்டு செல்கிறாரே? என்று சந்தேகம் வலுத்துள்ளது.. அதுமட்டுமல்ல, சியா திரும்பிப் பார்த்ததுமே அந்த ஹூடி மனிதன் தரையில் உட்கார்ந்து தன்னை மறைத்து கொள்வது ஏன்? என்றும் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

    இறுதியாக, சிசிடிவி-யில் இருந்த அந்த ஹூடி நபரின் உருவத்தையும், சேதனின் சமூக வலைத்தள புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து போலீசார் சேதனை அடையாளம் கண்டுள்ளனர். மொபைல் போன் சிக்னல், சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள் அடிப்படையில் சியா மற்றும் சேதன் இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குடும்ப மானத்தைக் காக்க வருங்கால கணவனையே காதலியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கி கொண்டிருக்கிறது...!!!

    Topics: #crime news

    English Summary

    Who Was the Hoodie-Clad Man in Pune Murder Mystery? Woman Allegedly Plotted Killing in 2,004 Calls