இப்படி வதந்தி பரப்புவது யாருங்க.. பதிவுத்துறை தனியார்மயமா.. கடுகடுத்த லோகேஷ் தமிழ்செல்வன்

  • நாமக்கல்: திமுக, அதிமுகவுக்கு மாற்றம் என கூறி தவெக ஆட்சிக்கு வந்தது. கொடுத்த தேர்தல் அறிவிப்புகளை விட, அறிவிக்காத சர்ச்சைகளையே அதிகம் அமல்படுத்து வருகிறார்கள். அனைத்து கட்சிகளும் தவெகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். பதிவுத்துறையை தனியார்மயமாக்க முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் விளக்கமளித்துள்ளார்.

    Advertisement

    நாமக்கலில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எதற்காக இந்த வதந்தி பரவுகிறது என்றே தெரியவில்லை. மாடல் ரிஜிஸ்ட்ரேஷன் ஹப் என்பது 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்ய வருவோருக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க வேண்டும். எந்த தொந்தரவும் இருக்க கூடாது என்பதே நோக்கம். இதை எந்த வகையிலும் தனியார்மயமாக்க போவதில்லை.

    Advertisement

    வதந்தி பரப்புவது யார்

    எல்லா மாடல் பதிவு அலுவலகங்களிலும் சார் பதிவாளர் தான் அமரப் போகிறார். அரசு அலுவலர்கள் தான் எல்லா பணியிலும் இருப்பார்கள். மையங்களில் கொடுக்கும் இதர சேவைகளுக்கு மட்டுமே தனியாருக்கு டெண்டர் கோரியுள்ளோம். இதன் மூலம் பத்திரப்பதிவாளர்கள், அலுவலர்கள் ஆள் குறைப்பு நடவடிக்கை இல்லை. தனியார்மயம் நோக்கமில்லை. அரசுக்கு எந்த இடத்திலும் பத்திரப்பதிவை தனியார்மயமாக்கும் நோக்கமில்லை என்பதை தெளிவாக சொல்கிறோம்.

    ஈரோட்டில் ஆட்களை குறைக்கிறார்கள், மாற்றம் செய்கிறார்கள் என்றெல்லாம் வதந்தி பரப்புகிறார்கள். ஏன் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என தெரியவில்லை. ஆதாரமே இல்லாமல் பேசி கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை. ஆள்குறைப்பு, தனியார்மயம் எதுவும் செய்ய போவதில்லை. ஜிஎஸ்டியில் எந்த சரிவும் இல்லை. மற்ற மாநிலங்களில் இருந்து வரும் வருமானத்தை பார்க்க வேண்டும். நாம் 3 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளோம்.

    Advertisement
    பெருமாள் முருகன் கிளப்பிய பூகம்பம்.. திமுக திமுகன்னு சொல்லாதீங்க! விஜய்க்கு கோவி.செழியன் பதில்

    வருமானத்தை பெருக்க

    சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. விரைவில் நிறைய மாற்றங்களை பார்ப்பீர்கள். சில சார் பதிவாளர் அலுவலகங்களில் இணையம் மெதுவாக இருக்கிறது. ஒரு மாதத்தில் சர்வர் பிரச்சனைகளை சரி செய்து, சேவையை விரைவுபடுத்துவோம். பதிவுத்துறையில் வருமானத்தை பெருக்கி, காகிதமில்லாத சேவையை கொண்டு வரவுள்ளோம். மக்களுக்கு தொந்தரவில்லாமல், ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். ஒரு சில இடங்களில் வரும் பிரச்சனைகளை வைத்து கொண்டு மொத்தமாக குறை சொல்ல வேண்டாம்" என்றார்.

    Topics: #registration

    English Summary

    Minister Lokesh Tamilselvan said, Government has no plan to privatization Registration department. its rumour.