கோவா சொகுசு லாட்ஜ் ரூமிற்குள் தொழிலதிபருடன் சென்ற பெண்.. உடனே என்ன நடந்தது தெரியுமா?

  • மும்பை: கோவாவில், கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் சொகுசு லாட்ஜில் தங்கியிருந்தார்.. ஜாலிக்காக தங்கியிருந்தபோது, திடீரென எதிர்பாராதவிதமாக அந்த சம்பவம் நடந்துவிட்டது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் கையிலெடுத்த நிலையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதுதான் கர்நாடகா, மும்பையை அதிர வைத்து வருகிறது.

    Advertisement

    கர்நாடகா மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் சாலியன்.. 41 வயதாகிறது.. இவர் நீர் விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.. மிகப்பெரிய தொழிலதிபரும்கூட.

    Advertisement

    கோவா சொகுசு லாட்ஜ்

    கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி தனது நண்பர்களுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்குள்ள கலங்குட் பகுதியில் உள்ள ஒரு சொகுசு லாட்ஜில் தங்கியிருந்தார்.. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது ரூமில் மயங்கிக் கிடந்துள்ளார். பிறகு உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.

    ஆரம்பத்தில் இது மாரடைப்பு மரணம் என்றுதான் கருதப்பட்டது. ஆனால் சந்தீப் சாலியன் கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கிலி, கையிலிருந்த தங்க காப்பு என அனைத்துமே மிஸ்ஸாகியிருந்ததை போலீசார் கவனித்தனர். இதனால் மரணத்தில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, லாட்ஜில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    Advertisement

    அப்போதுதான், சந்தீப் சாலியனுடன் ஒரு பெண் லாட்ஜ் ரூமுக்குள் நுழைவதும், பிறகு நள்ளிரவில் அந்த பெண் மட்டும் தனியாக லாட்ஜை விட்டு வெளியேறி செல்வதும் பதிவாகியிருந்தது.

    தொழிலதிபருக்கு என்ன நடந்தது

    இந்த ஆதாரத்தை வைத்து போலீசார் தங்களது விசாரணையைத் தொடர்ந்தனர். சைபர் பிரிவு போலீசாரின் தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் செல்போன் நம்பரை கொண்டு நடத்திய விசாரணையில், அந்த பெண் பெங்களூருவைச் சேர்ந்த அக்ஷதா (40) என்பது தெரியவந்தது. உடனடியாக கர்நாடக போலீசாரின் உதவியுடன் கோவா போலீசார் அக்‌ஷதாவை கைது செய்தனர்.

    பிறகு கைதான அக்ஷதாவிடம் விசாரணை மும்முரமானது.. அப்போதுதான் பல பெயர்களில் தன்னுடைய அடையாளங்களை மாற்றி, பணக்காரர்களை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிப்பவராம் அக்‌ஷதா.. இதுதொடர்பான கும்பலுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருபவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

    Advertisement

    பணக்காரர்களுக்கு குறி

    அதாவது கோவாவில் உள்ள சூதாட்ட விடுதிகளுக்கு வரும் வசதியான தொழிலதிபர்களுடன் பழகி, அவர்களை ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டவராம் அக்‌ஷதா.. அங்கு அவர்களுக்கு பாலியல் ஆசை காட்டி, அவர்கள் குடிக்கும் கூல் டிரிங்க்ஸில் அதிக அளவு மயக்க மருந்தை கலந்து கொடுத்து, அவர்கள் மயங்கியவுடன் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து, எஸ்கேப் ஆகிவிடுவாராம்

    இதுகுறித்து கோவா போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி அமோன்கர் சொல்லும்போது, "அக்ஷதா இதற்கு முன்பும் குஜராத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு இதேபோல் மயக்க மருந்து கொடுத்து, 2.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடியிருக்கிறார்.. அந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்து விட்டார்.

    Advertisement

    அளவுக்கு அதிகமான டோசேஜ்

    ஆனால் சந்தீப் சாலியனுக்கு அக்ஷதா கொடுத்த மயக்க மருந்தின் அளவு அதிகமாக இருந்துள்ளது.. அதனால்தான் அவரது உயிருக்கே ஆபத்தாகிவிட்டது" என்றார்.

    லாட்ஜில் சாதாரண திருட்டு வழக்காக தொடங்கப்பட்ட இந்த விவகாரம், இப்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அக்ஷதாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கோவாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே கவனத்தை ஈர்த்துள்ளது...!!!

    English Summary

    Woman Enters Luxury Lodge Room in Goa With Businessman… What Happened Next?