நாமக்கல்: செஞ்சி சிறுமி காணாமல் போன அன்று என்ன ஆடை அணிந்திருந்தாரோ அதே ஆடையில்தான் நான் நாமக்கல்லில் அவரை பார்த்தேன் என அங்கன்வாடி சமையலர் பவானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பாலிமர் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என் பெயர் பவானி. நாமக்கல் மாவட்டம் கோணானூர் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக சமையல் அமைப்பாளராக பணியாற்றி வருகிறேன்.
கடந்த 23 ஆம் தேதி கோணானூரில் இருந்து தத்தகிரி வழியாக பச்சுடியாம்பட்டி சத்துணவு மையத்திற்கு காய்கறிகளை கொண்டு போனேன். அன்றைய தினம் தத்தகிரி முருகன் கோயிலுக்கு கொஞ்சம் முன்னாடி, செஞ்சியில் காணாமல் போன குழந்தையை நான் பார்த்தேன். நான் பார்த்த போது அந்த குழந்தைதான் செஞ்சியில் காணாமல் போனது என்ற விவரம் தெரியாது. கடந்த 29ஆம் தேதி இரவு என் மகள் செல்போனில் அந்த பெண்ணின் புகைப்படத்துடன் சிறுமி மாயம் என்ற விவரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் நானும் வாங்கி பார்த்தேன். நான் பார்த்ததும் இதே பொண்ணுதானே என எனக்கு நினைவுக்கு வந்தது. உடனே காவல் கட்டுப்பாட்டு மையத்தின் 100 என்ற எண்ணுக்கு போன் செய்தேன். அன்று இரவே சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் இருந்து எனது ஊர், பெயர், முகவரி எல்லாத்தையும் கேட்டார்கள், நானும் கொடுத்தேன். இதைத் தொடர்ந்து சேந்தமங்கலம் காவல் நிலையம், நாமக்கல் காவல் நிலையம் ஆகியவற்றில் இருந்து போன் வந்தது. அடுத்த நாள் காலையில் அதாவது 30ஆம் தேதி சிபிசிஐடி தலைமையிலான குழுவினர் என்னை வந்து பார்த்தார்கள். அவர்களது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். எந்த இடத்தில் பார்த்தேன் என்பதையும் அவர்களுக்கு தெளிவாக சொன்னேன். இந்த நிலையில் செஞ்சி சிபிசிஐடி முத்துக்குமார் தலைமையில் ஒரு டீம், கடந்த 3 ஆம் தேதி நான் பணியாற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 2 மணி நேரம் எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விசாரணை நடத்தியிருக்கிறார். அது போல் சத்துணவு உதவியாளரிடமும் அரை மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறார். அந்த இருவரிடமும் அந்த அதிகாரி கேட்ட கேள்விகள் எல்லாமே என்னை மன உளைச்சலுக்குள்ளாகியது. ஏன்டா இந்த தகவலை நாம் சொன்னோம் என்கிற அளவுக்கு அச்சுறுத்தும் விதமாக விசாரணை செய்திருக்கிறார்கள். என்னை பற்றி விசாரணை நடத்தியதை எனது பள்ளித் தலைமையாசிரியர், ஏஇஓவுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஏஇஓ, சிஇஓ, டிஇஓவுக்கு தகவல் பண்ணியிருப்பார். இத்தனை பிரச்சனைக்கு மத்தியில் எனது பிடிஓ அலுவலகத்தில் நான் எப்படி வேலைக்கு செல்வேன்? நாம் சொல்லும் தகவல் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் சொல்கிறோம். இனி எந்த நம்பிக்கையில் ஒரு தகவலை சொல்வார்கள்? பள்ளிக்கு வேலைக்குச் செல்லவே எனக்கு பயமாக இருக்கிறது. என் குழந்தைகளுக்கு என்ன நடக்கும்? குழந்தைகளுடன் வெளியே போனால் என்ன ஆகும் என்ற அச்சம் உள்ளது. துப்பு கொடுத்த என்னை பற்றி என் பள்ளியில் இவ்வளவு விசாரணை செய்திருக்கிறார்கள். தயவு செய்து இதுகுறித்து தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதை நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அரசு பணியில் நான் இருப்பது தெரிந்தும், எனது தலைமை ஆசிரியரிடம் 2 மணி நேரம் எனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? என் கேரக்டரையே கேள்வி எழுப்பிய நிலையில் இனி பொதுமக்கள் எப்படி துணிந்து இது போல் விஷயங்களை சொல்ல முன் வருவார்கள்? "இந்த விஷயத்தை ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள், யாரிடமும் சொல்ல வேண்டாம்" என சொன்ன சிபிசிஐடி, இதை எதற்காக என் பள்ளி வரை கொண்டு வந்தார்கள் என்பது குறித்து எனக்கு தெரிய வேண்டும். அந்த குழந்தையை நான் பார்க்கும் போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணுடனும் 55 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவருக்கு இடையில் அந்த குழந்தை நின்று கொண்டிருந்தது. நான் பார்த்த இடத்தில் அந்த குழந்தை அழவில்லை. சிறுமி காணாமல் போனப்ப போட்டிருந்த அதே ஆடையுடன்தான் நான் அந்த குழந்தையை பார்த்தேன். சிபிசிஐடி விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தும் என்னை ஏன் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். பொதுவாக ஒரு சம்பவத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை சிபிசிஐடிதான் கண்டுபிடித்து சொல்லணும் சொல்வாங்க, ஆனால் இப்ப இந்த சிபிசிஐடி போலீஸின் விசாரணைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதே எனக்கு திடுக்கிடும் மர்மமாக இருக்கிறது. இவ்வாறு அந்த பெண் தெரிவித்துள்ளார்.செஞ்சியில் காணாமல் போன சிறுமி
"செஞ்சி சிறுமியை பார்த்ததாக சொன்னேன்! சிபிசிஐடி என் நடத்தையை அசிங்கப்படுத்திட்டாங்க.." பெண் புகார்
100-க்கு போன் செய்தேன்
சிபிசிஐடி தலைமையிலான குழு
செஞ்சி சிபிசிஐடி போலீஸார்
என் புள்ள உசுரோடதான் இருக்கா! செஞ்சி வழக்கில் தாயின் திடீர் நம்பிக்கை.. பின்னணியில் என்ன நடந்தது?
மன உளைச்சலாக இருக்கு
பிரச்சனை மேல் பிரச்சனை
அச்சமா இருக்கு
2 மணி நேரம் விசாரணை
ரகசியம் காக்கப்படவில்லை
அதே உடையில் இருந்த சிறுமி
மர்மமாக இருக்கு