அமெரிக்காவில் கார் இல்லை என்றால் ஹவுஸ் அரஸ்ட் தான். பஸ் எங்கப்பா.. திகைத்துபோன இந்திய பெண்

  • நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டி.சி மற்றும் பாஸ்டன் போன்ற மிகப்பெரிய நகரங்களில் பேருந்து சேவைகள் உள்ளன. ஆனால் மற்ற பகுதிகளில் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லும் அளவிற்கு அவ்வப்போது தான் வரும். இதனால் அமெரிக்காவில் வசிக்கும் யாராக இருந்தாலும் கார் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இதுபற்றி அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் திருஷ்டி பால்தேவா என்ற பெண் கூறுகையில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்ற பிறகு, கார் வைத்திருப்பது பற்றிய தனது எண்ணமே முற்றிலும் மாறிவிட்டது. இந்தியாவில் கார் என்பது ஒரு ஆடம்பரமாகத் தோன்றலாம்; ஆனால் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் அது வாழ்வதற்கான அத்தியாவசியத் தேவையாகி விடுகிறது என்றார்.

    Advertisement

    இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற பின்னரே பலருக்கும் கார் ஆடம்பரம் அல்ல.. மிக அவசியம் ஆனது என்று உணருகிறார்கள். கார் என்பது இந்தியாவில் ஆடம்பர பொருளாக பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அமெரிக்காவில் கார் அத்தியாவசியமானது. இதுபற்றி புதிதாக அமெரிக்காவிற்கு சென்ற இந்திய பெண் திருஷ்டி பால்தேவா தனது இன்ஸ்டாகிராமில் கூறுகையில், "இந்தியாவில் மக்கள் நடமாடுவதற்கு ஆட்டோ, பேருந்து, ஈ-ரிக்ஷா, மெட்ரோ எனப் பல வழிமுறைகளை மிக எளிதாகக் கண்டறிந்து பயன்படுத்த முடியும். ஆனால் அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த பிறகுதான், கார் என்பது ஆடம்பரம் அல்ல, அது பிழைப்பிற்கான அடிப்படைத் தேவை என்பதைத் தான் உணர்ந்ததாக திருஷ்டி கூறுகிறார். நியூயார்க் போன்ற இரண்டு அல்லது மூன்று நகரங்களைத் தவிர, அமெரிக்காவின் மற்ற பகுதிகளில் பொதுப்போக்குவரத்து வசதி என்பது கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லிவிடலாம்.

    Advertisement

    அங்கே ஒரு பேருந்திற்காக மக்கள் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அன்றாட வாழ்க்கையில் பொருட்கள் இருக்கும் தூரமும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. மளிகைப் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் கூட 10 மைல்கள் (சுமார் 16 கி.மீ) தூரம் காரை ஓட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. அதற்காகத் தினமும் ஊபர் டாக்ஸியைப் பயன்படுத்தினால் 50 முதல் 60 டாலர்கள் வரை காலியாகிவிடும்.

    அமெரிக்காவிற்கு வரும் மாணவர்கள் மற்றும் பொறியாளர்கள், அங்கு வந்து இறங்கிய ஒரே மாதத்திற்குள் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு, ஒரு காரையும் வாங்கி விடுவது கட்டாயமாகிறது. கார் இல்லாமல் இருப்பதை "வீட்டுச் சிறையில் வாழ்வதற்கு சமம்.

    Advertisement

    அமெரிக்காவில் ஒரே ஒரு விதிதான் உள்ளது; "உங்களுக்குக் கார் ஓட்டத் தெரியவில்லை என்றால் உங்கள் வாழ்க்கை கடினமாகிவிடும்". சில நிமிடங்களிலேயே ஆட்டோ, மெட்ரோ அல்லது பேருந்து கிடைத்துவிடும் இந்தியச் சூழலிலிருந்து சென்று இந்த அனுபவத்தைப் பெறுவது ஒரு பெரிய கலாச்சார அதிர்ச்சியாகவே எனக்கு இப்போது இருக்கிறது" என்றார்.

    கார் வாங்குவது, இன்சூரன்ஸ், பெட்ரோல் மற்றும் பராமரிப்புச் செலவுகள் என அனைத்தையும் சுட்டிக்காட்டியுள்ள திருஷ்டி பால்தேவா, "இந்தியாவின் எளிமையான பொதுப்போக்குவரத்து வசதியா அல்லது அமெரிக்காவின் காரைச் சார்ந்த வாழ்க்கைமுறையா... எது உங்களுடைய தேர்வு?" என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

    Advertisement


    அமெரிக்காவில் ஏன் போதிய பொதுபேருந்து வசதி ஏற்படுத்தப்படுவது இல்லை

    அமெரிக்காவில் ஏராளமான மக்கள் பெருநகரங்களைவிட அதன் அருகே உள்ள புறநகரி்ல் தன் வசிக்கிறார்கள். அந்த பகுதிகளுக்கு நம்மூர் பாிியில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவற்றின் எண்ணிக்கை சொற்பமாகவே இருக்கும். ஒரு பஸ்ஸை நீங்கள் தவறவிட்டால் அடுத்த பேருந்திற்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியதிருக்கும். ஏனெனில் அமெரிக்க நகரங்கள் கார்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது, வீடுகள் ஒரு பகுதியிலும், கடைகள் மற்றும் அலுவலகங்கள் பல மைல்கள் தள்ளியும் இருப்பதால், பேருந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கி செல்ல வேண்டிய இடத்திற்கு நடந்து செல்வது மிகவும் கடினம் என்பதால் கார்களுக்காக சாலைகள் டிசைன் செய்யப்பட்டிருக்கும். எனவே அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் வந்த உடனே சொந்தக் கார் வாங்கிவிடுவார்கள். எனவே பஸ்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், அரசும் அதிக பேருந்துகளை இயக்குவது இல்லை..

    Topics: #us #car #bus #indian

    English Summary

    Without a car, it's practically house arrest—an Indian woman left stunned by the transportation system in us (America).