சர்வதேச அளவில் போகுது மானம்! சர்வதேச மீடியாக்களில் தலைப்பு செய்தியான CJP போராட்டம்! மோடிக்கு பிரஷர்

  • நியூயார்க்: "ஒரு மனிதனை உங்களால் தடுத்து சிறையில் அடைக்க முடியும்.. ஆனால், உண்மையை ஒருபோதும் சிறைபிடிக்க முடியாது." டெல்லியில் அமைதியாகப் போராட நினைத்த இளைஞர்கள் மீது அரசு ஏவிய அதிகார அடக்குமுறை, இப்போது சர்வதேச அளவில் பூதாகரமாக வெடித்துள்ளது.

    Advertisement

    நேற்று காலை வரை டெல்லி வீதிகளில் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த இளைஞர்களின் முழக்கம், இன்று உலகின் மிகப்பெரிய சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. ராய்ட்டர்ஸ, அசோசியேட்டட் பிரஸ் , பிபிசி, தி கார்டியன் , ப்ளூம்பெர்க், அல் ஜசீரா மற்றும் நியூயார்க் டைம்ஸ் என உலகின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் டெல்லியின் நிலைமையை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளன.

    Advertisement

    ஒரே இரவில் உலக அரங்கிற்குச் சென்ற டெல்லி போராட்டம்

    இந்தியாவில் வாக்குரிமை பறிக்கப்படுவதை எதிர்த்தும், SIRல் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராகவும், பல்வேறு புகார்களுக்கு ஆளான தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், 'காக்ரோச் ஜனதா கட்சி' தலைவர் அபிஜித் திப்கே தலைமையில் இளைஞர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடத் திட்டமிட்டனர்.

    மும்பையிலிருந்து டெல்லி வந்திறங்கிய அபிஜித் திப்கேவை, விமானத்தை விட்டு வெளியே கூட வரவிடாமல் விமானத்திற்குள்ளேயே புகுந்து டெல்லி போலீஸ் கைது செய்தது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

    Advertisement

    அரசு நினைத்தது: 'தலைவரைக் கைது செய்துவிட்டால் போராட்டம் அடங்கிவிடும்; டெல்லியை மூடிவிட்டால் செய்தி வெளியுலகிற்குத் தெரியாது.' ஆனால் நடந்தது என்ன? அடுத்த சில மணி நேரங்களிலேயே இந்த விவகாரம் கடல் கடந்து உலகின் அனைத்து கண்டங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியது.

    உலக ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

    சர்வதேச ஊடகங்கள் டெல்லியில் நடந்த அடக்குமுறையை மிகக் கடுமையான வார்த்தைகளால் விவரித்துள்ளன:

    1."தலைநகரையே திறந்தவெளி சிறைச்சாலையாக்கிய அரசு" (ராய்ட்டர்ஸ் & அசோசியேட்டட் பிரஸ்):

    சாமானிய இளைஞர்கள் அமைதியாகக் கேள்வி கேட்பதைத் தடுக்க 23,000-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரைக் குவித்தது, பல மெட்ரோ நிலையங்களை மூடியது, இணைய சேவையை முடக்கியது ஜனநாயகத்திற்கு எதிரானது என இந்த ஊடகங்கள் விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளன.

    Advertisement

    2. "ஜெனரேஷன்-இசட் (Gen-Z) தலைமுறைக்கு அஞ்சும் ஆட்சி" (பிபிசி & தி கார்டியன்):

    இணையதளங்கள் மூலமாகவும் வீதிகளிலும் உரிமைக்காகப் பேசும் இளம் தலைமுறையின் குரலை நசுக்க, ஒரு போர்க்களத்தைப் போல அரசு தயார் நிலையில் நின்றது அதிகாரத்தின் பயத்தையே காட்டுகிறது என்று பிரிட்டனின் முன்னணி பத்திரிகைகள் சாடியுள்ளன.

    மும்பையில் வெடித்த கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்! பாலிவுட் பிரபலம் இம்ரான் கான் உட்பட 400 பேர் கைது

    3. "சர்வாதிகாரப் போக்கில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்" (அல் ஜசீரா & நியூயார்க் டைம்ஸ்):

    அரசியல் சாசனத்தின்படி அமைதியான வழியில் போராட மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் விமானத்திற்குள் ஏறி போராட்டக் குழுத் தலைவரை இழுத்துச் சென்ற விதம் மற்றும் 3,000-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்தது ஒரு சர்வாதிகார ஆட்சியின் நடவடிக்கையைப் போலவே உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளன.

    Advertisement

    ஐக்கிய நாடுகள் சபை (UN) வரை எதிரொலித்த கொந்தளிப்பு

    இந்த விவகாரம் சர்வதேச அரங்கிற்குச் சென்றதைத் தொடர்ந்து, ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் கூடுவதற்கும் போராடுவதற்கும் மக்களுக்கு உரிமை உண்டு என்றும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்கள் கவலை தெரிவித்தன. இருப்பினும், இது தங்களின் உள்நாட்டு விவகாரம் என்று கூறி மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

    மறைக்க நினைத்த உண்மை உலகிற்கே தெரிந்துவிட்டது!

    தேர்தல் ஆணையம் செய்த வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் குறித்து இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் முழுமையாகப் பேசத் தயங்கிய நிலையில், அரசின் இந்த அதிரடி அடக்குமுறையே அந்தச் செய்தியை உலக அளவில் கொண்டு சேர்த்துள்ளது.

    Advertisement
    வெளிநாட்டு நிதியுடன் நாட்டை சீர்குலைக்க சதி.. டெல்லி போராட்டம் குறித்து ஸ்ரீதர் வேம்பு சொன்ன கருத்து

    ஒரே ஒரு அதிகாரியைக் காப்பாற்ற நினைத்து, ஒட்டுமொத்த தேசத்தின் தலைநகரையும் முடக்கிய செயல்:

    அரசின் பலத்தைக் காட்டவில்லை; மாறாக இளைஞர்களின் குரலைக் கண்டு அரசு எந்தளவுக்கு அஞ்சுகிறது என்பதையே சர்வதேச அளவில் நிரூபித்துள்ளது.

    துப்பாக்கிகளாலும், இரும்புத் தடுப்புகளாலும், விமான நிலையக் கைதுகளாலும் கருத்துச் சுதந்திரத்தை அடக்கிவிட முடியாது என்பதை உலக நாடுகள் இந்தியாவின் தற்போதைய சூழலை வைத்துப் பேசத் தொடங்கியுள்ளன.

    அபிஜித் திப்கே என்ற தனிமனிதரை அரசாங்கம் தடுத்து வைக்க முடிந்திருக்கலாம். ஆனால், உலக வரைபடத்தில் இந்தியாவின் ஜனநாயக எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள இந்த மக்கள் எழுச்சியை எந்த ஒரு அதிகார அமைப்பாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

    English Summary

    You Can Detain the Man, Not the Story: Global Media Slams Delhi Crackdown as CJP Protest