பிரான்ஸை கைப்பற்ற முஸ்லிம்கள் விரும்புவதாக டிரம்ப் புகார்.. போராட்டத்தில் பாலஸ்தீன் கொடி ஏன்? பின்னணி

  • பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் வன்முறை வெடித்துள்ளது. மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் தெருவில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டம், கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பிரான்ஸை கைப்பற்றி இஸ்லாமியர்கள் துடிப்பதாகவும், அவர்கள் தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்துவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சொன்ன கருத்தும் கவனம் பெற்றுள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:

    Advertisement

    பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான் உள்ளார். தற்போது பிரான்ஸில் பெரிய அளவில் வன்முறை வெடித்துள்ளது. நாட்டின் அடையாளமாக இருக்கும் பல இடங்கள் போராட்டக்காரர்களாக தீப்பற்றி எரிகிறது.

    Advertisement

    இந்த வன்முறை என்பது கடந்த மாத இறுதியில் தொடங்கியது. பிரான்ஸில் உள்ள பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு சரியில்லாதது, என்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்ததால் போராட்டம் தீவிரமானது.

    குறிப்பாக Yellow Vest எனப்படும் ஜிலே ஜான்ஸ் இயக்கத்தில் பங்கேற்றவர்களின் ஆதரவை பெற்றது. இந்த இயக்கம் என்பது அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக 2018 நவம்பர் முதல் 2020 ஜூன் 28 வரை விலைவாசி உயர்வுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள்.

    இவர்கள் மாணவர்களின் பிரச்சனை மட்டுமின்றி விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் போராடினர். அதன்பிறகு தான் போராட்டம் தீவிரமானது. முதலில் பல ஆயிரம் பேர் ரோடுகளில் இறங்கிய போராடிய நிலையில் இந்த எண்ணிக்கை லட்சத்தையும் தொட்டநிலையில் தற்போது பிரான்ஸ் பற்றி எரிகிறது.

    Advertisement

    லிமோஜஸில் நகரின் அடையாளமாக இருக்கும் டவுன் ஹால் தீயிட்டு எரிக்கப்பட்டது. அதேபோல் டவுன்ஹால் கோபுரம் தீயில் கருகி சரிந்து விழுந்தது. லியோனில் நகரில் சுற்றுலா அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. மால், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்பட பல்வேறு கடைகளை உடைத்து உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் அனைத்து பொருட்களையும் அள்ளி சென்றனர். லில்லி நகரில் ஆப்பிள் ேஷாரூம் உள்பட பிற செல்போன் நிறுவனங்களில் கடைகளில் நுழைந்து போன்கள் திருடி செல்லப்பட்டது.

    இந்நிலையில் தான் தற்போது இந்த போராட்டத்தின் பின்னணியில் முஸ்லிம்கள் இருப்பதாகசமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. போராட்டத்தில் சிலர் இஸ்லாமிய நாடுகளான பாலஸ்தீனம், அல்ஜீரியா, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளின் கொடியை பயன்படுத்தி வருவதும், பிரான்ஸில் அதிகளவில் இஸ்லாமியர்கள் குடியேற்றம் செய்யப்பட்டது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று பல நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

    Advertisement

    அதுமட்டுமின்றி இந்த மாதம் தொடக்கத்தின் பிரான்ஸ் போராட்டம் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்து இருந்தார். அவரது கருத்து விவாதம் பெற்றது. இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், ''பிரான்ஸில் நடப்பது கட்டுப்பாட்டைமீறிய குடியேற்றத்தால் நிகழும் நிகழ்வாகும். வேறொன்றும் இல்லை. இது பள்ளிகள் குறித்த விவகாரம் அல்ல. ஒரு காலத்தில் மிகச்சிறந்த நாடாகஇருந்த பிரான்ஸை இஸ்லாம் கைப்பற்ற துடிக்கிறது என்பது தான் இதன் பொருள்'' என்று விமர்சனம் செய்திருந்தார்

    இதனால் இந்த விவகாரங்கள் தற்போது விவாதமாகி உள்ளது. இது உண்மையா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது பிரான்ஸ் நாட்டின் மொத்த மக்கள்தொகை 6.87 கோடியாகும். இங்கு மதச்சார்பின்மை சட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றிய அதிகாரப்பூர்வ டேட்டாக்கள் எதுவும் கிடையாது. இருப்பினும் கூட இங்கு அதிகளவில் கிறிஸ்தவர்கள் தான் .ள்ளனர்.

    Advertisement

    சுமார் 2.94 கோடிமுதல் 3.20 கோடி வரை கிறிஸ்தவர்கள் உள்ளனர். மதமற்றவர்களாக 2.50 கோடி முதல் 3.40 கோடி பேர் உள்ளனர். இஸ்லாமியர்கள் என்பவர்கள் 55 லட்சம் முதல் 68 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் நாட்டின் மக்கள்தொகையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 8-10 சதவீதத்துக்குள் இருக்கலாம்.

    கடந்த 5 ஆண்டுகளில் பிரான்ஸில் சுமார் 5 லட்சம் வெளிநாட்டினர் குடியுரிமை பெற்றுள்ளனர். இதி்ல இஸ்லாமியர்ளின எண்ணிக்கை 1.50 லட்சத்தில் இருந்து 2.25 லட்சம் வரை இருக்கலாம் என யூகிக்கப்படுகினற்னர். இந்த இஸ்லாமியர்களினபெரும்பான்மையானவர்கள்அல்ஜீரியா, மொராக்கோ, துனிசியா, செனகல், மாலி, கினியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது.

    Advertisement

    அதுமட்டுமின்றி பிரான்ஸில் உள்ள இஸ்லாமியர்கள் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் விடுதலைக்கு குரல் கொடுத்து வருகின்றனர். இதற்காக போராட்டங்களையும் நடத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி பாலஸ்தீனம் என்பது அதிகாரம் படைத்தவர்களால் சீரழிக்கப்படுவது போல் பிரான்ஸிலும் இத்தகைய செயல்கள் நடப்பதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி பாலஸ்தீனம் என்பது ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பின் குரலாக மாறி உள்ளதாக கூறி பலரும் இந்த போராட்டத்தில் அந்த நாட்டின் கொடியை பயன்படுத்தி உள்ளதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

    ஆனாலும் பிரான்ஸ் நாட்டில் நடக்கும் போராட்டத்தில் பாலஸ்தீனத்தின் கொடி உள்பட பிற நாடுகளின் கொடிகளை சிலர் உயர்த்தி காட்டுவது சர்ச்சையாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை தூண்டி உள்ளது. இருப்பினும் இந்த போராட்டத்தின் பின்னணியில் குறிப்பிட்ட மதம் அல்லது வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளதாக தற்போது வரை பிரான்ஸ் நாட்டின் அரசோ, காவல்துறையோ அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    France Violence: Violence has erupted in France. Various groups, including students, have taken to the streets to protest against the government, with some incidents escalating into riots. Amidst this, claims are circulating on social media suggesting that Muslims are attempting to seize control of France and are the ones spearheading these protests. Here, we examine the background behind these developments.