நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் அடித்துக்கொலை.. 8 கைதிகள் மீதும் வழக்குப்பதிவு!


  • நாகர்கோவில்: ​நாகர்கோவிலில் விசாரணைக் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 3 சிறை காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    நாகர்​கோ​வில் கிளைச்​சிறை​யில் உயிரிழந்த விசா​ரணைக் கைதி சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயம் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சிறைக் காவலர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    கன்​னி​யாகுமரி மாவட்​டம் வடக்​கு ​தாமரைகுளம் அருகே நாராயணன்​புதூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் 35 வயதான சபரிவர்​மன். இவர் அப்​பகு​தி​யில் கடை நடத்தி வந்​தார். கடந்த 9 ஆம் தேதி மதி​யம் 1.30 மணி​யள​வில் இவரது கடை​யில் தென்​தாமரகுளம் போலீ​சார் சோதனை நடத்​தினர்.

    அப்போது அரசால் தடை செய்​யப்​பட்ட குட்கா பொருட்​கள் இவரது கடை​யில் இருந்​த​தாகக் கூறி, சபரிவர்​மனை கைது செய்து நாகர்​கோ​வில் சிறை​யில் அடைத்​தனர். கடந்த 4 நாட்​களாக அவர் விசாரணை கைதி என்ற நிலை​யில் இருந்​துள்​ளார்.

    சிறை அறை​யில் நேற்று அதி​காலை​யில் சபரிவர்​மன் மயங்​கிய நிலை​யில் கிடந்​த​தாகக் கூறப்​படு​கிறது. போலீசார் அவரை ஆசா​ரிபள்​ளம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு மருத்​து​வர்​கள் பரிசோ​தித்​த​போது சபரிவர்​மன் ஏற்​கெனவே உயி​ரிழந்​தது தெரிய​வந்​தது. இத்​தகவல் அவரது குடும்​பத்​தினருக்கு தெரிவிக்​கப்​பட்​டதும் அவர்​கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    Advertisement

    சபரிவர்​மனை போலீ​சார் கடுமையாகத் தாக்கியதாக​வும், அவருக்கு எந்​த​வித நோய் பாதிப்​பும் கிடை​யாது எனவும் உறவினர்​கள் குற்​றம்​சாட்​டினர். மருத்​து​வ​மனை வளாகத்​தில் திரண்டு அவர்​கள் போராட்​டம் நடத்​தினர்.

    இந்நிலையில் மாவட்ட நீதிபதி முன்னிலையில் சிறையில் உயிரிழந்த சபரிவர்மனின் உடற்கூறு ஆய்வு பணிகள் நடைபெற்றது. அதன் அறிக்கை வெளியாகி உள்ளது.அதில் அவரது உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. கை, கால்கள், நெஞ்சு, தலை, கழுத்தின் பின் பகுதியில் காயமும், வலது கையில் முறிவும் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது உடலில் கை, கால்கள் கட்டிப்போட்டு தாக்கியதற்கான அடையாளமும் இருந்தது தெரியவந்துள்ளது.

    Advertisement

    சிறையில் விசாரணை கைது சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் சிறைக் காவலர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​நாகர்​கோ​வில் கிளைச்​சிறை​யின் தலைமை வார்டன் ஜெகன், சிறை வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவுடை நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.விஷ்ணு, சாரதி, ஜெகன் உள்ளிட்ட 8 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 8 பேரும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள கைதிகள் என கூறப்படுகிறது.

    FIR மாற்றி அமைக்கப்பட்டு புதிதாக கூடுதல் பிரிவுகளை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிவர்மன் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாகர்கோவிலில் பரபரப்பு நிலவுகிறது.

    English Summary

    A case has been registered against eight prisoners in connection with the beating death of undertrial prisoner Sabarivarman in Nagercoil. Three prison guards have already been arrested in this case.