நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பெண் குழந்தைகள் சென்றுள்ளனர். அவர்கள் ராங் சைடில் சென்ற தனியார் பள்ளி பேருந்து மீது மோதினர். இதில 19 வயது மாணவி உள்பட 4 பெண் குழந்தைகள் உயிரிழந்தனர். இதற்கு அரசு மனிதாபிமான அடிப்படையில் தலா 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. இதனை ஏற்கும் நெட்டிசன்கள், தனியார் பள்ளி பேருந்து டிரைவர் மீது எந்த தவறும் இல்லாத போது, ஏன் அவர் மீது வழக்கு போட வேண்டும்.. அவரை கைது செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறது. சர்வ சாதாரணமாக விதிமீறல்கள் அதிகமாகி விபத்துகள் ஏற்படும் நிலையில் இதற்கு என்ன கடுமையான நடவடிக்கை எடுக்க போகிறது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
விபத்து எப்படி நடந்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சக்கராம்பாளையம் போயர் தெருவைச் சேர்ந்த சேகர்-அமுதா தம்பதிக்கு நிவேதா(17), தனுஸ்ரீ(13), அபிநயா(12) ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார்கள். இவர்களை ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் சேகரின் தம்பி ரமேஷ்பாபு மகள் சுபிதா என்ற கலைச்செல்வி (19) படித்து வருகிறார். கலைச்செல்வி தினமும் தனது பெரியப்பா மகள்களை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று வந்தாராம்.
அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த கலைச்செல்வி பின்னர் இருசக்கர வாகனத்தில் 3 பேரையும் பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார்கள். ராசிபுரம்-திருச்செங்கோடு சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சக்கராம்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் பிரிவு சாலையை கடக்க முயன்றார்கள். அப்போது ராசிபுரத்தில் இருந்து சங்ககிரி நோக்கிவேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே கலைச்செல்வி, அபிநயா உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிவேதா, தனுஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே நிவேதாவும், தனுஸ்ரீவும் உயிரிழந்தனர். இதன் மூலம் இந்த கோர விபத்தில் ஒருகுடும்பத்தை சேர்ந்த 4 மாணவிகளும் உயிரிழந்தார்கள். இந்நிலையில், நாமக்கல் விபத்தில் 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தில் கல்லூரி பஸ் டிரைவர் பிரவீனை (வயது 23) போலீசார் நேற்று கைது செய்தனர். அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், இறப்பு ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்லூரி பஸ் டிரைவர் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இதனிடையே விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவிகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள முதல்வர் ஜோசப் விஜய், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இந்த நாமக்கல் திருச்செங்கோடு விபத்து குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வருகிறார்கள். ஒரு நெட்டிசன் கூறுகையில், விதிகளை மீறியவர்களுக்கு மக்கள் பணம் தரப்பட்டுள்ளது. விபத்திற்கு காரணமற்ற டிரைவர் மேல் வழக்கு போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், இருசக்கர வாகனத்தில் நால்வர் பயணித்தது குற்றம். தலைக்கவசம் இல்லாமல் பயணித்தது குற்றம். குற்றச்செயல் புரிந்து உயிர் விட்டவர்களுக்கு எதற்கு மக்களின் வரிப்பணம். அந்த பேருந்து ஓட்டுநரை கைது செய்தது மூடத்தனம் என்று கூறியுள்ளார். மூன்றாவது நெட்டிசன் கூறுகையில், படித்தவர்களே சாலையில் சட்டத்தை மதிப்பது இல்லை.காலையில் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளையும்,மனைவிகளையும்,குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களையும் பாருங்கள்,பொறுமை என்பதே இருக்காது. அரசாங்கத்தை குற்றம் சொல்லி என்ன பயன்?சாலை விதிகளையும், சட்டத்தையும் மதியுங்கள் என்று கூறியுள்ளார். நான்காவது நெட்டிசன் கூறுகையில், நான்கு பேருடைய இழப்பு வலி மிகுந்ததுதான் ..ஆனால் ஒரே ஸ்கூட்டரில் நான்கு பெண்களும் சென்றது ..விதிகளை மீறி பேருந்துக்கு முன் கடக்க முயன்றது ..தவறு என்பது உணரவேண்டும் .. அதற்க்கு இழப்பீடு கொடுத்து அந்த தவறை சரி என்பது முட்டாள்தனம் என்று விமர்சித்துள்ளார். ஐந்தாவது நெட்டிசன் கூறும் போது, 4 இளம் உயிர்கள்...மனம் கனமாக உள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள். இருப்பினும், பள்ளி சிறுமியர் கையில் வண்டியை கண்டமேனிக்கு ஓட்டக் கொடுத்த பெற்றோர் கைது செய்யப்பட்டால் தான் இதுபோன்று மற்ற பொறுப்பற்ற பெற்றோருக்கு அறிவுறுத்தலாக அமையும் என்று கூறியுள்ளார். நெட்டிசன்களின் பல்வேறு கருத்துக்களை பார்ப்போம். கண்டபடி road cross பன்ன கூடாது. எங்கு பன்ன வேண்டுமோ அங்கு தான் பன்ன வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். சாலையை கடப்பதற்கு முன் முன், பின் எதிர் பார்க்க வேண்டும். இதுலாம் நம்ம நாட்டுல யார் கடைபிடிக்கிறார்கள். இத்தனை காணொளி இருந்தும் அவரை ஏன் கைது செய்ய வேண்டும்? தேவையில்லாத அலைச்சல் . எந்த விபத்து நடந்தாலும் பெரிய வாகனம் மீது தான் தவறு என்ற பொதுப்புத்தியை மாற்ற வேண்டும். இதில் ஓட்டுநர் மீது எந்த தவறும் இல்லை.. இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது தான் முழு தவறு 4 பேர் வந்தது, நின்று 2 பக்கமும் பாக்காமல் கை காட்டாமல் நேராக சென்று மோதியது அந்த பொண்ணுங்க தான்.. இதில் ஓட்டுநர் சடனாக என்ன செய்ய முடியும் . பெற்றோர்கள் வண்டியை கொடுத்து இருக்க கூடாது என நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.சாலையை கடக்க முயற்சி
4 பேரும் உயிரிழப்பு
டிரைவர் கைது
தலா 3 லட்சம் நிவாரணம் தந்த முதல்வர் விஜய்
தவறு யார் மீது
பெற்றோரை கைது செய்யுங்கள்
மாணவிகள் மீது தான் தவறு