3.5 சென்ட் நிலத்தின பட்டாவுக்கு 1.25 லட்சம் லஞ்சம்.. ஊட்டி விஏஓ கைது.. பின்னணியில் எழும் 5 கேள்விகள்

  • ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அருகே பிக்கடி கிராம நிர்வாக அதிகாரி உமா பிரியா 1.25 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் கைதாகி உள்ளார். இதில் தான செட்டில்மெண்ட் நிலத்துக்கு ஆன்லைன்ல பட்டாவுக்கு அப்ளை பண்ணிட்டு எதுக்கு வி.ஏ.ஓ வை புகார் அளித்தவர் அணுகிறார். வெறும் 3.5 சென்ட் நிலத்திற்கு 1.25 லட்சம் கேட்டதாக கூறப்படுவதால், அந்த நிலத்தில் என்ன மாதிரியான வில்லங்கம் இருந்து என்று கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்புகிறார்கள்.

    Advertisement

    நீலகிரி மாவட்டம் என்பது முற்றிலும் மலைப்பிரதேச மாவட்டம் ஆகும். இங்கு சமவெளி போல் ஒரு நிலத்தை எளிதாக வீட்டு மனையாக்கிவிட முடியாது. அதேபோல் நிலங்களை வகை மாற்றமும் செய்துவிட முடியாது. வனப்பகுதி நிலங்களும் அதிகமாக உள்ளதால், இங்கு நிலம் வாங்குதல் மற்றும் விற்பனை, கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட விஷயங்களுக்கு சமவெளிப்பகுதிகளை விட மிக கட்டுப்பாடுகள் உள்ளன. சமவெளியில் வசிப்போருக்கு உள்ள விதிமுறைகள் மலைப்பகுதிகளுக்கு பொருந்தாது.இங்கு நிலத்தினை விற்பது, வாங்குவது மற்றும் கட்டிட விதிமுறைகள் அதிக அளவு உள்ளன. இதன் காரணமாக பட்டா, சிட்டா வாங்குதல், பட்டா பெயர் மாற்றம் மற்றும் நில அனுபவ சான்றிதழ் வாங்குவதில் சிலர் அதிக அளவில் பணவசூல் செய்வதாக குற்றச்சாட்டு இருக்கிறது.

    Advertisement

    இந்தநிலையில் ஊட்டியை அடுத்த குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட எடக்காடு நடுஹட்டி பகுதியில் வசிப்பவர் வசந்த். இவருடைய தந்தை பெயரில் உள்ள 3.5 சென்ட் நிலத்தை தான செட்டில்மெண்டாக வாங்கி உள்ளார். இவர் பட்டா மாற்றத்திற்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். பின்னர் பட்டா தொடர்பாக பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவை தொடர்பு கொண்டாராம்.

    அப்போது பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூ.1¾ லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியா கேட்டாராம். ஆனால் அவ்வளவு தொகை தர முடியாது என்று வசந்த் கூறினாராம். கடைசியில் ரூ.1¼ லட்சம் தந்தால் பணியை முடித்து கொடுப்பதாக உமா பிரியா கூறியதா வசந்த் குற்றச்சாட்டு உள்ளார். அதேநேரம் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத வசந்த் இது குறித்து நீலகிரி லஞ்ச ஒழிப்புத்துறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டிஎஸ்பி ஜாய் தயாள் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையிலான போலீசார், பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டு ரசாயனம் தடவிய பணத்தை, வசந்திடம் கொடுத்தனுப்பி உள்ளார்கள்.

    Advertisement
    'சென்னை நங்கநல்லூரில் வேலை செய்தவர் இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர்.. யார் இந்த 'நித்யா ராமன்'?

    இந்த நிலையில் நியூ அட்டுபாயில் என்ற இடத்தில் கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியா பணி நிமித்தமாக இருந்ததால், அந்த பணத்தை மஞ்சூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரியும் ஒருவரிடம் கொடுக்குமாறு வசந்திடம் கூறினாராம். இதை அடுத்து வசந்த் பணத்தை தனியார் வங்கி ஊழியரிடம் கொடுத்தபோது ஊட்டி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவை(வயது 29) கைது செய்தனர். கைதான அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். பட்டா பெயர் மாற்றத்திற்கு கிராம நிர்வாக பெண் அலுவலர் ரூ.1¼ லட்சம் லஞ்சம் வாங்கிய சம்பவம் நீலகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் பட்டா பெயர் மாற்றத்திற்கு யாருமே இவ்வளவு பணம் வாங்கி கைதானது இல்லை. மலையில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டா பெயர் மாற்றம் செயய இவ்வளவு பெரிய தொகையை லஞ்சமாக கேட்டதாக கூறப்படுவதால் இதுபற்றி நெட்டிசன்கள் பலர் வாயை பிளந்த படி, சில சந்தேகங்களை முன்வைத்துள்ளனர். அந்த சந்தேகங்களை மக்களின் பார்வையில் வைப்போம்.

    Advertisement
    அப்பாயிண்ட்மெண்ட் இருக்கான்னு கேட்ட ஐஏஎஸ் ஆபிசர்.. 'சம்பளம் தருவதே நாங்கதான்!' சாமானியன் நச் வீடியோ

    முதல் சந்தேகம் : தான செட்டில்மெண்ட் நிலத்துக்கு ஆன்லைனில் பட்டாவுக்கு அப்ளை பண்ணிட்டு எதுக்கு வி.ஏ.ஓ வை புகார் அளித்தவர் அணுகிறார் என்பது தான்.

    இரண்டாவது சந்தேகம்: அப்பாவின் பெயரில் பட்டா இருந்தாலும், அந்த நிலத்தின் மீது மற்ற வாரிசுகளுக்கு உரிமை இருந்ததா

    மூன்றாவது சந்தேகம்: தான செட்டில்மென்ட் பத்திரத்திற்கு விண்ணப்பித்த போது, அதில் சர்வே எண், உட்பிரிவு, நில அளவு ஆகியவற்றில் முரண்பாடு இருந்ததா?

    நான்காவது சந்தேகம்: தனி நபருக்கு சொந்தமான பட்டா நிலமா குறிப்பிட்ட 3.5 சென்ட் நிலம் அல்லது புறம்போக்கு, நீர்நிலை, மேய்க்கால் வகைப்பாடு தொடர்பான சிக்கல்களில் உள்ள நிலமா?

    Advertisement

    ஐந்தாவது சந்தேகம்: ஏற்கெனவே உள்ள பட்டாவில் இருந்து 3.5 சென்ட் நிலத்தைப் பிரித்து தனிப்பட்ட பட்டா வழங்க வேண்டிய அவசியம் இருந்ததா? இந்த ஐந்து சந்தேகங்களை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர். அதேபோல் சமவெளியில் உள்ள கிராமங்களில் பட்டா பெயர் மாற்றம் அதிகபட்சம் 10 ஆயிரம் அல்லது 15 ஆயிரம் லஞ்சம் கேட்பதே அபூர்வம் என்கிற நிலையில் 1.25 லட்சம் என்பது தான் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

    English Summary

    Uma Priya, the village administrator of Pickadi near Ooty in the Nilgiris district, has been arrested on charges of accepting a bribe of Rs 1.25 lakh. In this case, the complainant approaches VAO by applying online for the lease of his settlement land. 1.25 lakhs is said to have been asked for just 3.5 cents of land, netizens are raising questions as to what kind of animal is there on that land.