நாகையில் மெத்..இண்டர்நேசனல் கும்பலுக்கு தொடர்பு? பூபாலன் பின்னணியில் லாட்ஜ் ஓனர்! சிக்கிய ராஜ்குமார்

  • நாகை: சர்வதேச மதிப்பில் சுமார் 135 கோடி ரூபாய் அளவுக்கு போதைப் பொருள் பதுக்கியதாக நாகை மாவட்டம் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பூபாலன் மற்றும் அவருடைய நண்பர்கள் சுகன் சதீஷ் மணிகண்டன் ஆகியோர் வருவாய் புலனாய் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், பூபாலனின் கூட்டாளி ராஜ்குமார் என்பவருக்கு மத்திய வருவாய் புலனாய்வு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் .

    Advertisement

    நாகையில் இருந்து இலங்கைக்கு சர்வதேச போதைப்பொருளான மெத்தபெட்டமைன் கடத்துவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வு துறை திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    Advertisement

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நடுத்தெருவை சேர்ந்த பைனான்சியரான சுகன் என்பவர் வீட்டிற்கு மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் 4 கார்களில் வந்தனர்.

    மெத்தபட்டமைன்

    சுகன் லாட்ஜ் ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வரும் நிலையில் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின் போது இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடை கொண்ட 27 பாக்கெட்டுகளில் மெத்தபட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 135 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இதன் சர்வதேச சந்தை மதிப்பு 135 கோடி என்கின்றனர் அதிகாரிகள்.

    Advertisement

    தவெக பிரமுகர்

    தொடர்ந்து போதைப்பொருள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணைக்கு பிறகு இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நாகை மாவட்ட தவெக பிரமுகர் வழக்கறிஞருமான பூபாலன் என்பவரை கைது செய்தனர்.

    இலங்கைக்கு கடத்தல்

    விசாரணையில் பூபாலனின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும், அவர் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி சுகன் போன்றவர்கள் மூலம் நாகையிலிருந்து இலங்கைக்கு பல ஆண்டுகளாக போதை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்ட நிலையில் பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

    Advertisement

    நடிகர்களுக்கு தொடர்பு

    தொடர்ந்து இவர்களிடம் சுமார் 24 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்திலும் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலருக்கு இவர்கள் போதை பொருள் சப்ளை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்ற வருகிறது.

    மத்திய வருவாய் புலனாய்வு

    இந்த நிலையில் மேலும் பல முக்கிய புள்ளிகளுக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என வருவாய் புலனாய் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த வகையில் நாகை மாவட்டம் பிரதாப ராமபுரம், யாதவர் தெருவை சேர்ந்த பூபாலனின் கூட்டாளி ராஜ்குமார் என்பவருக்கு மத்திய வருவாய் புலனாய்வு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடத்தலில் தொடர்பு இருப்பதால் வருவாய் புலனாய் போலீசார் சம்மன் வழங்கியுள்ள நிலையில் ராஜ்குமார் தலைமறைவாக உள்ளார். இன்று அல்லது நாளை ராஜ்குமார் கைது செய்யப்பட்டு குற்றவாளியாக சேர்க்கப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    English Summary

    DRI has summoned Rajkumar in the Nagapattinam methamphetamine case involving TVK functionary Boobalan and others accused of international drug smuggling.