மேட்டுப்பாளையம்–ஊட்டி சாலை டிராபிக்கில் சூப்பர் மாற்றம்! தொடர் விடுமுறை வரை நீலகிரியில் இதுதான் ரூட்

  • ஊட்டி: ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் ஊட்டி நகரின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, சமவெளிப் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஒரே பாதையில் செல்வதால் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    Advertisement

    நீலகிரியில் மழை வெளுத்து கொண்டிருக்கிறது.. மழையுடன் சேர்ந்து குளிர், அடிக்கடி கரண்ட் கட் என மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கும் நிறைய சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

    Advertisement

    நீலகிரியில் மழை

    பகல் நேரத்தில் இதமான குளிர் இருந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மழையுடன் மேகமூட்டமும் சேர்ந்து கொள்வதால் வெளியே செல்வதற்கே சில நேரங்களில் சிரமமாக உள்ளது. இதனிடையே, சில பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    மழை பெய்தாலும், சென்னையைப் போல நீலகிரியில் சாலைகளில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. ஆனால், மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக வாகனங்கள் மெதுவாகச் செல்வதால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுற்றுலாவுக்காக ஊட்டிக்கு வருபவர்களால் சில இடங்களில் மலைக் காட்சிகளையும் முழுமையாக ரசிக்க முடியவில்லை.

    Advertisement

    ஊட்டியில் சுற்றுலா பயணிகள்

    இப்படி பல சிரமங்களுக்கு நடுவே, ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அந்தவகையில் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள்.. எந்த வழியில் போக வேண்டும் தெரியுமா?

    தொடர் விடுமுறையை முன்னிட்டு ஊட்டி நகரின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, சமவெளிப் பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் ஒரே பாதையில் செல்வதால் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    ஊட்டி - குன்னூர்-மேட்டுப்பாளையம்

    இதையடுத்து, ஊட்டி - குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையை ஒருவழிப் பாதையாக காவல்துறையினர் மாற்றியிருக்கிறார்கள்.. இதன்படி, ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாகச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வரும் வாகனங்கள் குன்னூர் வழியாக வர வேண்டும். இதனால் ஊட்டியில் இருந்து கீழே செல்லும் வாகனங்களும், மேட்டுப்பாளையத்திலிருந்து மலைப்பகுதிக்கு வரும் வாகனங்களும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டிராபிக்கை குறைப்பதற்காகவே இப்படியொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி சேரிங்கிராஸ் ரூட் மாற்றம்

    ஊட்டி சேரிங்கிராஸ் சென்டரிலிருந்து, பிளெயின்ஸ் பகுதி அதாவது சமவெளி பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களை டிராபிக் போலீசார் கோத்தகிரி வழியாகத் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.. இதனால் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகன ஓட்டிகள், வழக்கமாக செல்லும் பாதையில் செல்லாமல் கோத்தகிரி வழியாக செல்ல வேண்டியது அவசியமாகிறது. அதேபோல், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வருபவர்களும் குன்னூர் வழியை பயன்படுத்த வேண்டும்.

    Advertisement

    தொடர் விடுமுறை முடியும் வரை இந்த ஒருவழிப் பாதை மாற்றம் அமலில் இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனால் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லத் திட்டமிடுபவர்கள் கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வருபவர்கள் குன்னூர் வழியாகவும் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

    முக்கியமாக, விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு வருபவர்களும், ஊட்டியிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்களும் இந்த வழிமாற்றத்தை கவனத்தில் கொண்டால் தேவையற்ற போக்குவரத்து நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்க முடியும்...!!

    English Summary

    Traffic Diversion on Mettupalayam-Ooty Road in Nilgiris.. What Is the New Route Until the Holidays End?