குன்னூர் அருகே கோயிலுக்கு வர கதவை உடைத்த கரடி.. மக்கள் பீதி

  • ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் லூர்து புரம் கிராமத்தில் இரவு கோயில் கதவை உடைத்து உணவு தேடிய கரடியால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான்,காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    Advertisement

    இந்நிலையில் சமீபகாலமாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் குடியிருப்பு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் கரடிகள் உலா வருவது அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் குன்னூர் லூர்து புரம் கிராமத்தில் இரவு கரடி ஒன்று உணவு தேடி உலா வந்தது. இந்த சிசிடிவி வீடியோ காட்சி மற்றும் குரைக்கும் நாயின் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

    கொடைக்கானல், குன்னூர், மாஞ்சோலையில் நிலச்சரிவு அபாயம்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

    அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English Summary

    In the village of Lourdupuram, near Coonoor in the Nilgiris district, residents are gripped by fear after a bear broke into a temple at night in search of food. They have urged the Forest Department to take action—by setting up a trap to capture the animal and relocating it deep into the forest—before any untoward incident occurs.