என் மீது வேனை ஏற்றினாலும் பரவாயில்லை.. 40 நிமிடங்கள் தனி ஆளாக போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய ரியா!

  • மும்பை: மும்பையில் நீட் மாணவர் போராட்டத்தில் போலீஸ் வேனை பெண் ஒருவர் தடுத்து நிறுத்திய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையே தான் ஏன் இதுபோல போலீஸ் வேனை தடுத்து நிறுத்தினேன்.. அன்றைய தினம் என்ன நடந்தது.. யாருடைய கவனத்தை ஈர்க்க இதுபோல செய்தார் என்பது தொடர்பாக முக்கிய தகவல்களை அந்த பெண் பகிர்ந்துள்ளார். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    நாடு முழுக்க நீட் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. அதன்படி மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையிலும் நீட் போராட்டம் நடைபெற்றது. அப்போது கைது செய்யப்பட்ட மாணவர்களை ஏற்றி சென்ற போலீஸ் வேனை தனி ஒருவராக தடுத்து நிறுத்திய இளம்பெண் ரியா ஆஹிர் வீடியோ நாடு முழுக்க இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நடிகையான இவர், கொட்டபநி மழையையும் பொருட்படுத்தாமல் போலீஸ் வாகனத்தின் தனி நபராக தடுத்து நிறுத்தினார்.

    Advertisement

    போலீஸ் வேன்

    இந்த சம்பவம் குறித்து ஆங்கில ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் போராட்டத்துக்கு சென்று கொண்டிருந்தேன். ஆனால் போராட்டமே என்னை தேடி வந்துவிட்டது என சொல்லலாம். அந்த நேரத்தில் நான் எதையும் யோசிக்கவில்லை. திடீரென போலீஸ் வேன் முன் சென்று நின்றுவிட்டேன். என் குரலை அரசுக்கு கேட்க வைக்க வேண்டும் என்பதை எனது நோக்கம்.. அவர்கள் செய்வது தவறு என்பதை போலீசாருக்குஉணர்த்த வேண்டும் என்றும் மட்டுமே நினைத்தேன். அதனால் கையை நீட்டி வாகனத்தை நிறுத்த சொன்னேன்.

    நான் நேரடியாக வேனை போய் தடுத்து நிறுத்தவில்லை. அதற்கு முன்பும் போலீசாருடன் பேசி மாணவர்களை விடுவிக்க முயன்றேன். மாணவர்களை ஏன் கைது செய்கிறீர்கள்? கைது செய்ய வாரண்ட் இருக்கிறதா? என்று போலீசாரிடம் கேட்டேன். வேனின் கதவு வழியாக ஒரு மாணவரை காப்பாற்றவும் முயன்றேன். ஆனால் எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அதன் பிறகு தான் வேனை முடக்க முடிவு செய்தேன்" என்றார்.

    Advertisement

    பயம் இருந்தது!

    திடீரென இதுபோல வேன் முன்பு போய் நிற்க பயமாக இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "வேனை என் மீது ஏற்றிவிட்டால் என்ன ஆகும் என்ற பயம் இருந்தது. ஆனால் அப்படி நடந்தாலும் பரவாயில்லை என்றே நினைத்தேன். எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதைவிட, போராடி உயிரிழந்த தியாகியாக இருப்பதையே விரும்பினேன்" என்றார்.

    இதுபோல அவர் வேனை தடுத்து நிறுத்தியதால் சுமார் 40 நிமிடங்கள் போலீஸ் வேன் அதே இடத்தில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவர் ஒருவர் வேன் முன்பு நின்றதும், மேலும் பல மாணவர்கள் இவருக்கு ஆதரவாக திரண்டனர். மழையிலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அங்கு திரண்டு, போலீசாருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மேலும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    Advertisement

    டிராபிக்

    தொடர்ந்து பேசிய ரியா, "நாங்கள் போலீஸை வீழ்த்தவில்லை. மும்பை டிராபிக் தான் கடைசி போலீசாரை பின்வாங்க வைத்தது. தாதரின் மிகவும் பரபரப்பான சாலையில் போலீஸ் வேன் நீண்ட நேரம் நின்றதால், போக்குவரத்து நெரிசல் வேகமாக அதிகரித்தது. அப்போது போலீசாருக்கு 2 ஆப்ஷன் தான் இருந்தது. ஒன்று என் மீது வாகனத்தை ஏற்றி செல்வது. மற்றொன்று கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிப்பது. இறுதியில் அவர்கள் மாணவர்களை விடுவித்தனர்" என்றார்.

    கவனத்தை ஈர்க்க!

    வெறுமன கவனத்தை ஈர்க்கவே ரியா இதுபோல வாகனத்தை மறித்து நின்றதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டு வரும் சூழலில், அது குறித்த கேள்விக்கு "ஆம்... நான் கவனத்தை ஈர்க்கத்தான் இதைச் செய்தேன். ஆனால் அது சமூக வலைதள கவனம் அல்ல. அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டேன்" என்று அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    ரியா ஆஹிரின் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் டிரெண்டாகி வருகிறது. போலீஸ் வேன் முன் தனியாக நின்று மாணவர்களை விடுவிக்க போராடிய அவரது வீடியோ, மாணவர் போராட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Actor Riya Ahir has revealed why she stood in front of a Mumbai Police van during the NEET protest(மும்பையில் வெடிக்கும் நீட் போராட்டம்): Mumbai neet protest latest news in tamil.