கஞ்சா கடத்திட்டாங்க.. சிஎம் விஜய்க்கு தெரியுமா? கடத்துனதே அவங்க கட்சி ஆளுதான்! பாய்ந்த் ஆக்‌ஷன்!

  • நாகை: சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் புழக்கம் என அப்போதைய ஆளுங்கட்சியான திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த தவெக தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கஞ்சா கடத்தல், பாலியல் வன்கொடுமை, மதுபான விற்பனை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் சிறைக்குச் செல்வதும், அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், கஞ்சா கடத்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வேதராண்யம் வடக்கு ஒன்றிய தவெக செயலாளர் அருண்பாண்டியன் ஒன்றிய செயலாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகி இருக்கிறார் விஜய். முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்பாக அதாவது தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    Advertisement

    போதை பொருள் புழக்கம், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு என திமுகவின் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்தால் பெண்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்படும், போதைப்பொருள் புழக்கம் ஒழிக்கப்படும் என கூறியிருந்தார்.

    ஆனால் தற்போது நிலைமை வேறு ஆக இருக்கிறது போதை பொருள் கடத்தல் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தமிழக வெற்றி கழகத்தினர் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். இதை அடுத்து உடனடியாக அவர்களை கட்சியிலிருந்து நீக்கி விட்டோம்.. நடவடிக்கை எடுத்து விட்டோம் என தமிழக வெற்றிக் கழகம் சொன்னாலும், அடுத்தடுத்து சிக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .

    Advertisement

    அப்படித்தான் தற்போது கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர். ஏற்கனவே இவர் மீது சாராய வழக்கு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தானிக்கோட்டகம் சோதனைச் சாவடி அருகே, வாய்மேடு காவல் நிலையம் ஆய்வாளர் பாரதிதாசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாய்மேடு காவல் நிலைய போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலான 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள், 6 செல்போன்கள் மற்றும் 2 மோடம்கள் கைப்பற்றப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக முத்துபேட்டையை சேர்ந்த சுதாகர், குமிழிப்பூண்டியை சேர்ந்த ஜெகன், தானிக்கோட்டகத்தை சேர்ந்த சக்திகுமார், வாய்மேடுவை சேர்ந்த அருண்பாண்டியன், பூபதி, கரூரை சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகிய 6 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இ

    Advertisement

    தில் வாய்மேடு பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன் தமிழக வெற்றிக் கழகத்தின் வேதராண்யம் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சாராயம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட அருண்பாண்டியன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது கஞ்சா கடத்தலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் தற்போது கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக மாவட்ட செயலாளர் சுகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். கஞ்சா கடத்திய தவெக ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    TVK removes Vedharanyam North Union Secretary Arunpandian after his arrest in a ₹60 lakh, 120 kg ganja smuggling case.