அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து.. கொத்து கொத்தாக.. பைத்தியம் போல கடலில் குதித்த வீரர்கள்! என்னாச்சு?

  • நியூயார்க்: அமெரிக்கக் கடற்படையின் அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் பணியாற்றும் சுமார் 5,000 வீரர்களின் நிலைமை தற்போது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடலில் தொடர்ந்து 9 மாதங்களாகப் பணியாற்றி வரும் இந்த வீரர்களுக்கு ஓய்வே வழங்கப்படாமல் பணி நீட்டிக்கப்பட்டு வருவதால், அவர்களின் மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சிலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    250 நாட்கள் தொடர் கடற்பயணம்

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சான் டியாகோ துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்தப் போர்க்கப்பல், பசிபிக் பெருங்கடல் பகுதிக்குச் செல்லவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்ததை அடுத்து, இந்த கப்பல் உடனடியாக மத்திய கிழக்கு கடல் பகுதிக்குத் திருப்பி விடப்பட்டது.

    அதன்பின்னர், கடந்த மே மாதத்துடன் முடிவடைய வேண்டிய இவர்களின் பணி, போர் காரணமாகத் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 9 மாதங்களில், அதாவது சுமார் 250 நாட்களுக்கும் மேலாக இந்த வீரர்கள் நிலப்பரப்பைக் கண்ணால் கூடப் பார்க்கவில்லை. டிசம்பரில் குவாம் தீவிலும், ஜூலை மாதத்தில் ஓமன் நாட்டிலும் என இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே இவர்கள் கரை இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தற்கொலை முயற்சிகள்

    தொடர் பணிச்சுமை மற்றும் குடும்பங்களைப் பார்க்க முடியாத மன உளைச்சல் காரணமாக, கப்பலில் உள்ள வீரர்கள் சிலர் தற்கொலை முயற்சி வரை சென்றுள்ளனர். ஒரு வீரர் மன அழுத்தம் தாங்க முடியாமல் கப்பலில் இருந்து கடலில் குதித்துத் தற்கொலை செய்ய முயன்றபோது, சக வீரர் அவரைப் பிடித்துக் காப்பாற்றியுள்ளார். 13 ஆண்டுகள் கடற்படையில் பணியாற்றிய மற்றொரு வீரர், பணி நீட்டிப்பால் ஏற்பட்ட கடுமையான சோர்வு காரணமாகக் கடலில் குதிக்க முயன்றுள்ளார்.

    சமீபத்தில் சான் டியாகோவில் நடந்த கடற்படை அதிகாரிகளுடனான கூட்டத்தில், வீரர்களின் குடும்பத்தினர் திரண்டு வந்து தங்களின் ஆத்திரத்தையும் கவலையையும் வெளிப்படுத்தினர். இன்று காலை என் கணவரிடம் இருந்து செய்தி வந்தது. நாளை காலை அவர் உயிரோடு எழுந்திரிக்க கூடாது என்று அவர் விரும்புகிறார் எனப் பெண் ஒருவர் அதிகாரிகளிடம் கதறி அழுதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடற்படை தலைமை மீது குடும்பத்தினர் வைத்திருந்த நம்பிக்கை முற்றிலும் உடைந்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

    அழுகிய உணவு மற்றும் மோசமான சுகாதார சீர்கேடு

    மன உளைச்சல் ஒருபுறமிருக்க, கப்பலுக்குள் இருக்கும் அடிப்படை வாழும் சூழலும் மிக மோசமாக உள்ளது. சுத்தமான தண்ணீர் இல்லை, கழிப்பறைகள் உடைந்து கிடக்கின்றன, குளிக்கும் இடங்களில் பாசி பிடித்துப் புழுக்கள் மொய்க்கின்றன. துணி துவைக்கும் இயந்திரங்கள் பல வாரங்களாக வேலை செய்யவில்லை.

    உணவுப் பற்றாக்குறை காரணமாக வீரர்களுக்கு அரை கப் அரிசி சாதமும் இரண்டு ரொட்டிகளும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகக் புகார்கள் எழுந்துள்ளன. சோப்பு, பேஸ்ட், டீயோடரண்ட் போன்ற அடிப்படைப் பொருட்களுக்குக் கூட கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    அரசியல் சர்ச்சை

    கப்பலின் இந்த மோசமான நிலையைச் சுட்டிக்காட்டி கலிபோர்னியா நாடாளுமன்ற உறுப்பினர் மைக் லெவின் கடுமையாகப் விமர்சித்துள்ளார். நாட்டிற்காகச் சேவை செய்ய வந்த வீரர்களுக்குக் சூடான தண்ணீர், சுத்தம் கழிப்பறை, நல்ல உணவு கூட வழங்க முடியாத நிலை உள்ளது என அவர் சாடியுள்ளார்.

    English Summary

    USS Abraham Lincoln Carrier Crisis: 250 Days at Sea Sparks Mental Health Emergency