இனி பாகிஸ்தான் பைலட்கள் விமானத்தை தொடக்கூட முடியாது.. இஸ்ரேல் செல்லும் விமானங்களுக்கு கட்டுப்பாடு

  • பாரிஸ்: இஸ்ரேலுக்கு வந்து செல்லும் விமானங்களை இயக்குவதில் பாகிஸ்தான் உள்ளிட்ட 31 நாடுகளை சேர்ந்த விமானிகள் மற்றும் விமான பணியாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலுடன் தூதரக உறவுகள் இல்லாத நாடுகளை சேர்ந்த விமான ஊழியர்களுக்கான விதிகளை அந்நாடு கடுமையாக்கியுள்ளது. இதையடுத்து ஏர் பிரான்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளன.

    Advertisement

    கடந்த செப்டம்பர் 30ம் தேதி, துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் மோசமான சம்பவம் நடந்தது. அந்த விமானத்தை கடத்தி, மிக பெரிய தாக்குதலை நடத்த ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி திட்டமிட்டிருந்தார். இருப்பினும், இந்திய பைலட்டின் துணிச்சல் உள்ளிட்ட காரணங்களால் அது முறியடிக்கப்பட்டது.

    Advertisement

    இஸ்ரேல் ரூல்ஸ்

    இதையடுத்து இஸ்ரேல் தனது நாட்டிற்கு வரும் விமானங்களை இயக்கும் பைலட்களின் விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. அதாவது இஸ்ரேலுடன் தூதரக உறவுகள் இல்லாத நாடுகளை சேர்ந்த விமான ஊழியர்கள் விமானத்தில் இருக்கக்கூடாது என்பதே அந்த விதியாகும். ஏற்கனவே இந்த விதிகள் இருந்தாலும் கூட அவை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. இதன் காரணமாகவே தூதரக உறவை கொண்டிருக்காத ஓமனை சேர்ந்தவர் துணை விமானியாக இருந்தார்.

    மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்பதற்காகவே அந்த விதிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்த தொடங்கியுள்ளது இஸ்ரேல். இதையடுத்து ஏர் பிரான்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ், இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்களில் பணியாற்ற கூடாத நாடுகளை சேர்ந்த ஊழியர்களின் பட்டியலை வைத்து அதற்கேற்ப விமானங்களை திட்டமிட ஆரம்பித்துள்ளது..

    Advertisement

    எந்த நாடுகள்

    ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, வங்கதேசம், கியூபா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், குவைத், லெபனான், லிபியா, மலேசியா, மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, சோமாலியா, சூடான், சிரியா, துனிசியா, ஏமன் உள்ளிட்ட 29 நாடுகளை சேர்ந்தவர்களை இஸ்ரேல் விமானங்களில் அனுமதிக்க வேண்டாம் என அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நாடுகளில் இரட்டைக் குடியுரிமை வைத்திருந்தாலும் கூட அவர்களும் இஸ்ரேல் விமானத்தை இயக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    இந்த புதிய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட முதல் விமானமாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் இருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை டெல் அவிவ் நோக்கி சென்ற அந்த விமானத்தில் இந்தோனேசிய விமானி ஒருவர் இருப்பதை அடையாளம் கண்ட இஸ்ரேல் அதிகாரிகள், விமானத்தை திருப்பி அனுப்ப உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement
    பாகிஸ்தான் விமானி இந்தியாவில் விமானம் ஓட்டலாமா? ஃப்ளைதுபாய் சம்பவத்துக்கு பின் எழுந்த முக்கிய கேள்வி

    முதல் விமானம்

    இதையடுத்து எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் விமானி மாற்றப்பட்டார். பின்னர் அந்த விமானம் மீண்டும் புறப்பட்டு டெல் அவிவ் சென்றடைந்தது. இந்தோனேசியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவுகள் இல்லை. இதன் காரணமாகவே விமானத்தை தரையிறங்க விடாமல் இஸ்ரேல் திரும்பி அனுப்பியுள்ளது. அதேநேரம் இந்த விவகாரத்தை தவறு என்று குறிப்பிட்ட எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், இந்த விதிகள் குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறியுள்ளது.

    டெல்லி விமானத்தை கடத்த முயற்சி? ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்! பின்னணி
    Advertisement

    உலக நாடுகள்

    இதற்கிடையே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர் பிரான்ஸும் இந்த விதிகளை அமல்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி பாகிஸ்தான் உட்பட இஸ்ரேல் உடன் தூதரக உறவை கொண்டிருக்காத 31 நாடுகளை சேர்ந்த விமானிகள் மற்றும் விமான பணியாளர்களுக்கு இஸ்ரேலுக்கு வந்து செல்லும் விமானங்களை ஆபரேட் செய்ய முடியாது. இஸ்ரேல் எப்படியும் தனது விதிகளை தளர்த்தாது என்பதால் வரும் நாட்களில் மேலும் பல நிறுவனங்கள் இந்த விதிகளை அமல்படுத்த தொடங்கும் என்றே தெரிகிறது.

    English Summary

    Israel has tightened restrictions on pilots and cabin crew from countries with which it has no diplomatic relations(பைலட்களுக்கு இஸ்ரேல் விதித்த கட்டுப்பாடுகள்): Israel Pilots Restrictions latest news in tamil.