அவங்க ஆட்சியில் கட்டியதை.. நாங்க திறக்குறோம்! அதானங்க உலக வழக்கம்! சமாளித்த அமைச்சர் ஷாஜகான்!

  • நாகப்பட்டினம்: முதலமைச்சரின் அரசுமுறைப் பயணங்களை எதிர்க்கட்சியினர் தேவையற்ற முறையில் அரசியலாக்குகின்றனர் எனவும், கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பணிகளைப் புதிய அரசு திறந்து வைப்பது வழக்கமான நிர்வாக நடைமுறைதான் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.

    Advertisement

    நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 474 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ₹53.76 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார்.

    Advertisement

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ₹600 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக இன்று ₹53 கோடிக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது.

    அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு வர வாய்ப்பு.. அமைச்சர் ஷாஜகான் பேச்சு

    தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 5 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ38,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இத்திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 3 புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுப் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    Advertisement

    நீண்ட நாள் கோரிக்கையான அக்கரைப்பேட்டை மேம்பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மின்விளக்குகள் மற்றும் இணைப்புச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படும். உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா வரும் 10-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெற உள்ளது.

    இவ்விழாவிற்காக அரசு சார்பில் விலையில்லா சந்தனக்கட்டை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என்பதால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    Advertisement
    அடுத்த லிஸ்ட் ரெடி.. தவெகவில் இணையும் அதிமுக எம்எல்ஏக்கள்.. அமைச்சர் ஷாஜகான் கருத்தால் சர்ச்சை

    டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக வேளாண்மைத் துறை அமைச்சருடன் கலந்தாலோசிக்கப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது; விரைவில் இது தொடர்பாகச் சாதகமான நல்ல அறிவிப்பு வெளியாகும். ஒரு ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் மற்றொரு ஆட்சி காலத்தில் முடிவடைந்தால் அதனை அப்போதைய முதலமைச்சர் திறந்து வைப்பது வழக்கம் தான்.

    ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களை முன்னாள் முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார். இது ஒன்றும் தவறு கிடையாது. காலம் காலமாக நடப்பது தான். இதனை எதிர்க்கட்சிகள் தான் தேவையற்ற பிரச்சனையாக உருவாக்குகின்றனர். மேலும், முதலமைச்சரின் அரசுமுறைப் பயணங்களை எதிர்க்கட்சியினர் தேவையற்ற முறையில் அரசியலாக்குகின்றனர் "இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English Summary

    Minister Shahjahan says inaugurating projects begun by the previous government is a routine administrative practice, not political controversy.