AI காதல் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடாது.. அமெரிக்கா போட்ட புது சட்டம்! எல்லாம் இதுக்குதான்!

  • நியூயார்க்: 18 வயதுக்கு உட்பட்டவர்கள் AI சாட் பாட்களை பயன்படுத்தும்போது, அவர்களிடம் காதல் உணர்வுகளை AI வெளிப்படுத்தக்கூடாது என்று, நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவில் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    அதாவது மனிதர்களை போல உணர்வுகளை வெளிப்படுத்தவோ, நண்பர்களாகவோ அல்லது காதல் இணையாகவோ நடிப்பதை தடை செய்யும் புதிய சட்டத்தில் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் கையெழுத்திட்டிருக்கிறார்.

    Advertisement

    அமெரிக்காவில் சிறுவர்களின் மனநலனை பாதுகாக்க, ஏஐ தொழில்நுட்பத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள மிக கடுமையான மற்றும் விரிவான கட்டுப்பாடாக இது பார்க்கப்படுகிறது. 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் AI பயன்படுத்தும்போது, அந்த சாட்பாட்கள் தங்களுக்கு உயிர் இருக்கிறது, மனித உணர்வுகள் இருக்கின்றன அல்லது சொந்தமாக தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளன.. என்று சிறுவர்களை நம்பவைக்கும்படி பேசக்கூடாது.

    சாட்பாட்கள் தங்களை சிறுவர்களின் நண்பர்களாகவோ, காதலன்/காதலியாகவோ, அல்லது ஒரு அதிகாரமிக்க வழிகாட்டியாகவோ காட்டிக்கொள்ளக்கூடாது. சிறுவர்களை தொடர்ந்து சாட்டிங் செய்ய வைப்பதற்காக, ஏஐ போட்கள் பயன்படுத்தும் அதீத புகழ்ச்சி மற்றும் ஆசைவார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. OpenAI நிறுவனத்தின் ChatGPT, கூகுளின் Gemini பொன்ற AI நிறுவனங்கள் தங்களின் பயனார்களின் வயதை முறையாக சரிபார்க்க வேண்டும் என புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    பெற்றோரிடம் இருந்து ரகசியம் காக்கும்படி சிறுவர்களை தூண்டுவதோ, தற்கொலை, தனக்கு தானே காயங்களை ஏற்படுத்திக்கொள்ளும்படியோ அல்லது போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகவோ பேசுவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

    சமீபகாலமாக, சிறார்கள் இந்த AI சாட்பாட்களுடன் அதிகப்படியான உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். இது அவர்களின் நிஜ உலக சமூக உறவுகளை பாதிப்பதுடன், சில தீவிரமான வழக்குகளில் சிறுவர்களின் மனநலனை கெடுத்து, தற்கொலை எண்ணங்களுக்குக்கும் வழிவகுப்பதாக பெற்றோர் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இதை தொடர்ந்து, தற்போது இந்த புதிய சட்டம் போடப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தை மீறினால் சுமார் ரூ.21 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    இந்தியாவிலும் இதுபோன்ற சட்டம் கொண்டுவரப்பட்டால் எப்படி இருக்கும்? கருத்துக்களை சொல்லுங்க மக்களே!

    English Summary

    AI chatbot: In the US, companies have been banned from expressing romantic feelings to people under the age of 18 when they use AI chatbots.