நீலகிரி: தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தங்கள் பிடியை இறுக்கி வருகின்றனர். சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி அதிகாரிகளை சிக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் அந்த வகையில் சமீபத்தில் சிக்கியிருக்கிறார் நீலகிரியை சேர்ந்த உமா பிரியா.
தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த பிறகு அரசு துறைகளில் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக விர்ச்சுவல் வாரிய சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இன்னும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடி தான் வருகிறது.
முதலில் மிரட்டி லஞ்சாம் வாங்கியவர்கள் தற்போது அமைதியாக வாங்குகிறார்கள். கையில் பணமாக வாங்காமல் ஜி-பே, போன் பே மூலம் டிஜிட்டல் லஞ்சம் வாங்கி வருகின்றனர். இதை அடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து துறை, சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு ஒட்டுமொத்தமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் இடையிடையே பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையிலும் அதிகாரிகள் சிக்கி வருகின்றனர் .அந்த வகையில் சமீபத்திய வரவாக சிக்கி இருக்கிறார் நீலகிரியைச் சேர்ந்த விஏஓ உமா மஞ்சுளா . நீலகிரி அருகே கிடக்காடு கிராமத்தைச் சேர்ந்த வசந்த் என்பவர் அளித்த புகாரில்தான் உமா பிரியா கைது செய்யப்பட்டிருக்கிறார். அதாவது வசந்தின் தந்தை சுமார் 3.5 சென்ட் நிலத்தை தான செட்டில்மெண்டாக மகனுக்கு கொடுத்திருக்கிறார். இதற்காக தனது பெயரில் பட்டாவை மாற்றி தர வேண்டும் என ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருக்கிறார் வசந்த். அப்போது ஒப்புதல் வழங்குவதற்கு 1.5 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என உமா பிரியா கேட்டுள்ளார். அவ்வளவு தர முடியாது என வசந்த் கூறிய நிலையில் 1.25 லட்சம் ரூபாய் தந்தால் வேலை முடிந்துவிடும் என உறுதி அளித்திருக்கிறார் உமா பிரியா. இதை அடுத்து நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்து இருக்கிறார் வசந்த். இதை அடுத்து வழக்கம் போல் ரசாயனம் தடவி ரூபாய் நோட்டுகளை போலீசார் வசந்திடம் கொடுத்து அனுப்பியிருக்கின்றனர். இதை அடுத்து பணம் ரெடியாக இருக்கிறது என வசந்த், உமா பிரியாவிடம் சொல்ல .. நான் வெளியூரில் இருக்கிறேன் இந்த பணத்தை மஞ்சூரில் உள்ள பேங்க் ஊழியரிடம் கொடுத்து விடுங்கள் என கூறியிருக்கிறார். குறிப்பிட்ட அந்த வங்கி ஊழியரிடம் வசந்த் பணத்தை கொடுத்த போது அங்கிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து பணத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஏஜென்ட் ஆக அந்த வங்கி ஊழியர் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவரையும், லஞ்சம் பெற்ற விஏஒ உமா பிரியாவையும் அதிரடியாக கைது செய்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார்.