நாகை: தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி என்ற பெயரில் பாஜகவின் மறைமுக ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதற்காகவே தவெகவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து வருகிறது நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளர்.
நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தற்போது சம்பா சாகுபடி தொடங்கிய நிலையில் மேட்டூர் அணை திறக்கப்பட்டும் தண்ணீர் போதாத நிலையில் உள்ளதால், கடைமடை பகுதிகளுக்கு வந்து சேருமா சம்பா சாகுபடி நடக்குமா என்ற சந்தேகம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே குருவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்குகிறது. கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் லதாவும் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
அப்போது அரசு தரப்பில் செப்டம்பர் மாதத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு செப்டம்பர் மாதத்திற்குள் உரிய நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது செப்டம்பர் மாத இறுதி ஆகிவிட்டது. ஆனால் இதுவரை குறுவை சாகுபடி பாதிப்பு தொடர்பாக எந்தவித கணக்கெடுப்பும் தகவல் சேகரிப்பும் நடைபெற்றதாக தெரியவில்லை. தற்போது சம்பாவும் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் பட்டினி சாவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக குறுவை சாகுபடிக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள், பல பிரபலங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதில் தவெக அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசி வருகின்றனர். கடந்த ஆட்சியில் நடைபெற்ற தவறுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எப்படி பொறுப்பேற்க முடியும். அமைச்சர்களுக்கு அரசியல் இயக்க வரலாறு எதுவும் தெரியுமா என்ற சந்தேகம் உள்ளது. தமிழகத்தில் அனைத்து பாலியல் குற்றங்களுக்கும் எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எனவே தவெக அமைச்சர்களின் சான்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேவையில்லை. தற்போது ஆளும் கட்சியாக உள்ள தவெக இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் தப்பாவிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலைப் பொறுத்தவரை மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெறும். தமிழகத்தில் தற்போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இல்லை எனவே இடதுசாரி கட்சிகள் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. சட்டப்பேரவை பொது தேர்தல் வரும் போது அப்போது உள்ள சூழலைப் பொறுத்து கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும். தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி என்ற பெயரில் பாஜகவின் மறைமுக ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதற்காகவே தவெகவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து வருகிறது" என்றார்.கே.பாலகிருஷ்ணன்
ஜெம் வீரமணி
விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் இழப்பீடு தொகையை அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது பிரபல தொழில் அதிபர் ஜெம் வீரமணி பாலியல் விவகாரங்கள் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு ஆண்டு காலமாக மூடி மறைக்கப்பட்ட இந்த விவகாரம் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் மறு விசாரணை நடத்தப்பட்டு தற்போது உண்மை வெளிவர தொடங்கியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
பாலியல் குற்றங்கள்
மதுராந்தகம், தாராபுரம்