மொத்தம் ரூ.96 கோடி.. பிரசாந்த் கிஷோர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? மனைவியை விட குறைவு தான்

  • பாட்னா: பீகாரில் உள்ள பாங்கிபூர் சட்டசபை தொகுதியின் வேட்பாளராக ஜன் சுராஜ் கட்சியின் தலைவரான முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்த நிலையில் பிரசாந்த் கிஷோரின் சொத்து மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி பிரசாந்த் கிஷோரை விட அவரது மனைவிக்கு தான் அதிக சொத்து உள்ளது உறுதியாகி உள்ளது.

    Advertisement

    கடந்த ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் பாங்கிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நிதின் நபின். இவர் தற்போது பாஜகவின் தேசிய தலைவராக உள்ளார். தேசிய தலைவரானதால் அவர் எம்பி பதவியை ராஜினாமா செய்து பாஜக சார்பில் ராஜ்யசபா எம்பியாகி உள்ளார்.

    Advertisement

    இந்நிலையில் தான் நிதின் நபின் வென்ற பாங்கிபூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொகுதிக்கு வரும் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஆகஸ்ட் 3ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இந்த பாங்கிபூர் சட்டசபை தொகுதியில் ஜன்சுராஜ் கட்சி சார்பில் அதன் தலைவர் பிரசாந்த் கிஷோர் களமிறங்கி உள்ளார். இதற்கான வேட்புமனுவை பிரசாந்த் கிஷோர் தாக்கல் செய்துள்ளார்.

    அதில் பிரசாந்த் கிஷோரின் சொத்து மதிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அவரிடம் மொத்தம் 22.19 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், 73.87 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. இதன்மூலம் அவரது சொத்துமதிப்பு ரூ.96.06 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேவேளையில் பிரசாந்த் கிஷோரை விட அவரது மனைவி ஜானவி தாஸ் அதிக சொத்துகளை வைத்துள்ளார். இவர் தற்போது அசாமில் டாக்டராக உள்ள நிலையில் அவரிடம் மொத்தம் ரூ.102 கோடிக்கு சொத்துகள் உள்ளன. இதில் 89.51 கோடிக்கு அசையும் சொத்துகளும், 12.42 கோடிக்கு அசையா சொத்துகளும் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பல கட்சிகளுக்கும் பணியாற்றி உள்ளார். பாஜக, காங்கிரஸ், நிதிஷ் குமாரின் ஜேடியூ, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி, முக ஸ்டாலினின் திமுக, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து கொடுத்து ஆட்சியில் அமர வைத்துள்ளார். இந்த வியூகங்களுக்காக அவரது நிறுவனம் பல நூறு கோடிகளை பெற்றதாக கூறப்படும் நிலையில் பிரசாந்த் கிஷோர் தன்னிடம் ரூ.96 கோடி மட்டுமே சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மேலும் பிரசாந்த் கிஷோர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தாலும் கூட அவர் இன்னும் ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடவில்லை. இதுதான் அவர் முதல் தேர்தல் ஆகும். இதில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடவில்லை. 243 தொகுதிகளில் 238 இடங்களில் பிரசாந்த் கிஷோர் வேட்பாளர்களை அறிவித்தார். இதில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. மாறாக 236 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அவரது கட்சி 3.4 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது. இதனால் கட்சிக்கு புத்துணர்வு அளிக்க பிரசாந்த் கிஷோர் நேரடியாக களமிறங்கி உள்ளார்.

    பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக ஆலோசகராக செயல்பட்டு ஆட்சியை பிடிக்க உதவிய பிரசாந்த் கிஷோர் இப்போது வெல்வாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உண்மையில் இந்த தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வெல்வது எளிதான காரியமாக இருக்காது. ஏனென்றால் இந்த தொகுதி பாஜகவின் கோட்டையாகும். கடந்த 2010, 2015, 2020, 2025 என்று மொத்தம் 4 தேர்தலில் தற்போதைய பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபின் தான் வெற்றி பெற்றார். இது அவரது கோட்டையாகும்.

    Advertisement

    கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் பாஜகவின் நிதின் நபின் மொத்தம் 98,299 வாக்குகள் பெற்றார். ஆர்ஜேடி கட்சியின் ரேகா குமாரி 46,363 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார். இதனால் நிதின் நபின் சுமார் 51,936 வாக்குகள் வாங்கி அமோக வெற்றி பெற்றார். இந்த முறையும் நிதின் நபின் நேரடியாக இந்த தொகுதியில் தேசிய தலைவராக வியூகம் வகுக்க உள்ளதால் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

    English Summary

    Prashant Kishor, the former election strategist and leader of the Jan Suraaj party, is contesting as a candidate from the Bankipur Assembly constituency in Bihar. Following the filing of his nomination papers, details regarding his assets-among other information-have been revealed; these details confirm that his wife possesses greater assets than he does.