நாமக்கல்: தமிழகத்தில் மேற்கு பகுதியில் அவ்வப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. நாமக்கல் ராசிபுரத்தில் கனமழை பெய்தது. ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மழை நீர் வெள்ளமாக தேங்கி, இதனால் யாரும் நடமாட முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உள்பட மொத்தம் 3 அமைச்சர்கள் உள்ளனர். ஆனாலும் மக்களின் அத்தியாவசிய தேவையிலேயே அலட்சியமாக செயல்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி தவெக ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சர் விஜய்யுடன் 35 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. தவெகவின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அமைச்சரவையில் அவருக்கு சுகாதாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, சுகாதாரத்துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறையை சீரமைப்போம். அமைச்சர்கள், அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவார்கள் என்று அவர் கூறியிருந்தார். அதே மண்டலத்தில் உள்ள சீனியர் அமைச்சர் செங்கோட்டையன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றார். அருண்ராஜின் சொந்த மாவட்டத்தில் நிலைமை இன்னும் மோசம். கொங்கு மண்டலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. ராசிபுரம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை வளாகம், சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் நோயாளிகள், அவர்களுடன் வந்தவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் நடப்பதற்கு கூட சிரமப்படுகிறார்கள். நோயாளிகள் வீல்சேர் மூலம் தான் மற்ற சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இதனால் அங்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு மழைநீரை வெளியேற்றி நோயாளிகளை பாதுகாக்க வேண்டும், மேற்கொண்டு மழை நீர் தேங்காதவகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையை கையில் வைத்துள்ள அருண்ராஜின் சொந்த மாவட்டத்திலேயே இந்த அவல நிலை உள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு மொத்தம் 3 அமைச்சர்கள் உள்ளனர். ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்செல்வன் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக உள்ளார். குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற விஜயலட்சுமி பால்வளத்துறை அமைச்சராக உள்ளார். இத்தனை அமைச்சர்கள் இருந்தும் பயனில்லை என்று நாமக்கல் மக்களும், சமுக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கிறார்கள்.வெள்ளத்தில் மிதக்கும் ராசிபுரம் அரசு மருத்துவமனை
3 அமைச்சர்கள் இருந்தும் பயனில்லை
மக்கள் வேதனை