நியூயார்க்: அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே பொருளாதார, விசா மற்றும் வர்த்தக மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆன்லைன் கணிப்பு மற்றும் பந்தய தளமான பாலிமார்க்கெட்டில் புதிய பந்தயம் ஒன்று பட்டியலிடப்பட்டு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
"ஜூன் 30, 2027-க்குள் நரேந்திர மோடி பிரதமர் பதவியில் இருந்து விலகுவாரா?" (Modi out by June 30, 2027?) என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பந்தயத்தில், உலகளாவிய வர்த்தகர்களும் ஆய்வாளர்களும் பணம் கட்டி கணிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல், உலகத் தலைவர்களின் அரசியல் எதிர்காலம், பொருளாதார முடிவுகள் போன்றவற்றைத் துல்லியமாகக் கணிக்கும் தளமாகப் பார்க்கப்படும் பாலிமார்க்கெட்டில், இந்தியப் பிரதமரின் பதவிக் காலத்தைக் குறிவைத்து ஒரு தலைப்பு பட்டியலிடப்பட்டிருப்பது சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிரிப்டோகரன்சி மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கும் பாலிமார்க்கெட் என்பது ஒரு உலகளாவிய 'கணிப்புச் சந்தை'. இதில் அரசியல், தேர்தல், போர் போன்ற முக்கிய உலக நிகழ்வுகள் நடக்குமா நடக்காதா என்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பங்குகளை வாங்கி வர்த்தகம் செய்வார்கள். இதில் நிர்ணயிக்கப்படும் சதவீதம் என்பது மக்களின் வாக்குகளைக் குறிப்பது அல்ல.. உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒரு நிகழ்வு நடப்பதற்கான சாத்தியக்கூறாக எதை நம்புகிறார்கள் என்பதைக் காட்டும் நிதி அளவீடாகும். இதில் பட்டியலிடப்பட்டு பெரும்பான்மை நபர்கள் வாக்களிக்கும் விஷயமே பொதுவாக நடைபெறும். காரணம் அவர்கள் அரசியல் தெரிந்தவர்கள் மட்டுமல்ல.. அரசியலை நிர்ணயிக்க கூடிய லாபியிஸ்ட்டுகளும் அதிகம் இருப்பார்கள். தற்போது பட்டியலிடப்பட்டுள்ள பந்தயத்தில், பெரும்பாலான வர்த்தகர்கள் "மோடி தொடர்ந்து பதவியில் நீடிப்பார்" என்ற பக்கமே அதிக பந்தயங்களை வைத்துள்ள போதிலும், நாளுக்கு நாள் இதன் சதவிகிதம் உயர்ந்து வருகிறது. 2029 பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே 2027-க்குள் இந்திய அரசியலில் தலைமை மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதா என்ற கேள்வி சர்வதேச தளத்தில் எழுப்பப்பட்டிருப்பதே பேசுபொருளாகியுள்ளது. இந்தியா மீது அமெரிக்கா கொடுத்து வரும் பலமுனை அழுத்தங்கள் மற்றும் சர்வதேச புவிசார் அரசியல் சூழல்களே இத்தகைய ஊகங்களுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன: 1. அமெரிக்காவின் நேரடி வர்த்தக அழுத்தம்: டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட இந்திய ஐடி நிறுவனங்களுக்கு விசா கிரீன் கார்டுக்கான PERM முடக்கம், ஈரானிய வர்த்தகத்தைக் காரணம் காட்டி மும்பை நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை என அமெரிக்க அரசு அடுத்தடுத்துக் கெடுபிடிகளை விதித்துள்ளது. 2. எலான் மஸ்க் மற்றும் டெக் நிறுவனங்களின் மோதல்: இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைக்கான பாதுகாப்பு நடைமுறைகளை அரசு தீவிரமாகப் பின்பற்றி வரும் வேளையில், எலான் மஸ்க் இந்தியத் தொழில் கட்டுப்பாடுகளையும் தலைமைகளையும் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். இது டெல்லிக்கு மிகப்பெரிய சர்வதேச அழுத்தத்தை உருவாக்குகிறது. 3. உள்நாட்டு அரசியல் சமன்பாடுகள்: 2024 பொதுத்தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்தை நேரடியாகப் பெறாமல் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து ஆட்சி அமைத்திருப்பதால், ஆட்சிக் கூட்டணிகளின் நிலைப்புத்தன்மை மற்றும் உள்நாட்டுப் பொருளாதார சவால்கள் குறித்து மேற்கத்திய சிந்தனையாளர்கள் மத்தியில் தொடர் விவாதங்கள் நிலவுகின்றன. 4. பாஜகவின் உட்கட்சி வயது வரம்பு விவாதம்: பாஜகவில் தலைவர்களுக்கு 75 வயது நிறைவடையும் போது தீவிர தேர்தல் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விலகும் வழக்கமான எழுதப்படாத விதி உள்ளதாக அரசியல் தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 2025 செப்டம்பரில் மோடிக்கு 75 வயது நிறைவடைந்ததை அடுத்து, 2026-2027 காலகட்டத்தில் தலைமை மாற்றம் குறித்த ஊகங்கள் அவ்வப்போது கிளப்பப்படுகின்றன. மேற்கத்திய சிந்தனையாளர்கள் மற்றும் நிதி ஆய்வாளர்களில் ஒரு பகுதியினர், இந்தியா எதிர்கொள்ளும் இரட்டைச் சவால்களைச் சுட்டிக்காட்டுகின்றனர்: அமெரிக்காவின் புவிசார் அரசியல் நிர்ப்பந்தங்கள், இந்திய நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள், அன்னிய மூலதனத்தின் வெளியேற்றம். வேலைவாய்ப்பின்மை, இளைஞர்களின் அதிருப்தி மற்றும் கூட்டணி அரசியலின் எல்லைகள். இந்தச் சவால்கள் அரசின் கொள்கை முடிவுகளைப் பாதிக்கலாம் என்றும், வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவுடன் மோதல் போக்கு நீடித்தால் அதன் தாக்கம் உள்நாட்டு அரசியலிலும் எதிரொலிக்கலாம் என்றும் சிலர் வாதிடுகின்றனர். பாலிமார்க்கெட் போன்ற கணிப்புச் சந்தைகள் பல நேரங்களில் சர்வதேச அளவில் நிலவும் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டு, வெறும் ஊகங்களின் அடிப்படையிலும் இயக்கப்படுகின்றன. இந்தியாவில் தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் நிலையான பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. கூட்டணிக் கட்சிகள் அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும், பாலிமார்க்கெட்டிலேயே கூட மோடி பதவி விலகுவதற்கான சாத்தியக்கூறு மிகக் குறைந்த சதவீதத்திலேயே (சுமார் 5% முதல் 7% வரை) வர்த்தகம் செய்யப்படுகிறது. அதாவது 93%-க்கும் அதிகமான வர்த்தகர்கள் மோடி தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்றே பந்தயம் கட்டியுள்ளனர். எனவே, பாலிமார்க்கெட்டில் பட்டியலிடப்பட்டுள்ள இந்தப் பந்தயம் ஒரு உறுதியான அரசியல் திருப்பத்தின் அடையாளம் அல்ல; மாறாக, அமெரிக்காவுடனான மோதல் முற்றியுள்ள சூழலில், இந்தியாவின் ஆட்சி அதிகாரம் மற்றும் எதிர்காலம் குறித்து உலகளாவிய நிதிச் சந்தைகளில் பரவி வரும் பரபரப்பான விவாதங்களின் ஒரு வெளிப்பாடே ஆகும்.பாலிமார்க்கெட் என்றால் என்ன? இது எவ்வாறு செயல்படுகிறது?
இந்தப் பேச்சுகள் எழுவதற்குப் பின்னணி என்ன?
“டிராமா முடிஞ்சுபோச்சு.. மோடி கேம் ஓவர்!” - சென்னையில் மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி
சர்வதேச அறிவுஜீவிகள் சொல்வது என்ன?
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை.. இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி.. விஜய்யுடன் பயணம்!
யதார்த்த நிலை என்ன?