நியூயார்க்: ஒரு காலத்தில் இந்திய இளைஞர்களின் மிகப்பெரிய கனவாக இருந்தது "அமெரிக்க வாழ்க்கை". லட்சங்களில் சம்பளம், பளபளப்பான கார், அமெரிக்க புறநகரில் சொந்தமாக ஒரு பெரிய வீடு, நிம்மதியான எதிர்காலம்.. இவைதான் பல தலைமுறை பொறியாளர்களை அமெரிக்காவை நோக்கி இழுத்தன.
ஆனால், 2026-ன் தற்போதைய கள யதார்த்தம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. அமெரிக்காவில் நிலவும் தீவிர வேலை இழப்புகள் (L, நாளுக்கு நாள் இறுக்கப்படும் விசா கெடுபிடிகள், மற்றும் தாங்க முடியாத பணவீக்கம் காரணமாக, பல்லாயிரக்கணக்கான இந்திய ஹெச்-1பி (H-1B) பணியாளர்கள் தாங்கள் வாங்கிய சொத்துகளையும் கார்களையும் அப்படியே போட்டுவிட்டு, வெறும் கையோடு தாய்நாடு திரும்பும் அவல நிலை உருவாகியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர், டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சுமார் ஆறரை ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றி, ஆண்டுக்கு $99,000 (சுமார் ₹95 லட்சம்) சம்பாதித்து வந்தார். ஆனால், அவரது நிரந்தரக் குடியுரிமைக்கான I-140 மனு நிராகரிக்கப்பட்ட அடுத்த கணமே, அவரது வாழ்க்கை இருண்டுபோனது. விசா காலம் முடிந்த நிலையில், உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. *"அங்கேயே தங்கியிருந்தால் மாதம் $1,800 வாடகை கட்ட வேண்டும். என் I-140 நிராகரிக்கப்பட்டதும், தொடர்ந்து போராடுவதில் அர்த்தமில்லை என்று உணர்ந்தேன். ஒரே இரவில் பெட்டிகளைக் கட்டிக்கொண்டு விமானம் ஏறிவிட்டேன். நான் கிளம்பிய பிறகு, எனது காரை நண்பர்கள் பழைய இரும்பு எடைக்கு விற்றனர்; என் வீட்டு சாமான்கள் அனைத்தும் குப்பையில் வீசப்பட்டன,"* என்று ஹைதராபாத் திரும்பிய அந்த நபர் வேதனையுடன் விவரித்துள்ளார். தற்போது அவர் ஹைதராபாத்தில் ஆண்டுக்கு ₹35 லட்சம் ஊதியத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். இது கிரணின் தனிப்பட்ட கதை மட்டுமல்ல; அமெரிக்காவின் டெக்சாஸ், கலிபோர்னியா, வாஷிங்டன் போன்ற பகுதிகளில் உள்ள ஏராளமான இந்திய மென்பொருள் பொறியாளர்களின் இன்றைய நிலை இதுதான். இந்திய ஐடி வல்லுநர்கள் அதிகளவில் வசிக்கும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மெக்கின்னி, பிரிஸ்கோ, புரோஸ்பர், செலினா போன்ற நகரங்களில் வீடு விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது. நாடு தழுவிய ஜப்திகள்: 2026 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, அமெரிக்கா முழுவதும் 40,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கடன் தவணை கட்ட முடியாமல் வங்கி ஜப்திக்கு ஆளாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 12.83% அதிகம். டெக்சாஸில் கடும் தாக்கம்: குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தில் மட்டும் ஒரே மாதத்தில் 4,961 வீடுகள் வங்கி ஜப்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 43.46% என்ற பிரம்மாண்ட உயர்வாகும். இந்தியர்கள் பல லட்சம் டாலர்கள் வீட்டுக் கடன் வாங்கி கட்டிய சொத்துக்களின் மதிப்பு தற்போது $100,000 வரை சரிந்துவிட்டதால், வீட்டை விற்றாலும் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டின் சாவியை வங்கியிடமே ஒப்படைத்துவிட்டு அல்லது அப்படியே விட்டுவிட்டு வெளியேறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. 60 நாட்கள் விசா பொறி: அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர் வேலையை இழந்தால், அடுத்த 60 நாட்களுக்குள் புதிய நிறுவனத்தில் வேலை பெற வேண்டும். ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் முடங்கியுள்ள இந்தச் சூழலில், 2 மாதங்களுக்குள் வேலை தேடுவது சாத்தியமற்றதாகிவிட்டது. 61-வது நாள் அவர்கள் சட்டவிரோதமாகத் தங்கியவர்களாகக் கருதப்படுவர். எகிறிய வீட்டுக் கடன் வட்டி : கடந்த காலங்களில் 3% முதல் 4% வரை இருந்த வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள், தற்போது 7.5% வரை உயர்ந்துள்ளன. வேலை இல்லாத நேரத்தில், ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கான டாலர்களை வட்டியாகச் செலுத்துவது நடுத்தரக் குடும்பங்களின் முதுகெலும்பை உடைத்துள்ளது. ஏஐ (AI) வளர்ச்சி மற்றும் வேலை இழப்புகள்: சாப்ட்வேர் துறையில் ஏஐ கருவிகளின் வருகையால் பல வழக்கமான வேலைகள் பறிபோய்விட்டன. உள்ளூர் நிறுவனங்கள் செலவைக் குறைக்கத் தீவிர ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன. அந்நியர் எதிர்ப்பு மனநிலை: அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழலில், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிரான கெடுபிடிகளும் வெறுப்புப் பேச்சுகளும் அதிகரித்துள்ளன. நிரந்தர கிரீன் கார்டு கிடைப்பது இனி எட்டாக்கனி என்ற உண்மை பலரை விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. அமெரிக்காவில் தங்கள் கவுரவத்தையும் பணத்தையும் இழந்து தவித்த பல பொறியாளர்கள், தற்போது இந்தியா திரும்புவதை ஒரு அவமானமாகப் பார்க்காமல், நிம்மதியான மாற்று வழியாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உலகளாவிய நிறுவனங்களின் தலைமை மையங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அமெரிக்காவில் 10-15 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்ற திறமையாளர்களுக்கு இந்தியாவில் சிறந்த பொறுப்புகளும், கணிசமான சம்பளமும் கிடைக்கின்றன. "அமெரிக்காவில் எந்நேரமும் விசா ரத்தாகிவிடுமோ என்ற பயத்துடனேயே வாழ வேண்டும்; ஆனால் தாய்நாட்டில் அந்த மன அழுத்தம் இல்லை; குடும்பத்தினருடன் சுதந்திரமாக வாழ முடிகிறது" என்பதே தாய்நாடு திரும்பிய பலரின் கருத்தாக உள்ளது. அமெரிக்கா காட்டிய கவர்ச்சிகரமான பொன் உலகம், இன்று விசா நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சுமையால் தன் வசீகரத்தை இழந்துவிட்டது. சொத்துகளையும் கார்களையும் இழந்து வெறும் பெட்டிகளுடன் இந்திய இளைஞர்கள் நாடு திரும்புவது, "அமெரிக்கக் கனவு" அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதையே உணர்த்துகிறது.ஒரே இரவில் மாறிய வாழ்க்கை: ஹைதராபாத் பொறியாளரின் சோகக் கதை
புள்ளிவிவரங்கள் காட்டும் பேரதிர்ச்சி: முடங்கும் டெக்சாஸ் வீடுகள்
ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் அமெரிக்கா.. இந்தியாவை மிரட்டிவிட்டு புதினிடம் சரணடைந்த டிரம்ப்! ட்விஸ்ட்
அவசர அவசரமாக நாட்டை விட்டு ஓட என்ன காரணம்?
இது இனி 'டிரம்ப்’ கடல்.. அட்லான்டிக் – பசிபிக் பெருங்கடல் பெயரை மாற்றும் அமெரிக்க அதிபர்! யோவ் யாருயா நீ?
இடப்பெயர்வு: இந்தியாவின் புதிய எழுச்சி