மரண காமெடி.. தலைக்கு மேல் பறந்த ட்ரோன்.. சாக்கடையில் குதித்து தப்பிக்க முயன்ற சூதாட்ட கும்பல்!

  • நாமக்கல்: நாமக்கல் அருகே பள்ளிபாளையம் பகுதியில் ஆற்றங்கரையோரம் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல், திடீரென தலைக்கு மேல் ட்ரோன் கேமரா பறப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தது. அதிலும் ஒருவர் காவல்துறையினரிடம் இருந்த்யு தப்பிக்க சாக்கரையில் குதித்து தப்பியோட முயன்ற காட்சி உச்சக்கட்ட காமெடியாக மாறியது.

    Advertisement

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆற்றங்கரையோரம் முருகன் கோயில் பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. ​இதனைத் தொடர்ந்து, குமாரபாளையம் டிஎஸ்பி கௌதமன் மற்றும் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

    Advertisement

    அடர்ந்த புதர் மற்றும் ஆற்றங்கரை பகுதி என்பதால், குற்றவாளிகளைக் கண்டறிய காவல் துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் வான்வழி கண்காணிப்பில் ஈடுபட்டனர். ​அப்போது, அடர்ந்த புதர் மறைவில் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடி சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது ட்ரோன் கேமராவில் தெளிவாகச் சிக்கியது.

    ​திடீரெனத் தங்கள் தலைக்கு மேலே ட்ரோன் கேமரா பறப்பதை கண்ட சூதாட்டக் கும்பல் அதிர்ச்சியடைந்தது. காவல் துறையினர் வந்துவிட்டதை உணர்ந்த அவர்கள், அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் ஒரு நபர், ட்ரோனிடமிருந்து தப்பிக்க வேறு வழியின்றி ஆற்றங்கரையோரம் இருந்த சாக்கடையில் குதித்து தப்பியோட முயன்ற சம்பவம் அங்கு பெரும் காமெடியாக மாறியது.

    Advertisement

    ​இருப்பினும், உஷாரான காவல் துறையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோரைக் கையும் களவுமாகப் பிடித்தனர். ​கைது செய்யப்பட்டவர்களைப் பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய ரூ.10,000 ரொக்கப் பணத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    ​ட்ரோன் கேமராவைப் பார்த்து சூதாட்டக் கும்பல் அலறியடித்து ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கொரோனா பரவலின் போது ட்ரோன் கேமராவுக்கு பயந்து ஓடிய நபர்களை நினைவுபடுத்தியது.

    English Summary

    Gamblers Spot Police Drone Near Pallipalayam, Attempt Hilarious Escape route