ஊட்டி நாய்.. 'எடுத்தேன் பாரு ஓட்டம்.. மார்க்கெட்டுன்னு கூட பார்க்கலையே.. அப்படி ஒரு ஓட்டம்'.

  • ஊட்டி: யானையை பார்த்து குரைத்த நாய்கள், நாயை கண்டு பயந்து ஓடியிருக்கின்றன. 'எடுத்தேன் பாரு ஓட்டம்.. மார்க்கெட்டுன்னு கூட பார்க்கலையே... அப்படி ஒரு ஓட்டம்' என்று உவமையில் கூறுவது போல் யானைகளை ஆவேசமாக விரட்ட போன நாய்கள், அது முன்னோக்கி வந்ததும் தெறித்து ஓடி தப்பித்து இருக்கின்றன, இந்த சம்பவம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மாக்குமுலா கிராமத்தில் அதிகாலை நேரத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    Advertisement

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாக்குமூல கிராமத்தில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் காணப்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. வனத்துறையினர் யானைகளை விரட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிகாலை நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை நுழைவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.

    Advertisement

    இந்த நிலையில் நேற்று அதிகாலை யானை உலா வந்த போது மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர் யானை வருவதை பார்த்ததும் அங்கிருந்த இரண்டு வளர்ப்பு நாய்கள் குரைத்தன. அப்போது யானை துதிக்கையை தூக்கி வேகமாக ஓடி முன்னோக்கி வந்தன. இதனால் நாய்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம் பிடித்து ஓடி தப்பித்தது. இந்த வீடியோ காட்சிகளை அப்பகுதி மக்கள் பதிவு செய்துள்ளனர். அது வைரலாகி வருகிறது.

    ஊட்டி பக்கம் போயிடாதீங்க மக்களே! வெதர்மேன் கொடுத்த முக்கிய வார்னிங்! ரொம்ப முக்கியம்!


    கோத்தகிரியில் சிறுத்தை ஏமாற்றம்

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை இரும்பு கூண்டில் நாய் குரைத்ததை கண்டு வேட்டையாட முயற்சித்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோத்தகிரி நகரில் சமீப நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் செல்லப் பிராணிகளை வேட்டையாட சிறுத்தைகள் உலா வரும் சம்பவங்கள் மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது .

    Advertisement
    ஒரே நாளில் வந்த சிக்கல்.. கோயம்பேடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முதல்வர் விஜய்க்கு அவசரமாக கடிதம்

    இந்த நிலையில் கோத்தகிரி விநாயகர் கோவில் அருகே உள்ள ஒரு வீட்டிற்குள் மெதுவாக எட்டிப் பார்த்து, நடந்து வந்த சிறுத்தை, வீட்டின் மாடி படிக்கட்டின் மீது ஏறியது. இறையை தேடி நோட்டமிட்ட போது, நாய் குரைத்த சத்தத்தை கேட்ட சிறுத்தை தனக்கு இரை கிடைத்து விட்டதாக படிக்கட்டில் இருந்து இறங்கி வந்து நாயை பார்த்தது. ஆனால் நாய் பாதுகாப்பாக இரும்பு கூட்டிற்குள் இருந்ததால் சிறுத்தையால் நாயை வேட்டையாட முடியவில்லை. உடனே மீண்டும் மாடி படிக்கட்டின் மீது வேகமாக ஏறி ஓடிய சிறுத்தை அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்றது இந்த காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .

    English Summary

    Dogs that had aggressively chased after the elephants scattered and fled for safety the moment the animals charged forward; this incident occurred in the early hours at Makkumula village, near Gudalur in the Nilgiris district. The incident left the public in a state of fear.