கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்.. தலைமறைவாக இருந்த தவெக நிர்வாகி கைது!

  • நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிக்கு லிஃப்ட் தருவதாகச் சொல்லி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த தவெக முன்னாள் நிர்வாகி கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நாகர்​கோவி​லில் உள்ள கல்​லூரி​யில் படிக்கும் மாணவி ஒரு​வர், கன்னியாகுமரி மத்​திய மாவட்ட தவெக இளைஞர் அணி நிர்​வாகி​யான தனது தோழியுடன் அண்மையில் ஒரு நாள் மாலை பேருந்​துக்​காக காத்​திருந்​தார். அப்​போது, தக்கலை பகுதியைச் சேர்ந்த தவெக மத்​திய மாவட்ட தவெக செயற்​குழு உறுப்​பினர் கிறிஸ்டோபர் அந்த வழி​யாக காரில் வந்​துள்ளார்.

    அவரது காரில் இருவருக்கும் லிஃப்ட் கொடுத்துள்ளார். முதலில் தனது ஊரான மூலச்சலில் தவெக பெண் நிர்​வாகியான மாணவி இறங்​கிக்​கொண்​டார். மற்றொரு கல்​லூரி மாணவியை அவரது ஊரில் கொண்டு விடுவ​தாக கூறி அழைத்​துச் சென்ற கிறிஸ்டோபர், பாதி வழி​யில் பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்பியபோது கண்ணாடியை துடைப்பது போல பாலியல் தொல்லை கொடுத்​துள்​ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி, அவரை கடுமையாக திட்​டி​விட்டு இறங்​கிச் சென்​றுள்​ளார்.

    சோகத்தில் செம்மலை.. பதவி கொடுக்காத தவெக தலைமை.. அலர்ட் மோடில் காய் நகர்த்தும் தமிழன் பார்த்திபன்!

    இது​குறித்து, தவெக நிர்​வாகி​யான தனது தோழி​யிடம் கூறி மாணவி அழுதுள்​ளார். இதையடுத்து அவர் கொற்​றிக்​கோடு காவல் நிலை​யத்​துக்கு மாணவியை அழைத்​துச் சென்று புகார் அளித்​துள்​ளார். போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் பஞ்சாயத்து பேசி பண பேரம் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவிக்கு நேர்ந்த துயரம் குறித்த தகவல் சமூக வலை​தளங்​களில் பர​வி, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

    இதையடுத்து மாவட்ட எஸ்.பி அன்​சுல் நாகர் உத்​தர​வின் பேரில், தக்​கலை மகளிர் போலீ​சார் விசா​ரணை நடத்தி, கிறிஸ்டோபர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரைத் தேடி வந்தனர். இந்த பாலியல் புகார் விவகாரத்தை தொடர்ந்து, தவெகவில் இருந்து கிறிஸ்டோபர் நீக்கப்பட்டார். இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த கிறிஸ்டோபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    English Summary

    Christopher, a former office-bearer of the TVK, has been arrested for sexually harassing a college student whom he had offered a lift while she was waiting for a bus in Kanyakumari district.