அணு ஆயுத அட்டாக்.. இந்தியரின் ஒரே ஒரு போஸ்ட்டால் கடுப்பான டிரம்ப், நெதன்யாகு.. போரே மூண்டுடும்!

  • நியூயார்க்: இந்தியாவில் இருந்து போடப்பட்ட ஒரே ஒரு ட்விட்டர் போஸ்ட் சர்வதேச அரசியலை உலுக்கி உள்ளது. முக்கியமாக அணு ஆயுத போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு தற்போது வெறும் வான்வழித் தாக்குதல்களுடனோ அல்லது ஹார்முஸ் ஜலசந்தியின் மோதலுடனோ முடிந்துவிடவில்லை. ஏவுகணைகளும் ட்ரோன் தாக்குதல்களும் சர்வதேச அளவில் முக்கிய தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்து வருகின்றன.

    Advertisement

    அதே வேளையில், சமூக ஊடக தளங்களில் மீம்ஸ்கள், வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்கள் மூலமாக கண்ணுக்குத் தெரியாத மற்றொரு ஆன்லைன் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இணையத்தில் பரப்பப்படும் போலியான போஸ்டுகளும், வீடியோக்களும், போட்டோக்களும் உலகளாவிய போர் வியூகங்களையும், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளையும் நேரடியாகப் பாதிக்கும் நிலைக்கு வந்துள்ளன.

    சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு, இணையப் ஃபேக் நியூஸ்கள் எப்படி சர்வதேச அரசியல் தலைவர்களையே தவறாக வழிநடத்துகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஈரானின் அணு ஆயுதத் திட்டம் குறித்து பொய்யான ஒரு போஸ்ட், அடுத்த சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறி உள்ளது.

    Advertisement

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உரையிலும், அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர் மைக் வால்ட்ஸின் சமூக வலைதளப் பதிவிலும் இந்த பொய்யான போஸ்ட் இடம்பெற்று பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.

    போலிச் செய்தி

    ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலையில், இந்தியாவில் செயல்படும் ஒரு எக்ஸ் அக்கவுண்ட் ஒரு அதிர்ச்சிகரமான தகவலைப் பதிவிட்டது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.

    அதாவது, "அமெரிக்காவும் இஸ்ரேலும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வரை ஈரான் தனது அணு ஆயுத முயற்சியை ஒருபோதும் கைவிடாது" என்று அவர் கூறியதாக அந்த செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இந்த வாசகத்துடன் தளபதி வாஹிதியின் புகைப்படமும், AI மூலம் உருவாக்கப்பட்ட அணுகுண்டு வெடிப்பு காட்சியும் இணைக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    உண்மையில் அஹ்மத் வாஹிதி அவ்வாறு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதற்கும், ஈரான் அணு ஆயுதம் தயாரித்துவிட்டது என்பதற்கும் எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை. இருப்பினும், இந்தத் தகவல் காட்டுத்தீ போல் பரவுவதை எவராலும் தடுக்க முடியவில்லை. முக்கியமாக ஈரானின் அரசு அக்கவுண்டு போல பொய்யான பெயருடன் இந்த அக்கவுண்ட் அந்த போஸ்டை செய்தது. மாறாக அந்த அக்கவுண்ட் இந்தியாவில் இருந்து இயங்கும் ஒரு fake அக்கவுண்ட் ஆகும்.

    இந்தியா முதல் இஸ்ரேல் பிரதமர் வரை

    சுமார் 1.75 லட்சம் பின்தொடர்பாளர்களைக் கொண்ட இந்த போலி எக்ஸ் கணக்கில் தோன்றிய இப்பதிவு, இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 82,000 பின்தொடர்பாளர்களைக் கொண்ட மற்றொரு இந்தியக் கணக்கின் மூலம் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பகிரப்பட்டது.

    Advertisement

    அங்கிருந்து இந்த வதந்தி சர்வதேச எல்லையைத் தாண்டியது. இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத்தின் ஆதரவு கணக்கான மொசாத் கமெண்டரி என்ற பிரபல எக்ஸ் கணக்கு இத்தகவலை ஷேர் செய்தது. ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையை நாடாமல் நேரத்தை வீணடிப்பதாக அது குற்றம்சாட்டியது. அடுத்த அரை மணி நேரத்தில், இஸ்ரேலின் சேனல் 14 தொலைக்காட்சி, ஈரான் அணு குண்டு தயாரிப்பதை முதல்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது என்று ஒளிபரப்பியது.

    இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமரின் மகனும் அரசியல் விமர்சகருமான யாயிர் நெதன்யாகு இதைத் தனது பக்கத்தில் பகிர்ந்தார். அடுத்த மூன்று மணி நேரத்திற்குள், ஜெருசலேமில் உள்ள மவுண்ட் ஹெர்சலில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அணு ஆயுத நோக்கத்திற்கு இதுதான் சான்று எனக் கூறி இந்த போலி செய்தியை சுட்டிக்காட்டினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை பற்றி உடனே இஸ்ரேல் தலைவர்களுடன் பேசினார்.

    Advertisement

    அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் தாக்கம்

    வாஷிங்டனிலும் இந்த வதந்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் ஐ.நா தூதர் மைக் வால்ட்ஸ், பல ஆண்டுகளாக எல்லோருக்கும் தெரிந்த உண்மையை ஈரான் இறுதியாக ஒப்புக்கொண்டுள்ளது என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அமெரிக்க செனட்டர் ரிக் ஸ்காட் இதனைப் பகிர்ந்ததுடன், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியும் இதனை விவாதப் பொருளாக மாற்றியது.

    ஈரான் மறுப்பு

    ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பஹாயி இந்த வைரல் பதிவை நிராகரித்தார். இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்களின் ஒரு பகுதி இது.. நாங்கள் அப்படி போஸ்ட் எதுவும் போடவில்லை.. அது பொய்யான கணக்கு.. என்று குறிப்பிட்ட அவர், கடந்த இருபது ஆண்டுகளாக ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்த இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.

    இந்தியாவில் உள்ள Fake கணக்கு ஒன்றில் போடப்பட்ட பொய்யான போஸ்ட் சர்வதேச அளவில் அணு ஆயுத போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    How a Fake Iran Nuclear Post from an Indian X Account Fooled Netanyahu and Trump